Allegra 120 மாத்திரையின் பயன்கள் மற்றும் பக்க விளைவுகள்..!

Advertisement

Allegra 120 Tablet Uses in Tamil

நமக்கு ஏதேனும் பிரச்சனை இருந்தால் அதாவது உடல் ரீதியாக பிரச்சனை இருந்தால் உடனே நாம் செல்வது மருந்தகம் தான். அங்கு சென்று நமக்கு என்ன செய்கிறதோ அதனை சொல்லி அதற்கு ஏற்ற மருந்து மாத்திரைகளை வாங்கி வந்து சாப்பிடுவோம்.! ஆனால் அங்கு தரும் மாத்திரைகள் சரியானதா என்று எப்படி தெரிந்து கொள்வீர்கள். அல்லது சாப்பிடும் மாத்திரை எதற்காக என்று உங்களுக்கு தெரியுமா..?

அது சரியான மாத்திரையா அல்லது அதற்கு கொடுத்த விதிமுறைகள் சரியானதா என்று எப்படி தெரிந்து கொள்வீர்கள். உடனே மாத்திரையின் பக்கம் பார்ப்பீர்கள் அனைத்து மாத்திரையிலும் கடைசி தேதி அல்லது அதனை தயாரித்த தேதிகள்  இருக்கா என்று பார்ப்பீர்கள். ஆனால் அதில் இருக்காது ஏனென்றால், நமக்கு அளிக்கும் மாத்திரை 2 அல்லது 3 தான் கொடுப்பார்கள். அதில் பாதி தான் இருக்கும் பாதி இருக்காது.

அப்போது நாம் என்ன செய்வது. முன்பு நமக்கு அந்த அளவிற்கு விவரம் தெரியாது. ஆனால் இப்போது அப்படி இல்லை. உலகமே நமது கையில் தான் உள்ளது. அதில் உங்களுக்கு கொடுக்கும் மாத்திரையின் பெயரை போட்டால் அது எதற்கானது என்று தெளிவாக தெரியும்..! ஆகவே இன்று நாம் இந்த பதிவின் வாயிலாக தெரிந்துகொள்வது என்னவென்றால் Allegra 120 மாத்திரையின் பயன்கள் மற்றும் பக்கவிளைவுகளை பற்றி தெரிந்துகொள்ள போகிறோம்..!

குறிப்பு:- எந்த மருந்து மாத்திரையும் மருத்துவரின் பரிந்துரை இல்லாமல் சாப்பிடுவதை தவிர்க்கவும். 

Allegra 120 Tablet Uses in Tamil:

அலெக்ரா 120 மிகி மாத்திரை 10 -கள் ஆன்டிஹிஸ்டமைன் அல்லது ஒவ்வாமை எதிர்ப்பு எனப்படும் மருந்துகளின் வகையைச் சேர்ந்தது. இந்த மாத்திரை பல்வேறு வகையான ஒவ்வாமைக்கு சிகிச்சை அளித்து வருகிறது. அலெக்ரா 120 மிகி மாத்திரை 10’ல் ஃபெக்ஸோஃபெனாடின், தூக்கமில்லாத ஆன்டிஹிஸ்டமைன் உள்ளது. இந்த மாத்திரை துக்கத்தை ஏற்படுத்துவது கடினம் தான்.

இந்த மாத்திரையை பற்றி தெரியுமா..? ரெஜெஸ்ட்ரோன் மாத்திரை பயன்கள் மற்றும் பக்க விளைவுகள்..!

Allegra 120 மாத்திரை பரவலாக வைக்கோல் காய்ச்சல் (மகரந்தம் அல்லது தூசியால் ஏற்படும் ஒவ்வாமை), வெண்படல அழற்சி (சிவப்பு, அரிப்பு கண்), அரிக்கும் தோலழற்சி (தோல் அழற்சி), படை நோய் (சிவப்பு, உயர்த்தப்பட்ட திட்டுகள் அல்லது புள்ளிகள்), பூச்சி கடித்தால் ஏற்படும் எதிர்வினைகள் மற்றும் கடித்தல் மற்றும் சில உணவு ஒவ்வாமை என அனைத்தையும் சரி செய்ய உதவி புரிகிறது.

Allegra 120 Tablet Side Effects in Tamil:

உடம்பு சரியில்லை (குமட்டல்), தூக்கம் வருகிறது, தலைவலி, வறண்ட வாய், தலை சுற்றுகிறது. இதில் எது உங்களுக்கு ஏற்பட்டாலும் உடனே மாத்திரையை பரிந்துரை செய்த மருத்துவரிடம் சென்று ஆலோசனை பெறவும்.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
Xirtam H Tablet 10 மாத்திரையின் நன்மைகள் மற்றும் பக்கவிளைவுகளை தெரிந்து கொள்வோம்..!

இதுபோன்ற மருந்து மாத்திரைகளின் பயன்கள் மற்றும் பக்கவிளைவுகள் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> மருந்து
Advertisement