Aspirin Gastro Resistant 75 mg Uses in Tamil
மனிதர்களாக பிறந்த அனைவருமே உடல் நல குறைபாடு ஏற்பட்டால் உடனே எடுத்து கொள்வது மாத்திரை. இந்த மாத்திரை போட்டவுடன் உடல் நல பிரச்சனை குணமாகிவிடுகிறது. அதனால் இதில் நன்மைகள் மட்டும் உள்ளது என்று நினைக்க கூடாது. நீங்கள் சாப்பிடும் ஒவ்வொரு மாத்திரைகளிலும் நன்மைகள் மட்டுமில்லை தீமைகளும் அடங்கியிருக்கிறது. அதனால் மாத்திரை சாப்பிடுவதற்கு முன் அதன் நன்மை மற்றும் தீமை இரண்டையும் அறிந்திருக்க வேண்டும். உங்களுக்கு உதவும் வகையில் aspirin gastro resistant 75mgமாத்திரையின் பயன்கள் மற்றும் பக்க விளைவுகளை தெரிந்து கொள்வோம் வாங்க..
குறிப்பு: மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் எந்த மாத்திரையும் வாங்கி தானாக பயன்படுத்த கூடாது..!
Aspirin Gastro Resistant 75 mg Uses in Tamil:
ஆஸ்பிரின் மாத்திரை மாரடைப்பு, பக்கவாதம், ஆஞ்சியோ (மார்பு வலி) போன்ற இதய பிரச்சனைகளை தடுப்பதற்கும், இதய அறுவை சிகிச்சைக்குப் பின் இரத்த உறைவு ஏற்படுவதைத் தடுப்பதற்கும் மருந்தாக பயன்படுத்தப்படுகிறது.
Aspirin Gastro Resistant 75 mg Side Effects:
- செரிமான பிரச்சனை
- இரத்தப்போக்கு
- படைநோய்
- மூச்சி விடுவதில் சிரமம்
- தோல் தடித்தல் மற்றும் சிவந்து இருப்பது
மேல் கூறப்பட்டுள்ள பக்க விளைவுகள் தொடர்ந்து ஏற்பட்டால் மருத்துவரை அணுக வேண்டும்.
Calpol 650 மாத்திரை பயன்படுத்துவீர்களா… அப்போ இதை தெரிஞ்சுக்கோங்க.. |
முன்னெச்சரிக்கை:
கர்ப்ப காலத்தில் இந்த மாத்திரையை மருத்துவர் ஆலோசனை இல்லாமல் எடுத்து கொள்வதை தவிர்க்க வேண்டும். ஏனென்றால் குழந்தைக்கு இதயம் அல்லது சீறுநீரகத்தில் பிரச்சனை ஏற்படலாம்.
இந்த மாத்திரை சாப்பிடும் போது வாகனம் ஓட்டுவதில் எந்த பிரச்சனையும் இல்லை. ஆனால் உங்களுக்கு உடல் நல குறைபாடு ஏதும் இருந்தால் அப்போது வாகனம் ஓட்டுவதை தவிர்க்க வேண்டும்.
ஆஸ்பிரின் மாத்திரையுடன் மது அருந்துவதை தவிர்க்க வேண்டும்.
Nicip 100 mg மாத்திரையின் பயன்கள் மற்றும் பக்க விளைவுகள் என்ன தெரியுமா..?
இதுபோன்ற மருந்து மாத்திரைகளின் பயன்கள் மற்றும் பக்கவிளைவுகள் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | மருந்து |