Almox 250 Tablet Uses in Tamil
மனிதனாக பிறந்த அனைவருமே உடல்நிலை சரியில்லை மருத்துவரை நாடி செல்கின்றோம். மருத்துவரும் அவர்களின் உடம்பில் உள்ள பிரச்சனைக்கு ஏற்றவாறு மருந்து மாத்திரைகளை பரிந்துரைக்கிறார். சில நபர்களுக்கு உடம்பில் உள்ள நோய்களுக்கு வாழ்நாள் முழுவதும் மருந்து, மாத்திரை எடுத்து கொள்ள வேண்டிய அவசியம் ஏற்படுகிறது. வாழ்நாள் முழுவதும் மாத்திரை மருந்து எடுத்து கொண்டால் அந்த மாத்திரையினால் நன்மைகள் மட்டும் தான் கிடைக்கிறது என்று எண்ண கூடாது. ஏனென்றால் நாம் சாப்பிடும் மாத்திரைகளால் நமக்கு சில பக்க விளைவுகளையும் ஏற்படுத்தும். அதனால் நீங்கள் சாப்பிடும் எல்லா மாத்திரைகளின் நன்மைகள் மற்றும் பக்க விளைவுகள் இரண்டையும் அறிந்து கொள்ள வேண்டும். அந்த வகையில் இன்றைய பதிவில் Almox 250 மாத்திரையின் பயன்கள் மற்றும் பக்க விளைவுகளை தெரிந்து கொள்வோம்.
குறிப்பு: மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் எந்த மாத்திரையும் வாங்கி தானாக பயன்படுத்த கூடாது..!
Almox 250 Tablet Uses in Tamil:
அல்மாக்ஸ் மாத்திரை சுவாச பாதை, நுரையீரல், தொண்டை மற்றும் சிறுநீர் பாதையில் ஏற்படும் தொற்றுகளை சரி செய்வதற்கு மருந்தாக கொடுக்கப்படுகிறது.
Almox 250 Tablet Side Effects:
- குமட்டல்
- வாந்தி
- வயிற்றுபோக்கு
- தோல் வடிப்பு
- தோல் அரிப்பு
மேல் கூறப்பட்டுள்ள பக்க விளைவுகள் தொடர்ந்து இருந்தால் மருத்துவரை அணுக வேண்டும். இந்த பக்க விளைவுகள் இல்லாமல் வேறு ஏதேனும் பக்க விளைவுகள் தொடர்ந்து ஏற்பட்டாலும் மருத்துவரை சந்தித்து ஆலோசனை பெற வேண்டும்.
Chymowok Forte மாத்திரையின் பயன்கள் மற்றும் பக்க விளைவுகள் |
முன்னெச்சரிக்கை:
கர்ப்பமாக இருக்கும் பெண்கள் அல்மாக்ஸ் மாத்திரையை மருத்துவர் ஆலோசனை இல்லாமல் எடுத்து கொள்ள கூடாது.
தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்கள் அல்மாக்ஸ் மாத்திரையை எடுத்து கொள்ள கூடாது. ஏனென்றால் அல்மாக்ஸ் மாத்திரை தாய்ப்பாலுக்குள் செல்கிறது. அதனால் நீங்கள் இந்த மாத்திரையை மருத்துவர் ஆலோசனை இல்லாமல் எடுத்து கொள்ள கூடாது.
அல்மாக்ஸ் மாத்திரை எடுத்து கொள்ளும் போது உங்களுக்கு தலைச்சுற்றல் ஏற்பட்டால் வாகனம் ஓட்டுவதை தவிர்க்க வேண்டும்.
நீங்கள் வேறு ஏதும் பிரச்சனைக்கு மருந்து, மாத்திரை எடுத்து கொண்டால் அதனை பற்றிய முழு தகவலையும் மருத்துவரிடம் தெரிவிக்க வேண்டும்.
மாத்திரை எப்படி வேலை செய்கிறது:
அல்மாக்ஸ் மாத்திரை செல்கள் உருவாகும் நொதியின் செயலை தடுக்கிறது. இதனால் நோய்த்தொற்றுக்கு காரணமான பாக்டீரியாக்களின் வளர்ச்சி மற்றும் பெருக்கத்தை தடுக்கிறது.
மாத்திரை சாப்பிடும் முறை:
மாத்திரையை டீ, காபி அல்லது நசுக்கியோ எடுத்துக்கொள்ள கூடாது. தண்ணீருடன் மட்டும் தான் இந்த மாத்திரையினை மருத்துவர் கூறிய அளவில் எடுத்துக்கொள்ள வேண்டும்.
Baclofen மாத்திரையின் பயன்கள் மற்றும் பக்க விளைவுகள் |
இதுபோன்ற மருந்து மாத்திரைகளின் பயன்கள் மற்றும் பக்கவிளைவுகள் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | மருந்து |