Astymin m Forte Uses And Side Effects in Tamil

Advertisement

Astymin m Forte Uses in Tamil

நம்முடைய முன்னோர்கள் வாழ்ந்த நாட்கள் வரையும் நோய், நொடி இல்லாமல் ஆரோக்கியமாக வாழ்ந்தார்கள். ஆனால் இன்றைய காலத்தில் வயிற்றில் இருக்கும் குழந்தைகளுக்கு கூட உடலில் பிரச்சனை இருக்கிறது என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள். இதனை சரி செய்வதற்கு மருந்து, மாத்திரைகள் எழுதி தருகிறார்கள். இதனை சாப்பிடுவதால் நம் உடலில் நன்மைகள் மட்டும் நடக்குமா என்று கேட்டால் நிச்சயமாக இல்லை. ஏனென்றால் இந்த மருந்து, மாத்திரைகளை சாப்பிடுவதால் நம்முடைய உடலில் தீமைகளும் ஏற்படுகிறது. அதனால் நீங்கள் சாப்பிடும் ஒவ்வொரு மாத்திரைகளின் நன்மைகள் மற்றும் தீமைகளை அறிந்திருக்கவேண்டும். அந்த வகையில் இன்றைய பதிவில் astymin m forte மாத்திரையை பற்றி அறிந்து கொள்வோம்.

குறிப்பு: மருத்துவரின் அறிவுரை இல்லாமல் எந்த மாத்திரையும் நீங்களாக பயன்படுத்த கூடாது..!

Astymin m Forte Uses:

உடலுக்கு தேவையான தாதுக்கள் மற்றும் வைட்டமின்கள் போன்றவற்றை இந்த மாத்திரையானது வழங்குகிறது. இதனால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி, உடல் பலவீனம்,  சோம்பல் நிலை போன்றவற்றை சரி செய்வதற்கு உதவுகிறது.  இது ஆற்றல் உற்பத்திக்கு உதவுகிறது. உறுப்புகள் மற்றும் திசுக்களுக்கு போதுமான ஊட்டச்சத்துக்களை வழங்குகிறது

டாக்ஸி மாத்திரையை யாரெல்லாம் பயன்படுத்தலாம் தெரியுமா..?

பக்க விளைவுகள்:

astymin m forte side effects in tamil

  • தலைவலி
  • வாந்தி
  • குமட்டல்
  • வயிறு கோளறு
  • வாய்வு

மேல் கூறப்பட்டுள்ள பக்க விளைவுகள் தொடர்ந்து ஏற்பட்டால் மருத்துவரை அணுகி ஆலோசனை பெற வேண்டும். இந்த பக்க விளைவானது நபருக்கு நபர் மாறுபடும். அதனால் நீங்கள் வேறு ஏதேனும் பக்க விளைவுகளை சந்தித்தால் அதனை பற்றிய தகவலையும் வழங்க வேண்டும்.

Cipmox 500 மாத்திரையை யாரெல்லாம் பயன்படுத்தலாம் தெரியுமா

மருந்தளவு:

இந்த மாத்திரையை மருத்துவர் கூறிய அளவில் தான் எடுத்து கொள்ள வேண்டும். ஒருவேளை நீங்கள் மாத்திரையை எடுத்து கொள்ள மறந்து விட்டால் அதனை மறுநேரம் சேர்த்து எடுத்து கொள்ள கூடாது.

முன்னெச்சரிக்கை:

கர்ப்பமாக இருக்கும் பெண்கள் மற்றும் தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்கள் இந்த மாத்திரையை மருத்துவர் ஆலோசனை இல்லாமல் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.

உங்களுக்கு அலர்ஜி பிரச்சனை இருந்தால் அதனை பற்றி மருத்துவரிடம் தெரிவிக்க வேண்டும்.

மேலும் நீங்கள் வேறு ஏதேனும் பிரச்சனைக்காக மருந்து, மாத்திரை எடுத்து கொண்டால் அதனை பற்றிய முழு விவரத்தையும் அறிந்திருக்க வேண்டும்.

இதுபோன்ற மருந்து மாத்திரைகளின் பயன்கள் மற்றும் பக்கவிளைவுகள் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> மருந்து

Advertisement