Amoxicillin Uses in Tamil
இன்றைய காலகட்டத்தில் உள்ள சுற்றுசூழல் மாசுபாடு மற்றும் முறையற்ற வாழ்க்கையால் சிறிய குழந்தை முதல் பெரியவர் வரை அனைவருக்குமே பலவகையான உடல்நல பிரச்சனை ஏற்படுகிறது. அதனால் அதனை சரிசெய்ய உதவும் மருந்துகளின் எண்ணிக்கையும் அதிகரித்துவிட்டது. இப்பொழுது நமக்கு திடீரென்று உடல்நல குறைபாடு ஏற்படுகிறது நம்மால் மருத்துவரிடமும் செல்ல முடியாத சூழல். இப்பொழுது நீங்கள் என்ன செய்வீர்கள் உங்கள் வீட்டிற்கு அருகில் உள்ள மருந்து கடைக்கு சென்று மருந்து வாங்கி உட்கொள்வீர்கள். அப்படி நீங்கள் வாங்கி உட்கொள்ளும் மருந்து உங்களின் உடல்நல குறைபாட்டுக்கு ஏற்ற மருந்துதான இல்லையா என்பதை எவ்வாறு அறிந்து கொள்வீர்கள். அதனால் தான் நமது மருந்து பதிவின் வாயிலாக தினமும் ஒரு மருந்து பற்றிய முழுவிவரங்களை அறிந்து கொண்டு வருகின்றோம். அந்த வரிசையில் இன்றைய பதிவில் அமோக்ஸிசிலின் மருந்தின் பயன்பாடுகள் மற்றும் பக்க விளைவுகளை அறிந்து கொள்வோம் வாங்க.
குறிப்பு: மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் எந்த மாத்திரையும் வாங்கி தானாக பயன்படுத்த கூடாது..!
செடிரிசின் ஹைட்ரோகுளோரைடு மாத்திரையை பயனப்டுத்துவதற்கு முன்னால் அதனை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்
Amoxicillin Uses in Tamil:
இந்த அமோக்ஸிசிலின் மருந்தானது பென்சிலின் வகையை சேர்ந்த ஒரு ஆண்டிபயாடிக் மருந்து ஆகும். அதாவது பாக்டீரியா தொற்று, ஈறுகளில் இன் பாக்டீரியல் தொற்று, தோல் பாக்டீரிய நோய்த்தொறுகள், சிறுநீர் பாதை இன் பாக்டீரியல் தொற்று மற்றும் சுவாசக்குழாய் பாக்டீரியா தொற்று போன்றவற்றிக்கு சிகிச்சை அளிக்கும்.
இது உடலில் பாக்டீரியாவின் வளர்ச்சியை தடுத்து நிறுத்துவதன் மூலம் இது செயல்படுகிறது. இது மாத்திரை மற்றும் சிரப் வடிவத்திலும் கிடைக்கிறது.
இதனை ஒவ்வொரு 8 அல்லது 12 மணி நேரத்திற்கும் ஒருமுறை உங்கள் மருத்துவர் பரிந்துரைப்படி உணவுடன் அல்லது உணவு இல்லாமல் இந்த மருந்தை வாய்வழியாக எடுத்துக் கொள்ளுங்கள்.
இந்த மாத்திரையில் பல மி.லி அளவுகள் இருப்பதால் மருத்துவர் அளித்த அளவினை மட்டும் உட்கொள்ளுங்கள் மாறாக மருத்துவர் அளித்த அளவினை விட அதிகமாகவோ அல்லது குறைவாகவோ உட்கொண்டால் பல பக்க விளைவுகளை சந்திக்க நேரிடும்.
கால்சியம் லாக்டேட் மாத்திரையை பயன்படுத்துபவரா நீங்கள் அப்போ இதை தெரிஞ்சிக்காம இருந்தால் எப்படி
Amoxicillin Side Effects in Tamil:
- வலி
- குமட்டல்
- வாந்தி
- வயிற்றுப்போக்கு
- இரத்த சோகை
- குழப்பம்
- வலிப்பு
- தலைவலி
அமோக்ஸிசிலின் மருந்தினை பயன்படுத்துவதால் மேலே கூறப்பட்டுள்ள பக்கவிளைவுகளை ஏற்படலாம். இந்த விளைவுகள் ஏதேனும் நீடித்தால் அல்லது மோசமாகிவிட்டால், உடனடியாக உங்கள் மருத்துவரிடம் செல்லுங்கள்.
முன்னெச்சரிக்கை:
இந்த Amoxicillin மருந்தினை பயன்படுத்துவதற்கு முன்னால் உங்களது தற்போதைய மருந்து பட்டியலை மருத்துவரிடம் தெரிவிக்க வேண்டும்.
அதிலும் குறிப்பாக உங்களுக்கு குறிப்பாக: சிறுநீரக நோய் , ஒரு குறிப்பிட்ட வகை வைரஸ் தொற்று (தொற்று மோனோநியூக்ளியோசிஸ்) இருந்தாலும் இந்த Amoxicillin மருந்தினை பயன்படுத்துவதற்கு முன்னால் உங்களின் மருத்துவரின் ஆலோசனையை பெற்று கொள்ளுங்கள்.
அதேபோல் நீங்கள் கர்பமாகவோ அல்லது தாய்ப்பால் அளித்து கொண்டிருக்கும் தாய் என்றால் நீங்கள் இந்த மருந்தினை எடுத்து கொள்வதற்கு முன்னாள் உங்களின் மருத்துவரின் ஆலோசனையை கண்டிப்பாக பெற்று கொள்ளுங்கள்.
குறிப்பு: இங்கே கொடுக்கப்பட்ட தகவல்கள் மருந்தின் உப்பு உள்ளடக்கத்தை அடிப்படையாக கொண்டவை. மருந்தின் பயன்கள் மற்றும் பக்க விளைவுகள் ஒவ்வொரு நபருக்கும் மாறுபடும்.
டிக்ளோஃபெனாக் சோடியம் மாத்திரையை பற்றிய சில குறிப்புகள்
இதுபோன்ற மருந்து மாத்திரைகளின் பயன்கள் மற்றும் பக்கவிளைவுகள் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | மருந்து |