Alkof dx Syrup Uses in Tamil
நாம் ஒவ்வொருவருமே நம் உடலில் ஏதேனும் உடல்நிலை சரியில்லை என்றால் அதற்கான மருந்துகளை எடுத்துகொல்வது வழக்கம். அப்படி மருந்துகள் எடுத்துக்கொள்ளும்போது, நாம் உட்கொள்ளும் மருந்து எதற்கெல்லாம் மருந்தாக பயன்படுகிறது.? இம்மருந்தினால் ஏதேனும் பக்கவிளைவுகள் ஏற்படுமா.? இம்மருந்தை யாரெல்லாம் உட்கொள்ளலாம் யாரெல்லாம் உட்கொள்ளக்கூடாது.? உள்ளிட்ட விவரங்களை அறிந்து கொள்வது மிகவும் அவசியம்.
அந்த வகையில், நீங்கள் Alkof dx சிரப் பயன்படுத்தி வருகிறீர்கள் என்றால் அம்மருந்தின பயன்கள் மற்றும் பக்கவிளைவுகள் பற்றி இப்பதிவில் பின்வருமாறு படித்து தெரிந்து கொள்ளுங்கள்.
குறிப்பு: மருத்துவரின் அறிவுரை இல்லாமல் எந்த மாத்திரையும் நீங்களாக பயன்படுத்த கூடாது..!
Uses and Side Effects of Alkof dx:
பயன்கள்:
அல்கோஃப் சிரப் (Alkof Syrup) என்பது, அரிப்பு, தும்மல், இருமல், காய்ச்சல், சளி, மூக்கடைப்பு மற்றும் நீர்த்த கண்கள் போன்றவற்றிற்கு மருந்தாக அளிக்கப்படுகிறது. மேலும், இம்மருந்து படை நோய் காரணமாக உடலில் உண்டாகும் வீக்கம், அரிப்பு உள்ளிட்ட பிரச்சனைகளுக்கும் மருந்தாக கொடுக்கப்படுகிறது.
- வறண்ட இருமலை தணிக்க உதவுகிறது.
- சளி மற்றும் இருமல் காரணமாக ஏற்படும் தொந்தரவுகளை குறைக்கிறது.
- ஆஸ்துமா நோயாளிகளில் இருமல் மற்றும் மூச்சுத் திணறலை குறைக்க உதவுகிறது.
- அலர்ஜி காரணமாக ஏற்படும் இருமலை குறைக்கும்.
- தொண்டையில் ஏற்படும் வறட்சியை தணிக்க உதவுகிறது.
- பாக்டீரியா அல்லது வைரஸ் தொற்றால் ஏற்படும் இருமலை குறைக்கும்.
- மூக்கடைப்பை சரிசெய்து மூச்சை வசதியாக விடுவிக்க உதவுகிறது.
Disodium Hydrogen Citrate சிரப்பின் பயன்கள்!
பக்க விளைவுகள்:
அல்கோஃப் சிரப் ஆனது, ஒரு சிலருக்கு பின்வரும் பக்கவிளைவுகளை ஏற்படுத்தலாம். ஆகையால், இதுபோன்ற பக்கவிளைவுகள் ஏதும் ஏற்படின் உடனே மருத்துவரை அணுக வேண்டும்.
- பார்வை மங்களாகுதல்.
- வாய் உலர்தல்
- தூக்கக்கலக்கம்
- வயிற்றுப்போக்கு
- வாந்தி
- குமட்டல்
- ஒழுங்கற்ற இதய துடிப்பு
- சுவாசிப்பதில் சிரமம்
- தோல் தடித்தல்
- தலைசுற்றல்
- மயக்க நிலை
சிறப்பம்சம்:
இம்மருந்து ஆனது தொடர்ந்து 24 மணிநேரம் வரை உடலில் வேலை செய்கிறது. முக்கியமாக, இம்மருந்தை உட்கொண்ட 1 மணிநேரத்திற்குள் விளைவை பெறமுடிகிறது.
யாரெல்லாம் பயன்படுத்தக்கூடாது.?
- உங்களுக்கு ஏற்கனவே ஏதேனும் அழற்சி பிரச்சனைகள் இருந்தால் இம்மருந்தை எடுத்து கொள்ளக்கூடாது.
- சிறுநீரக நோய் உள்ளவர்கள் இம்மருந்தை பயன்படுத்தக்கூடாது.
- தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் இம்மருந்தை உட்கொள்ளக்கூடாது.
டி புரோட்டீன் பவுடரின் நன்மைகள் மற்றும் பக்கவிளைவுகள்..!
இதுபோன்ற மருந்து மாத்திரைகளின் பயன்கள் மற்றும் பக்கவிளைவுகள் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | மருந்து |