Asthakind p Drops Uses in Tamil
இன்றைய காலகட்டத்தில் மருந்துகளால் மட்டுமே நம்மில் பலரின் வாழ்க்கை சீராக இயங்கி கொண்டிருக்கிறது எனலாம். அதற்கு காரணம் இன்றைய காலகட்டத்தில் உள்ள சுற்றுசூழல் மற்றும் நாம் அனைவரின் உணவு பழக்கமும் தான். அப்படி நாம் பயன்படுத்தும் மருந்துகளை பற்றிய முழுவிவரங்களும் நமக்கு தெரியுமா என்றால் நம்மில் பலரின் பதில் இல்லையென்றே இருக்கும். அதனால் தான் நமது பதிவின் மூலம் தினமும் ஒரு மருந்து பற்றிய தகவல்களை அறிந்துகொண்டு வருகின்றோம். அந்த வகையில் இன்றைய பதிவில் அஸ்தகைன்ட் பி டிராப் பற்றிய முழுவிவரங்களையும் பார்க்க இருக்கின்றோம். அதனால் இந்த பதிவை முழுதாக படித்து பயன்பெறுங்கள்.
குறிப்பு: மருத்துவரின் அறிவுரை இல்லாமல் எந்த மாத்திரையும் நீங்களாக பயன்படுத்த கூடாது..!
Pulmoclear மாத்திரை பற்றிய தகவல்
Asthakind p Drops Uses in Tamil:
இந்த அஸ்தகைன்ட் பி டிராப் ஆனது பொதுவாக மருந்துகளை உள்ளிழுக்கும் ஒரு கரைசல் ஆகும். இது ஒரு அமைப்புரீதியாக செயல்படும் மியூகோலிடிக் காரணி ஆகும்.
இது பொதுவாக நுரையீரலில் உள்ள சளியின் கட்டமைப்பை உடைப்பதன் மூலம் செயல்படுகிறது. இதன் மூலம் நமது நுரையீரலில் உள்ள சளி எளிதாக வெளியேறிவிடும்.
மேலும் இது அதிகரித்த மற்றும் கடுமையான மற்றும் நாள்பட்ட சுவாச நோய்களுக்கு சளி உற்பத்தியுடன் சிகிச்சையளிக்கப் பயன்படுகிறது.
இதனை மருத்துவர் அளித்த அளவில் மட்டுமே பயன்படுத்துங்கள். மாறாக மருத்துவர் அளித்த அளவைவிட அதிகமாகவோ குறைவாகவோ எடுத்து கொள்ளாதீர்கள். அப்படி எடுத்து கொண்டால் பல பக்கவிளைவுகளை சந்திக்க நேரிடும்.
Asthakind p Drops Side Effects in Tamil:
அஸ்தகைன்ட் பி டிராபினை பயன்படுத்துவதால்,
- குமட்டல்
- வாந்தி
- வயிற்றுப்போக்கு
- வயிற்று வலி
- செரிமான கோளாறுகள்
- ஸ்டீவன்ஸ்-ஜான்சன் நோய்க்குறி போன்ற பக்கவிளைவுகள் ஏற்படும் வாய்ப்புள்ளது. அதனால் இதில் ஏதாவது ஒரு பக்க விளைவுகள் நீடித்தால் உடனடியாக மருத்துவரிடம் சென்று ஆலோசனை பெற்று கொள்ளுங்கள்.
Montek Fx மாத்திரையை பயன்படுத்துவதற்கு முன்னால் இதை தெரிஞ்சிக்கோங்க
முன்னெச்சரிக்கை:
இந்த அஸ்தகைன்ட் பி டிராபினை பயன்படுத்துவதற்கு முன்னால் உங்களது தற்போதைய மருந்து பட்டியலை மருத்துவரிடம் தெரிவிக்க வேண்டும்.
12 வயதுக்கு குறைவான குழந்தைகளுக்கு இந்த மருந்தினை அளிக்க கூடாது.
உங்களுக்கு கல்லீரல் கோளாறு, சிறுநீரக செயலிழப்பு அல்லது வயிற்றுப் புண் இருந்தால் இந்த மருந்தைப் பயன்படுத்துவதற்கு முன்னால் உங்கள் மருத்துவரின் ஆலோசனையை பெற்று கொள்ள வேண்டும்.
குறிப்பு: இங்கே கொடுக்கப்பட்ட தகவல்கள் மருந்தின் உப்பு உள்ளடக்கத்தை அடிப்படையாக கொண்டவை. மருந்தின் பயன்கள் மற்றும் பக்க விளைவுகள் ஒவ்வொரு நபருக்கும் மாறுபடும்.
Montelukast மாத்திரை பற்றிய தகவல்
இதுபோன்ற மருந்து மாத்திரைகளின் பயன்கள் மற்றும் பக்கவிளைவுகள் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | மருந்து |