Ambrodil Syrup Uses in Tamil
நம் முன்னோர்களில் காலத்தில் உடல்நிலை ஏதும் உடல்நிலை குறைபாடு ஏற்பட்டால் அதனை சரி செய்வதற்கு வீட்டில் உள்ள மூலிகை செடிகளை பயன்படுத்தினார்கள். அதாவது சளி மற்றும் இருமல் பிரச்சனை இருந்தால் துளசி கஷாயம் வைத்து குடிப்பார்கள். இதனால் எந்த பக்க விளைவுகளும் ஏற்படாது. அது போல சளி இருமல் பிரச்சனைக்கு மட்டுமில்லை உடலில் அரிப்பு, காயம் போன்றவை ஏற்பட்டாலும் கை வைத்தியம் செய்து கொண்டார்கள். ஆனால் இன்றைய காலத்தில் சின்னதாக உடலில் ஏதும் பிரச்சனை ஏற்பட்டால் ஆங்கில மருந்துகள் தான் எடுத்து கொள்கின்றனர். இதனால் நம் உடலில் பக்க விளைவுகளை ஏற்படுத்தும். அதனால் நீங்கள் சாப்பிடும் மாத்திரைகளாக இருந்தாலும் சரி, சிரப் மற்றும் ஆயிண்ட்மென்ட் ஆக இருந்தாலும் சரி அதிலுள்ள நன்மைகள் மற்றும் தீமைகளை அறிந்து கொண்டு சாப்பிட வேண்டும். அந்த வகையில் இன்றைய பதிவில் Ambrodil சிரப் நன்மைகள் மற்றும் தீமைகளை அறிந்து கொள்வோம்.
குறிப்பு: மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் எந்த மாத்திரைமற்றும் ஊசி போன்றவற்றை தானாக வாங்கி பயன்படுத்த கூடாது..!
Ambrodil Syrup Uses:
இந்த சிரப் ஆனது எதற்காக பயன்படுத்தப்படுகிறது என்பதை கீழே பதிவிட்டுள்ளோம். அதை பார்த்து தெரிந்து கொள்ளவும்.
- இருமல்
- ஆஸ்துமா
- மூச்சுக்குழாய் அலர்ஜி
- வறட்டு இருமல்
மேல் கூறப்பட்டுள்ள பிரச்சனைக்ளுக்கு மருந்தாக கொடுக்கபடுகிறது. அதற்கான மருத்துவர் ஆலோசனை இல்லாமல் இந்த சிரப்பினை வாங்கி பயன்படுத்த கூடாது.
Levipil மாத்திரை எதற்காக பயன்படுத்தப்படுகிறது
பக்க விளைவுகள்:
இந்த சிரப் குடிப்பதால் ஏற்படும் பக்க விளைவுகளை அறிந்து கொள்வோம்.
குமட்டல்
உணவின் சுவை தெரியாமல் இருத்தல்
நெஞ்செரிச்சல்
வாய், நாக்கு, தொண்டை போன்றவற்றில் உணர்வு இல்லாமல் இருப்பது
மேல் கூறப்பட்டுள்ள பக்க விளைவுகள் தொடர்ந்து இருந்தால் மருத்துவரை அணுகி ஆலோசனை பெற வேண்டும். அது போல மேல் கூறப்பட்டுள்ள பக்க விளைவுகள் இல்லாமல் வேறு ஏதேனும் பக்க விளைவுகள் நீங்கள் சந்தித்தாலும் மருத்துவரிடம் ஆலோசனை பெற வேண்டியது அவசியமானது.
முன்னெச்சரிக்கை:
இந்த சிரப்பை கர்ப்பமாக இருக்கும் பெண்கள் எடுத்து கொண்டால் அதிகம் பக்க விளைவுகள் ஏற்படுகிறது, அதனால்இதனை மருத்துவர் ஆலோசனை இல்லாமல் எடுத்து கொள்வதை தவிர்க்க வேண்டும்.
தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்கள் இந்த சிரப்பை எடுத்து கொள்ளும் போது அதிக பக்க விளைவுகளை ஏற்படுத்தும். அதனால் இந்த சிரப்பை நீங்கள் குடிப்பதை தவிர்க்க வேண்டும்.
உங்களுக்கு சிறுநீரகம், கல்லீரல், இதயம் சம்மந்தப்பட்ட பிரச்சனைகள் இருந்தால் அதனை பற்றிய முழு விவரத்தையும் மருத்துவரிடம் தெரிவிக்க வேண்டும்.
நீங்கள் வேறு ஏதேனும் பிரச்சனைக்காக மருந்து மாத்திரை எடுத்து கொண்டால் அதனை பற்றிய முழு விவரத்தையும் மருத்துவரிடம் தெரிவிக்க வேண்டும்.
மருந்தளவு:
மருத்துவர் கூறிய அளவில் தான் ambrodil சிரப்பை எடுத்து கொள்ள வேண்டும். ஒருவேளை நீங்கள் இந்த சிரப்பை எடுத்து கொள்ள மறந்து விட்டால் அதனை சரி செய்வதற்கு கொடுத்த அளவை விட அதிகமாக சாப்பிட கூடாது.
Fentanyl இன்ஜெக்ஷன் எதற்காக பயன்படுத்தப்படுகிறது
இதுபோன்ற மருந்து மாத்திரைகளின் பயன்கள் மற்றும் பக்கவிளைவுகள் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | மருந்து |