Baclofen மாத்திரையின் பயன்கள் மற்றும் பக்க விளைவுகள்

Advertisement

Baclofen Tablet Uses in Tamil

மனிதர்களாக பிறந்த அனைவருமே உடல்நல குறைபாடு ஏற்பட்டால் உடனே எடுத்து கொள்வது மாத்திரை தான். இந்த மாத்திரையை சாப்பிட்ட பிறகு உடல்நிலை குறைபாடு சரியாகிவிட்டால் நல்ல மாத்திரை உடனே சரியாகிவிட்டது என்று கூறுவோம். ஆனால் இதில் நன்மைகள் மட்டும் தான் உள்ளது என்று நினைக்க கூடாது. ஏனென்றால் ஒவ்வொரு மாத்திரையிலும் நன்மைகள் போலவே தீமைகளும் இருக்கிறது. அதனால் ஒவ்வொரு மாத்திரையும் சாப்பிடுவதற்கு முன் அதன் நன்மைகள் மற்றும் தீமைகளையும் அறிந்து கொள்ள வேண்டும். அதனால் இந்த பதிவில் உங்களுக்கு உதவும் வகையில் Baclofen மாத்திரையின் பயன்கள் மற்றும் பக்க விளைவுகளை அறிந்து கொள்வோம் வாங்க..

குறிப்பு: மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் எந்த மாத்திரையும் வாங்கி தானாக பயன்படுத்த கூடாது..!

Baclofen Tablet Uses in Tamil:

Baclofen Tablet side effects in tamil

தசையில் ஏற்படும் வலிகளை சரி செய்வதற்கு இந்த மாத்திரை பரிந்துரைக்கப்படுகிறது. தசை அறிகுறிகளாக இருக்கும் வலி, தசை பிளவு, மற்றும் விறைப்புத்தன்மைகளுக்கு சிகிச்சையளிக்கிறது. பேக்லோஃபென் (Baclofen) தண்டுவட பாதிப்பு அல்லது நோய் தொடர்பான அறிகுறிகளுக்கும் இது சிகிச்சையளிக்கிறது.

Calpol 650 மாத்திரை பயன்படுத்துவீர்களா… அப்போ இதை தெரிஞ்சுக்கோங்க..

Baclofen Tablet Side Effects:

  • குழப்பம்
  • மயக்கம்
  • குமட்டல் மற்றும் வாந்தி
  • தசைவலி
  • தசை பலவீனம்
  • மலசிக்கல்
  • காதுகளில் சத்தம் கேட்பது

மேல் கூறப்பட்டுள்ள பிரச்சனைகள் தொடர்ந்து இருந்தால் மருத்துவரை அணுக வேண்டும்.

முன்னெச்சரிக்கை:

கர்ப்பமாக இருக்கும் பெண்கள் இந்த மாத்திரையை மருத்துவர் ஆலோசனை இல்லாமல் எடுத்து கொள்ள கூடாது.

தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்கள் இந்த மாத்திரை எடுத்து கொள்வதை தவிர்க்க வேண்டும். ஏனென்றால் இதன் பக்க விளைவுகள் அதிகமாகலாம்.

நீங்கள் வேறு ஏதும் பிரச்சனைக்கு மாத்திரை மருந்து எடுத்து கொண்டால் அதனை பற்றிய முழு தகவலையும் பற்றி தெரிவிக்க வேண்டும்.

இந்த மாத்திரை சாப்பிடும் போது மது அருந்துவதை தவிர்க்க வேண்டும்.

Nicip 100 mg மாத்திரையின் பயன்கள் மற்றும் பக்க விளைவுகள் என்ன தெரியுமா 

மருந்தளவு:

மருத்துவர் கூறிய அளவில் மாத்திரையை எடுத்து கொள்ள வேண்டும். ஒருவேளை நீங்கள் மாத்திரை எடுத்து கொள்ள மறந்து விட்டால் அதனை சரி செய்வதற்கு இருமாத்திரையாக எடுத்து கொள்ள கூடாது.

இதுபோன்ற மருந்து மாத்திரைகளின் பயன்கள் மற்றும் பக்கவிளைவுகள் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> மருந்து
Advertisement