Atenolol Tablet Uses in Tamil
இன்றைய காலகட்டத்தில் நாளுக்கு நாள் நோய்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே உள்ளது. அதனால் அதனை சரி செய்வதற்கு உதவும் மருந்துகளின் எண்ணிக்கையும் அதிகரித்து கொண்டே தான் உள்ளது. இப்பொழுது உங்களுக்கு உடல்நிலை சரியில்லை என்று மருத்துவரிடம் சென்று மருந்துகளை வாங்கி பயன்படுத்தினாலும் அதனை பற்றிய முழுவிவரங்களையும் நாம் அறிந்து கொள்வது மிக மிக அவசியம் ஆகும். அதனால் தான் உங்களுக்கு பயன்படும் வகையில் தினமும் ஒரு மருந்து பற்றிய முழுவிவரங்களையும் பதிவிட்டு வருகின்றோம். அதேபோல் இன்றைய பதிவிலும் Atenolol மாத்திரையை பற்றிய முழுவிவரங்களையும் அதாவது இந்த மருந்து எந்தெந்த நோய்களை சரிசெய்ய உதவுகிறது. இதனை பயன்படுத்துவதால் நமக்கு என்னென்ன பக்கவிளைவுகள் ஏற்படும். அதேபோல் இதனை யார் யாரெல்லாம் பயன்படுத்தலாம் போன்ற தகவல்களை பதிவிட்டுள்ளோம். அதனால் இந்த பதிவை முழுதாக படித்து பயனடையுங்கள்.
குறிப்பு: மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் எந்த மாத்திரையும் வாங்கி தானாக பயன்படுத்த கூடாது..!
நீங்க ஹைஃபெனாக் பி மாத்திரை அதிகமாக பயன்படுத்துபவரா அப்போ இதை தெரிஞ்சிக்காம இருந்த எப்படி
Atenolol Tablet Uses in Tamil:
இந்த Atenolol மாத்திரையானது பொதுவாக ஒரு பீட்டா தடுப்பானாக செய்யல்படுகிறது. அதாவது, இது உடலில் இயற்கையாக நிகழும் சில இரசாயனங்களின் விளைவை குறைகிறது.
உதாரணமாக எபிநெஃப்ரின், அதனால் இதயம் மற்றும் இரத்தக் குழாய்களின் செயல்பாட்டை மேம்படுத்தும் வகையில் மருந்து செயல்படுகிறது. அதேபோல் இந்த Atenolol மருந்தானது இரத்த அழுத்தம், இதயத் துடிப்புகள் ஆகியவற்றை சீராக குறைகின்றது.
இதனால் தசைகளுக்கு குறைவான சிரமத்தையும் ஏற்படுத்துகிறது. மேலும் இந்த மருந்து குறிப்பாக இரத்த அழுத்தம் மற்றும் ஆஞ்சினா போன்றவற்றால் பாதிக்கப்பட்ட நோய்யாளிகளுக்கு அளிக்கப்படுகிறது.
இந்த மருந்து பொதுவாக வாய்வழியாக எடுக்கப்படும் மாத்திரை அல்லது உருளை வடிவ மருந்தாய் கிடைக்கிறது.
அதேபோல் இந்த மாத்திரையில் பல மி.லி அளவுகள் இருப்பதால், மருத்துவர் அளித்த அளவினை மட்டும் உட்கொள்ளுங்கள் மாறாக மருத்துவர் அளித்த அளவினை விட அதிகமாகவோ அல்லது குறைவாகவோ உட்கொண்டால் பல பக்க விளைவுகளை சந்திக்க நேரிடும்.
ஜெரோடோல் மாத்திரையின் பயன்கள் மற்றும் பக்க விளைவுகள்
Atenolol Tablet Side Effects in Tamil:
இந்த Atenolol மாத்திரையை பயனப்டுத்துவதால்,
- கால் வலி
- தலைசுற்றல்
- களைப்பு
- தூக்கமின்மை
- வயிற்றுப்போக்கு
- குமட்டல்
- மூச்சுத்திணறல்
- மன அழுத்தம் போன்ற பக்க விளைவுகள் ஏற்படும் வாய்ப்புகள் உள்ளது. அதனால் இதில் ஏதாவது ஒரு பக்க விளைவுகள் நீடித்தால் உடனடியாக மருத்துவரிடம் சென்று ஆலோசனை பெற்று கொள்ளுங்கள்.
முன்னெச்சரிக்கை:
இந்த Atenolol மாத்திரையினை பயன்படுத்துவதற்கு முன்னால் உங்களது தற்போதைய மருந்து பட்டியலை மருத்துவரிடம் தெரிவிக்க வேண்டும்.
இந்த மருந்தை கர்ப்ப காலத்தில் அல்லது தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்கள் பயன்படுத்தகூடாது.
மேலும் இந்த மருந்தினை குழந்தைகளுக்கு அளிக்க கூடாது. அதாவது இது 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு உரியது.
குறிப்பு: இங்கே கொடுக்கப்பட்ட தகவல்கள் மருந்தின் உப்பு உள்ளடக்கத்தை அடிப்படையாக கொண்டவை. மருந்தின் பயன்கள் மற்றும் பக்க விளைவுகள் ஒவ்வொரு நபருக்கும் மாறுபடும்.
Neurobion ஊசியை பயனப்டுத்துவதற்கு முன்னால் அதனை தெரிந்து கொள்ளுங்கள்
இதுபோன்ற மருந்து மாத்திரைகளின் பயன்கள் மற்றும் பக்கவிளைவுகள் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | மருந்து |