Ambrolite S Syrup Uses in Tamil
நம்முடைய உடலை எப்போதும் ஆரோக்கியமாகவும், என்றும் சுறுசுறுப்பாகவும் வைத்து இருக்க வேண்டும் என்று நினைத்தாலும் கூட அது நம்மால் முடிவது இல்லை. அதுவும் மற்ற நேரங்களை விட மழைக்காலத்தில் காய்ச்சல், சளி, இருமல், தும்மல் என இதுபோன்ற பிரச்சனைகள் அதிகமாக வரக்கூடும். ஆகையால் இவற்றை எல்லாம் நமது உடலில் வராமல் இருக்க வேண்டும் என்று நினைப்பதை போலவே, நமது உடலில் ஏற்படும் சின்ன சின்ன பிரச்சனைகளாக இருந்தாலும் கூட அது சரி ஆக வேண்டும் என்று சிரப் முதல் மாத்திரை வரை என எதனை எடுத்துக்கொண்டாலும் அதில் உள்ள பயன்கள் என்ன பக்க விளைவுகள் என்ன என்பதை பார்க்க வேண்டும். ஆகவே இன்று Ambrolite S சிரப்பின் பயன்கள் மற்றும் பக்க விளைவுகள் என்ன என்பதை தெரிந்துக்கொள்ளலாம் வாங்க..!
குறிப்பு: மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் எந்த மாத்திரையும் வாங்கி தானாக பயன்படுத்த கூடாது..!
Ambrolite S சிரப்பின் பயன்கள்:
Ambrolite S சிரப்பின் பயன்கள் அனைத்தும் கீழே வரிசைப்படுத்தப்பட்டுள்ளது.
- இருமல்
- ஆஸ்துமா
- சளி
- தொண்டையில் புண்
- மூச்சுக்குழாயில் அலர்ஜி
- சுவாசக்குழாய் தொற்றுநோய்
இவை அனைத்திற்கும் இந்த சிரப் ஆனது பயனுள்ளதாக இருந்தாலும் கூட மருத்துவர் கூறிய அளவில் மட்டுமே எடுத்துக்கொள்வது மிகவும் நல்லது. ஆகவே அவ்வாறு செய்யாமல் மருத்துவர் கூறிய அளவை விட கூடவோ, குறைவாகவோ எடுத்துக்கொள்ள கூடாது.
மேலும் ஆண்கள் மற்றும் பெண்கள் என இருவருக்கும் வயது மற்றும் நோயின் அடிப்படையினை வைத்தே மருந்தின் அளவானது அளிக்கப்படுகிறது.
Ambrolite S Syrup Side Effects:
மருந்துகள் என்பது உடலுக்கு நன்மை தரக்கூடியதாக இருந்தாலும் கூட அதில் பக்க விளைவுகள் என்பது இருந்து கொண்டு தான் உள்ளது. அந்த வகையில் Ambrolite S சிரப்பின் பக்க விளைவுகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
- வயிற்றுப்போக்கு
- மூச்சு விடுவதில் சிரமம்
- சிறுநீர் கழிப்பதில் பிரச்சனை
- நெஞ்சரிச்சல்
- தலைவலி
- குமட்டல்
- வாந்தி
- மலச்சிக்கல்
- அரிப்பு
இத்தகைய பக்க விளைவுகள் இல்லாமல் வேறு ஏதாவது உங்களுக்கு தோன்றினாலும் அதனை உடனே மருத்துவரிடம் கூற வேண்டும்.
யாருக்கேல்லாம் முன்னெச்சரிக்கை:
கர்ப்பிணி பெண்கள், தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள், சிறுநீரகம் மற்றும் கல்லீரல் பிரச்சனை உள்ளவர்கள் என இவர்கள் அனைவரும் முன்னேசரிக்கையுடன் இருக்க வேண்டும்.
Clobeta gm மருந்தின் பயன்கள் மற்றும்பக்க விளைவுகள்
இதுபோன்ற மருந்து மாத்திரைகளின் பயன்கள் மற்றும் பக்கவிளைவுகள் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | மருந்து |