Anxit 0.25 Tablet Uses in Tamil
உடல்நிலை குறைபாடு ஏற்பட்டால் உடனே எடுத்து கொள்வது மாத்திரை தான். இந்த மாத்திரைகளை நாம் மருத்துவர் ஆலோசனை இல்லாமல் தாமாக மெடிக்களில் சென்று வாங்கி சாப்பிட கூடாது. ஏனென்றால் நீங்கள் மருத்துவரிடம் காண்பித்து வாங்கும் போது நம் உடல்நலத்திற்கு ஏற்ப மாத்திரையின் அளவுகளை எழுதி கொடுப்பார்கள்.
அதுவே நீங்கள் தாமாக மாத்திரை வாங்கி சாப்பிடும் போது நம்முடைய உடலநலத்திற்கு ஏற்ற மாத்திரைகளை ஆக அளவுகள் கூட இருக்கும். அதனால் மருத்துவரிடம் காண்பித்து மாத்திரை வாங்கி சாப்பிடும் போது பக்க விளைவுகள் குறைவாக காணப்படும். அதனால் தான் இந்த பதிவில் anxit 0.25 மாத்திரை பயன்கள் மற்றும் பக்க விளைவுகள் பற்றி அறிந்து கொள்வோம்.
குறிப்பு: மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் எந்த மாத்திரைமற்றும் ஊசி போன்றவற்றை தானாக வாங்கி பயன்படுத்த கூடாது..!
Anxit 0.25 Tablet Uses in Tamil:
இந்த மாத்திரையானது கீழ் கொடுக்கப்பட்டுள்ளவைகளுக்கு மருந்தாக கொடுக்கப்படுகிறது.
- தூக்கமின்மை
- மனக்கவலை
- மனசோர்வு
- மாதவிலக்கு
- கீமோதெரபி சிகிச்சை செல்வதால் ஏற்படும் குமட்டல் மற்றும் வாந்தி
போன்ற பிரச்சனைகளுக்கு மருந்தாக கொடுக்கப்படுகிறது.
Anxit 0.25 Tablet Side Effects in Tamil:
- மயக்கம்
- தலைவலி
- எரிச்சல்
- மறதி
- மலசிக்கல்
- மங்கலான பார்வை
- குறைந்த இரத்த அழுத்தம்
- மூக்கடைப்பு
மேல் கூறப்பட்டுள்ள பக்க விளைவுகள் இல்லாமல் வேறு ஏதேனும் பக்க விளைவுகளை சந்தித்தால் மருத்துவரை அணுக வேண்டும் .
Zynol 150 மாத்திரை எதற்காக பயன்படுத்தப்படுகிறது
முன்னெச்சரிக்கை:
கர்ப்பமாக இருக்கும் பெண்கள் இந்த மாத்திரையை மருத்துவர் ஆலோசனை இல்லாமல் எடுப்பதை தவிர்க்க வேண்டும்.
தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்களுக்கு இந்த மாத்திரை பரிந்துரைக்கப்படுவதில்லை. ஏனென்றால் குழந்தைக்கு ஏதும் பாதிப்பை ஏற்படுத்தலாம்.
மேலும் anxit 0.25 மாத்திரை எடுத்து கொள்ளும் போது மயக்கத்தை ஏற்படுத்தும் என்பதை அவ்வப்போது வாகனம் ஓட்டுவதை தவிர்க்க வேண்டும்.
இந்த மாத்திரை எடுத்து கொள்ளும் போது மது அருந்துவதை தவிர்க்க வேண்டும்.
நீங்கள் வேறு ஏதேனும் பிரச்சனைக்காக மருந்து, மாத்திரை எடுத்து கொண்டால் அதனை பற்றிய முழு தகவலையும் மருத்துவரிடம் தெரிவிக்க வேண்டும்.
மருந்தளவு:
மருத்துவர் கூறிய அளவில் தான் இந்த மாத்திரையை எடுத்து கொள்ள வேண்டும். ஒருவேளை நீங்கள் மாத்திரையை எடுத்து கொள்ள மறந்து விட்டால் அதனை மறுநேரம் சேர்த்து எடுத்து கொள்ள கூடாது.
Levipil மாத்திரை எதற்காக பயன்படுத்தப்படுகிறது
இதுபோன்ற மருந்து மாத்திரைகளின் பயன்கள் மற்றும் பக்கவிளைவுகள் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | மருந்து |