அல்ப்பிரசோலம் மாத்திரையை பயன்படுத்துவதற்கு முன்னால் இதை கண்டிப்பாக தெரிஞ்சிக்கோங்க..!

Advertisement

Alprazolam Tablet Uses in Tamil

உலகில் இன்றைய காலகட்டத்தில் அதிகரித்து கொண்டு வரும் சுற்றுசூழல் மாசுபாடு மற்றும் முறையற்ற வாழ்க்கை முறை ஆகியவற்றால் சிறியவர் முதல் பெரியவர் அனைவருக்குமே ஏதாவது ஒரு உடல் நல குறைபாடு ஏற்படுகிறது. அதனால் அதனை சரி செய்வதற்கு உதவும் மருந்துகள் மிகவும் முக்கியமான ஒரு விஷயமாகும். இந்த மருந்துகளை ஒரு சிலர் தாமாகவே மருந்து கடைகளுக்கு சென்று வாங்கி சாப்பிடுவார்கள் அது தவறான ஒரு விஷயமாகும். அப்படி மிகவும் அவசரமான சூழலினால் நீங்கள் கடையில் சென்று மருந்து வாங்க வேண்டும் என்றாலும் நீங்கள் வாங்கும் மருந்து உங்களின் நோய்க்கு சரியான தீர்வாக இருக்குமா என்பதை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.

அதனால் தான் நமது பதிவின் வாயிலாக நமது பதிவின் மூலம் தினமும் ஒரு மருந்து பற்றிய முழு விவரங்களையும் கூறிக்கொண்டு வருகின்றோம் அந்த வரிசையில் இன்றைய பதிவில் அல்ப்பிரசோலம் மாத்திரையை எந்தெந்த பிரச்சனைக்காக பயன்படுத்தபடுகிறது. மேலும் இந்த மாத்திரையை சாப்பிடுவதால் ஏற்படும் பக்கவிளைவுகள் என்னென்ன என்பதையெல்லாம் பற்றி விரிவாக காண இருக்கின்றோம்.

குறிப்பு: மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் எந்த மாத்திரையும் வாங்கி தானாக பயன்படுத்த கூடாது..!

குளோனாசெபம் மாத்திரையை பயன்படுத்துவதற்கு முன்னால் இதை கண்டிப்பா தெரிஞ்சிக்கோங்க

Alprazolam Tablet Uses in Tamil:

Alprazolam Tablet Side Effects in Tamil

இந்த அல்ப்பிரசோலம் மாத்திரையானது மனஅழுத்தத்தை காரணமாக ஏற்படும் பதட்டத்தை குறைக்க பரிந்துரைக்கப்படுகிறது. இந்த மாத்திரை பென்சோடையாசோஃபின் என்ற மருந்து குழுவை சேர்ந்தது.

இந்த குழுவை சேர்ந்த மருந்துகள் பொதுவாக மூளை மற்றும் மைய நரம்பு மண்டலத்தை அமைதிப்படுத்தி, பீதியைத் தடுக்கும் வகையில் வேலை செய்கின்றன.

அதேபோல் இந்த அல்ப்பிரசோலம் மாத்திரையானது மனச்சோர்வில் அவதியுறும் நோயாளிகளிடம் மூளையில் வெளியிடப்படும் சில சமநிலையற்ற வேதிப்பொருள்களை கட்டுப்படுத்துவதன் மூலம் செயல்படுகிறது.

இதனை மருத்துவர் அளித்த அளவை விட அதிகமாகவோ அல்லது குறைவாகவோ எடுத்து கொள்ள கூடாது. அப்படி எடுத்து கொண்டால் இது உங்களுக்கு பல பக்க விளைவுகளை அளிக்கும் வாய்ப்புள்ளது.

Alprazolam Tablet Side Effects in Tamil:

  • வழக்கத்திற்கு மாறான சோர்வு
  • பசியின்மை
  • மலச்சிக்கல்
  • தூக்கம்
  • மயக்கம் 
  • குமட்டல் 
  • தலைவலி
  • மங்கலான பார்வை
  • வயிற்றுப்போக்கு 
  • வாந்தி 

அல்ப்பிரசோலம் மாத்திரையை பயன்படுத்துவதால் மேலே குறிப்பிட்டுள்ள பக்க விளைவுகள் ஏற்படும் வாய்ப்புள்ளது.

Vomikind சிரப்பினை பயன்படுத்துவதற்கு முன்னால் இதை கண்டிப்பா தெரிஞ்சிகோங்க

முன்னெச்சரிக்கை:

இந்த அல்ப்பிரசோலம் மாத்திரை அடிக்கடி உட்கொண்டால், மருந்துக்கு அடிமை ஆகலாம் அதனால் மருத்துவர் பரிந்துரை செய்தபடி மட்டுமே உட்கொள்ளுங்கள்.

இந்த மருந்தினை பயன்படுத்துவதற்கு முன்பாக மருத்துவரிடம் உங்கள் தற்போதைய மருந்துகள் பட்டியல் பற்றி கூறி அவரின் ஆலோசனையை பெறுவது நல்லது.

கர்ப்பிணிப் பெண்களோ தாய்பால் அளிக்கும் பெண்களோ இந்த மருந்தினை எடுத்து கொள்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனையை பெற வேண்டும்.

இந்த மருந்தினை எடுத்து கொள்ளும் பொழுது மது அருந்த கூடாது.

குறிப்பு: இங்கே கொடுக்கப்பட்ட தகவல்கள் மருந்தின் உப்பு உள்ளடக்கத்தை அடிப்படையாக கொண்டவை. மருந்தின் பயன்கள் மற்றும் பக்க விளைவுகள் ஒவ்வொரு நபருக்கும் மாறுபடும்.

Dolopar மாத்திரையை பயன்படுத்துவதற்கு முன்னால் இதை தெரிஞ்சிகோங்க

இதுபோன்ற மருந்து மாத்திரைகளின் பயன்கள் மற்றும் பக்கவிளைவுகள் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> மருந்து

 

Advertisement