அசித்ரோமைசின் மாத்திரை பயன்கள் | Azithromycin Uses in Tamil

azithromycin tablet uses in tamil

அசித்ரோமைசின் மாத்திரை பயன்கள் மற்றும் பக்க விளைவுகள் | Azithromycin Tablet  Uses in Tamil

நம்முடைய உடம்பு ஏதேனும் அழற்சி அல்லது ஒவ்வாமை தொற்றுக்களால் பாதிக்கப்பட்டிருந்தால் நாம் ஏதேனும் Ointment அல்லது மாத்திரை பயன்படுத்துவோம். நாம் பயன்படுத்தும் எந்த மருந்தாக இருந்தாலும் அந்த மருந்து எந்த நோய்க்காக உபயோகப்படுத்தப்படுகிறது, அதை பயன்படுத்துவதால் என்ன நன்மைகள் கிடைக்கும் அல்லது வேறு ஏதேனும் பக்க விளைவுகள் ஏற்படுமா என்பதை தெரிந்து கொள்வது அவசியம். அந்த வகையில் நாம் இந்த பதிவில் அசித்ரோமைசின் மாத்திரை எதற்காக பயன்படுகிறது என்பதை தெரிந்து கொள்ளலாம் வாங்க.

குறிப்பு: மருத்துவர் பரிந்துரை இல்லாமல் எந்த ஒரு மருந்தையும் தானாகவே பயன்படுத்த வேண்டாம்..

அசித்ரோமைசின் மாத்திரை பயன்கள் – Azithromycin Uses in Tamil:

Azithromycin Tablet  Uses in Tamil

 • இந்த மாத்திரை பொதுவாக பாக்டீரியா தொற்றுக்களால் ஏற்படும் நோய்களை குணப்படுத்த உதவுகிறது.
 • பாக்டீரியா தொற்றுக்களால் ஏற்படும் சளி, இருமல் மற்றும் தொண்டையில் ஏற்படும் தொற்றுக்களை குணப்படுத்த உதவுகிறது.
 • காதுகளில் ஏற்படும் தொற்றுக்களை குணப்படுத்தவும், சிறுநீர் பிறப்புறுப்பு தொற்று, சுவாசக்குழாயின் உட்பகுதி மற்றும் மேல் பகுதியில் ஏற்படும் தொற்றுக்களை குணப்படுத்தவும் உதவுகிறது.
 • சைனஸ் மற்றும் தோல் அழற்சியை குணப்படுத்துவதற்கும் பயன்பட்டு வருகிறது.
 • நுரையீரல், மார்பு பகுதியில் உள்ள பாக்டீரியாவை அழித்து மூச்சுவிடுவதை சீராக்க பயன்படுகிறது.
 • தொண்டையில் ஏற்படும் புண், வீக்கம் ஆகியவற்றை சரி செய்ய உதவுகிறது.
 • உடம்பில் இருக்கும் பாக்டீரியாக்களை அழிப்பதற்கும் மற்றும் பாக்டீரியாவின் வளர்ச்சியை தடுப்பதற்கும் இந்த மாத்திரை பெரிதும் பயன்பட்டு வருகிறது.

அசித்ரோமைசின் மாத்திரை பக்கவிளைவுகள் – Azithromycin Side Effects in Tamil

 • குமட்டல், வாந்தி, பதட்டம், உடம்பில் சோர்வு காணப்படும்.
 • வயிற்று வலி, தசை பிடிப்பு, மூட்டு வலி, நரம்பு தளர்ச்சி போன்ற பக்க விளைவுகள் ஏற்படலாம்.
 • தலை வலி, தலைசுற்றல், காய்ச்சல், தோல்களில் அரிப்பு போன்ற தீமைகள் வருவதற்கான வாய்ப்பு உள்ளது.
 • இரைப்பை அழற்சி, வயிற்று போக்கு போன்ற பக்க விளைவுகள் ஏற்படுவதற்கான வாய்ப்பு உள்ளது.
 • மேல் கூறப்பட்ட பக்க விளைவுகள் அல்லது வேறு ஏதேனும் பக்க விளைவுகள் இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்.
புளுக்கோனசோல் மாத்திரை நன்மைகள் மற்றும் பக்க விளைவுகள்

அசித்ரோமைசின் மாத்திரை யார் பயன்படுத்தலாம்?

 • கர்ப்பிணி பெண்கள், குழந்தைக்கு பால் கொடுக்கும் தாய்மார்கள் இந்த மாத்திரையை பயன்படுத்தலாம்.
 • இதய நோய் உள்ளவர்கள், சிறுநீரகம் மற்றும் கல்லீரல் பிரச்சனை உள்ளவர்கள் மருத்துவர் பரிந்துரை இல்லாமல் இந்த மாத்திரையை பயன்படுத்தக் கூடாது.
 • ஹைப்பர்சென்ஸ்டிவிட்டி உள்ளவர்கள் இந்த மாத்திரையை பயன்படுத்த கூடாது.
 • இந்த மாத்திரையை உணவுக்கு பின் எடுத்து கொள்ளலாம். மேலும் மருத்துவர் எந்த அளவு Dosage எடுத்து கொள்ள வேண்டும், எப்பொழுது எடுத்து கொள்ள வேண்டும் என்று கூறுகிறாரோ அப்பொழுது சாப்பிடுவது நல்லது.
 • மருத்துவர் பரிந்துரை இல்லாமல் எந்த மாத்திரையையும் சாப்பிட வேண்டாம்.

மருந்து அளவு – Azithromycin Tablet  Uses in Tamil:

 • Azithromycin – 250 MG என்ற வடிவிலும் கிடைக்கிறது.
 • 250MG, 500MG
ஆஸ்பிரின் மாத்திரை பயன்கள்
போல்விட் மாத்திரை பயன்கள் மற்றும் பக்க விளைவுகள்

 

இதுபோன்ற மருந்து மாத்திரைகளின் பயன்கள் மற்றும் பக்க விளைவுகள் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—>மருந்து