Ascoril LS Syrup பயன்பாடுகள் மற்றும் பக்க விளைவுகள் என்னென்ன தெரியுமா..?

Advertisement

Ascoril LS Syrup Uses in Tamil

மனிதனாக பிறந்த ஒவ்வொருவரும் நலமாக இருக்கிறோம் என்று சொல்ல முடியாது. ஏனென்றால் அந்த அளவிற்கு ஒவ்வொரு மனிதனுடைய உடலில் பிரச்சனைகள் இருந்து கொண்டிருக்கிறது. இதுமாதிரி இருக்கும் போது நமது உடலில் உள்ள அனைத்து பிரச்சனைக்கும் மருந்தினை மட்டும் தான் அனைவரும் தீர்வாக நினைக்கிறார்கள். ஆனால் நாம் எடுத்துக்கொள்ளும் மருந்தில் உடலுக்கு தேவையான நன்மை எவ்வளவு இருக்கிறதோ அந்த அளவிற்கு சில பக்க விளைவுகள் இருக்கிறது. மருந்து என்று சொல்லும் போது அதில் மாத்திரை, சிரப், ஆயின்மென்ட் மற்றும் பிற அனைத்தும் உள்ளடங்கியதாக கருதப்படுகிறது. அந்த வகையில் இன்று Ascoril LS Syrup-ன் பயன்கள் மற்றும் பக்க விளைவுகள் பற்றி தெரிந்துக்கொண்டு மற்றவர்களுக்கும் இதனை தெரியப்படுத்தலாம் வாங்க..!

குறிப்பு: மருத்துவரின் அறிவுரை இல்லாமல் எந்த மாத்திரையும் தானாகவே பயன்படுத்த கூடாது.

அஸ்கோரில் LS சிரப் பயன்பாடுகள்:

ascoril ls syrup benefits in tamil

 

அஸ்கோரில் LS சிரப் ஆனது இருமல், சளி மற்றும் நெஞ்சு எரிச்சல் ஆகிய பிரச்சனைகளுக்கு சிறந்த பலனை அளிக்கும் மருந்தாக இருக்கிறது. அதனால் இந்த மருந்தை பல மருத்துவர்கள் நோயாளிகளுக்கு பரிந்துரை செய்கிறார்கள்.

அதுமட்டும் இல்லாமல் இந்த அஸ்கோரில் LS சிரப் தொண்டை புண், ஆஸ்துமா மற்றும் மார்பில் எரிச்சல் உணர்வு போன்ற பிரச்சனை உள்ளவர்களையும் அதிலிருந்து விடுபட செய்து மகிழ்ச்சியாக வாழ உதவுகிறது.

இந்த சிரப் சளி மற்றும் இருமல் பிரச்சனையை சரி செய்வதோடு மட்டும் இல்லாமல் நுரையீரல் அழற்சி மற்றும் நுரையீரல் வீக்கம் போன்றவற்றையும் குணப்படுத்த உதவுகிறது.

இது பல நோய்களுக்கு தீர்வு அளிக்க கூடியதாக இருந்தாலும் கூட மருத்துவரின் ஆலோசனை படி மட்டுமே சரியான அளவில் எடுத்துக்கொள்வது உடல் நலத்திற்கு நல்லது.

இதையும் படியுங்கள்⇒ Digene Syrup குடிப்பதன் நன்மைகள் மற்றும் பக்க விளைவுகள்..!

Ascoril LS Syrup Side Effects in Tamil:

  • செரிமான கோளாறு
  • நெஞ்சில் எரிச்சல்
  • திடீரென பதற்றம்
  • வாய் வறட்சி
  • வாந்தி
  • வயிற்றுப்போக்கு
  • உடல் சோர்வு
  • தலைவலி
  • தலை சுற்றல்
  • உடலில் வீக்கம்
  • கைகளில் நடுக்கம்
  • நரம்பு தளர்ச்சி

அஸ்கோரில் LS சிரப் குடித்த இதில் சொல்லப்பட்டுள்ள பக்க விளைவுகள் இல்லாமல் வேறு ஏதேனும் பக்க விளைவுகள் இருந்தாலும் கூட அதனை அலட்சிய படுத்தாமல் மருத்துவரை அணுகி அதனை தெளிவு படுத்து வேண்டும்.

Cefixime Tablet-யின் பயன்கள் மற்றும் பக்க விளைவுகள் பற்றி அறியலாம் வாங்க..!

முன்னெச்சரிக்கை:

மருத்துவர் உங்களுக்கு அஸ்கோரில் LS சிரப் எடுத்துக்கொள்ளுமாறு பரிந்துரை செய்கிறார் என்றால் தற்போது நீங்கள் எடுத்துக்கொள்ளும் மருந்துகள் மற்றும் உணவின் முறையை பற்றி தெளிவாக கூற வேண்டும்.

பெண்கள் கர்ப்பமாக இருந்தாலோ அல்லது குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்தாலோ அதனை மருத்துவரிடம் முன்பே கூற  வேண்டும்.

அதுபோல மது அருந்துபவராக இருந்தாலோ அல்லது சிகரெட் போன்றவற்றை பிடிப்பவராக இருந்தாலும் அதனை மருத்துவரிடம் மறைக்க கூடாது. ஏனென்றால் அப்போது தான் மருத்துவர் உங்களுடைய உடல் நலத்திற்கு ஏற்றவாறு ஆலோசனை செய்ய முடியும்.

எந்த மருந்தாக இருந்தாலும் அதனை மருத்துவரின் ஆலோசனை படி தான் எடுத்துகொள்ள வேண்டும். அது மட்டும் இல்லாமல் மருத்துவர் கூறிய அளவை விட கூடவோ அல்லது குறைவாகவோ எடுத்துக்கொள்வதும் உடலுக்கு நல்லது கிடையாது.

இதையும் படியுங்கள்⇒ ஜூனியர் லான்சோல் 15 மி.கி மாத்திரையின் பயன்கள் மற்றும் பக்க விளைவுகள்..!

இதுபோன்ற மருந்து மாத்திரைகளின் பயன்கள் மற்றும் பக்கவிளைவுகள் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> மருந்து
Advertisement