Asthakind DX Syrup Uses in Tamil
கோடைக்காலம் என்றால் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும். அதுவே மழைக்காலம் என்று வந்தால் சளி, இருமல் மற்றும் காய்ச்சல் இதுபோன்ற பிரச்சனைகள் தான் அதிகமாக காணப்படும். ஆகவே இத்தகைய பிரச்சனைகள் வரும் என்று தெரிந்த காரணத்தினால் அவற்றை வரும் முன் காப்பது நல்லது. அப்படி பார்க்கையில் இதுபோன்ற பிரச்சனைகள் வந்த உடன் வீட்டு வைத்திய முறையினை தான் எடுத்துக்கொள்கிறோம். அதன் பிறகு தான் நாம் அனைவரும் மருந்து மாத்திரைகளை தான் எடுத்து கொள்கிறோம். இவ்வாறு எடுத்துக்கொள்ளும் மருந்துகள் நமது உடலுக்கு என்ன மாதிரியான பக்க விளைவுகளை உண்டாக்குகிறது என்பதை முதலில் பார்ப்பது அவசியம். அதனால் இன்று Asthakind DX சிரப்பில் உள்ள பயன்கள் மற்றும் பக்க விளைவுகளை பற்றி பார்க்கலாம் வாங்க..!
குறிப்பு: மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் எந்த மாத்திரையும் வாங்கி தானாக பயன்படுத்த கூடாது..!
Asthakind DX சிரப் எதற்காக பயன்படுத்துகிறது:
- சளி
- இருமல்
- வறட்டு இருமல்
- வலியுடன் கூடிய இருமல்
- சளிக்காய்ச்சல்
- மூக்கில் நீர் வடிதல்
- சாதாரணமான சளி
இத்தகைய பல்வேறு காரணங்களையும் குணப்படுத்த Asthakind DX சிரப் பயன்படுகிறது. மேலும் இந்த சிரப்பினை மருத்துவர் கூறிய அளவில் மட்டும் எடுத்துக்கொள்ள வேண்டும்.
Asthakind DX Syrup Side Effects:
- வயிற்று போக்கு
- வயிற்று வலி
- தலைவலி
- தூக்கமின்மை
- ஒழுங்கற்ற இதயத்துடிப்பு
- மலச்சிக்கல்
- தலைசுற்றல்
- முக வீக்கம்
மேல் சொல்லப்பட்டுள்ள பக்க விளைவுகள் அனைத்தும் Asthakind DX சிரப்பிற்கான பக்க விளைவுகளாக இருப்பதனால், அதனை அலட்சியப்படுத்தலாம் உடனே மருத்துவரை அணுகுவது நல்லது.
முன்னெச்சரிக்கை:
ஆஸ்துமா பிரச்சனை உள்ளவர்கள், கர்ப்பிணி பெண்கள் மற்றும் தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் என அனைவரும் முன்னெச்சரிக்கையுடன் இருத்தல் வேண்டும். மேலும் தற்போது உங்களின் உணவு முறை மற்றும் ஆரோக்கிய முறையினை பற்றியும் தெளிவாக மருத்துவரிடம் கூற வேண்டும்.
Sucrafil o ஜெல் பயன்கள் மற்றும் பக்க விளைவுகள்
இதுபோன்ற மருந்து மாத்திரைகளின் பயன்கள் மற்றும் பக்கவிளைவுகள் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | மருந்து |