Astyfer z Syrup Uses in Tamil | astyfer-z liquid uses in tamil
வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். இப்பதிவில் Astyfer z (Astyfer z Syrup Uses and Side Effects in Tamil) சிரப் பயன்கள் மற்றும் பக்கவிளைவுகள் பற்றி தெரிந்து கொள்ளலாம். பயன்படுத்தப்படுகிறதுமனிதனாக பிறந்த அனைவரும் உடல்நல பிரச்சனை ஏற்பட்டால் உடனே எடுத்து கொள்வது மாத்திரை தான். இந்த மாத்திரையில் நன்மைகள் போலவே தீமைகளும் அடங்கியிருக்கிறது. அது போல சிறிய குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சிரப் குடிக்கிறார்கள். பெரியவர்கள் மாத்திரை சாப்பிட முடியவில்லை ஏதவாது சிராப்பக எழுதி கொடுங்க என்று மருத்துவரிடம் கேட்கிறார்கள். அவர்களும் மாத்திரைகளை சிரப் எழுதி தருகிறார்கள். இந்த சிரப்புகளில் நன்மைகள் போலவே தீமைகளும் அடங்கியிருக்கிறது. அதனால் நீங்கள் சாப்பிடும் மாத்திரைகளாக இருந்தாலும் சரி, சிராப்பக இருந்தாலும் சரி அதில் உள்ள நன்மை மற்றும் தீமைகளை அறிந்து கொண்டு சாப்பிடுங்க. அந்த வகையில் இன்றைய பதிவில் Astyfer z சிரப் பயன்கள் மற்றும் பக்க விளைவுகளை அறிந்து கொள்வோம் வாங்க..
குறிப்பு: மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் எந்த மாத்திரையும் வாங்கி தானாக பயன்படுத்த கூடாது..!
Astyfer z Syrup Uses:
இரும்புச்சத்து குறைபாடு, இரத்த சோகை
குறிப்பாக கர்ப்பம் மற்றும் பாலூட்டும் போது ஏற்படும் இரும்புச்சத்து குறைபாடு, இரத்த சோகை மற்றும் ஊட்டச்சத்து இல்லாத நிலை
நாள்பட்ட இரத்த இழப்பு அல்லது இரும்புச்சத்து குறைவாக உட்கொள்வதால் ஏற்படும் இரும்புச்சத்து குறைபாடு
மேல் கூறப்பட்டுள்ள பிரச்சனைகளுக்கு மருந்தாக பயன்படுத்தப்படுகிறது.
மருந்தின் அளவு:
இத்தகைய சிரப்பினை அதிகமாக எடுத்துக்கொள்ளாமல், மருத்துவர் கூறிய அளவில் மட்டும்த தான் எடுத்துக்கொள்ள வேண்டும். ஏனென்றால் அளவு கூடவோ அல்லது குறைவாகவோ எடுத்துக்கொள்வதன் மூலம் பிரச்சனைகள் ஏற்படும்.
மேலும் டீ மற்றும் காபியுடன் இந்த சிரப்பை எடுத்து கொள்ள கூடாது.
பக்க விளைவுகள்:
இந்த சிரப்பினால் எந்த பக்க விளைவுகளும் ஏற்படாது. ஒருவேளை நீங்கள் ஏதவாது பக்க விளைவுகளை உணர்ந்தால் மருத்துவரை அணுக வேண்டும்.
முன்னெச்சரிக்கை:
உங்களுக்கு ஒவ்வாமை பிரச்சனை இருந்தால் இந்த சிரப்பை மருத்துவர் ஆலோசனை இல்லாமல் எடுத்து கொள்ள கூடாது.
நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம், சிறுநீரகம் அல்லது கல்லீரல் பிரச்சனை ஏதும் இருந்தால் மருத்துவர் ஆலோசனை இல்லாமல் இந்த சிரப்பை எடுத்து கொள்ள கூடாது.
வேறு ஏதேனும் பிரச்சனைக்காக மருந்து, மாத்திரை எடுத்து கொண்டால் அதனை பற்றிய முழு தகவலையும் மருத்துவரிடம் தெரிவிக்க வேண்டும்.
கேவிஸ்கான் சிரப் எதற்காக பயன்படுத்தப்படுகிறது தெரியுமா..?
இதுபோன்ற மருந்து மாத்திரைகளின் பயன்கள் மற்றும் பக்கவிளைவுகள் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | மருந்து |