பெப்லக்ஸ் ஃபோர்ட்டே மாத்திரை பயன்கள் மற்றும் பக்க விளைவுகள்
நம் உடலில் புரதச்சத்து, புரோட்டீன்கள், விட்டமின்கள் இருப்பது மிகவும் முக்கியம். விட்டமின் அளவு உடலில் குறைந்து காணப்பட்டால் நாம் பல விதமான நோய்களை சந்திக்க வேண்டிய நிலை வரும். உடலில் வைட்டமின் சத்து அதிகரிப்பதற்கு ஒரு சிலர் சத்தான உணவுகளை உட்கொள்வார்கள், ஒரு சிலர் மாத்திரை எடுத்து கொள்வார்கள். அப்படி உடலில் விட்டமின் சத்து அதிகரிப்பதற்கு சாப்பிடும் மாத்திரையில் ஒன்று Beplex Forte. நாம் இந்த தொகுப்பில் பெப்லக்ஸ் ஃபோர்ட்டே மாத்திரை சாப்பிடுவதால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள் மற்றும் தீமைகள் பற்றி படித்தறியலாம் வாங்க.
குறிப்பு: மருத்துவர் பரிந்துரை இல்லாமல் எந்த ஒரு மருந்தையும் தானாகவே பயன்படுத்த வேண்டாம்..
பெப்லக்ஸ் ஃபோர்ட்டே மாத்திரை பயன்கள் – Beplex Forte Uses in Tamil:
- ஒரு சிலருக்கு வைட்டமின் குறைபாட்டால் அதிக அளவு முடி கொட்டும். அதை சரி செய்வதற்கு பயன்படுகிறது.
- நரம்பியல் சம்மந்தமான பிரச்சனை, கர்ப்ப காலத்தில் ஏற்படும் பிரச்சனைகளை சரி செய்ய பயன்படுகிறது.
- வயிற்றுப்போக்கு, கண் சம்மந்தமான பிரச்சனைகள், இரத்த சோகை, மன நோய், இதய நோய் போன்றவற்றை குணப்படுத்த உதவுகிறது.
- அல்சைமர் நோய், தலைவலி, காய்ச்சல், வைட்டமின் B-12 குறைபாடு, வைட்டமின் B3 குறைபாடு போன்றவற்றை சரி செய்யவும், உடல் எடை அதிகரிப்பதற்கு உதவுகிறது.
பக்க விளைவுகள்:
- மங்கலான பார்வை, வியர்வை, உடல் சோர்வு, ஆற்றல் குறைந்து காணப்படுவது போன்ற பக்க விளைவுகள் ஏற்படலாம்.
- நெஞ்செரிச்சல், தொண்டை வலி, தோல் அரிப்பு, தோல் சிவந்து போவது, இருமல், மூச்சு விடுவதில் சிரமம் போன்ற உடல் உபாதைகள் ஏற்படலாம்.
- வீக்கம், வயிற்று கோளாறுகள், வாந்தி, மயக்கம், பசியின்மை, கல்லீரல் அழற்சி, மனதில் குழப்பம், தூக்கம் வருவது போன்ற உணர்வு, நீர் சத்து குறைந்து காணப்படுவது, முதுகு வலி, நெஞ்சு வலி, அழற்சி போன்ற பக்க விளைவுகள் ஏற்படலாம்.
- இரைப்பை எரிச்சல், உலர்ந்த வாய், சுவை தெரியாமல் இருப்பது, வலிப்பு நோய் போன்றவை ஏற்படலாம்.
- மேலே குறிப்பிடப்பட்டுள்ள பக்க விளைவுகள் அல்லது வேறு ஏதேனும் பக்க விளைவுகள் இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்.
பெப்லக்ஸ் ஃபோர்ட்டே மாத்திரை யார் சாப்பிட கூடாது:
- கர்ப்பிணி பெண்கள், குழந்தை பெற முயற்சிக்கும் பெண்கள் மற்றும் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் மருத்துவர் ஆலோசனை இல்லாமல் இந்த மாத்திரையை சாப்பிட கூடாது.
- மது அருந்தி விட்டு பெப்லக்ஸ் ஃபோர்ட்டே மாத்திரை எடுத்து கொள்ள கூடாது.
- கல்லீரல் நோய், சிறுநீரக நோய் உள்ளவர்கள் இந்த மாத்திரையை சாப்பிட வேண்டாம்.
மாத்திரை அளவு:
- Niacinamide – 75 MG
- Vitamin B1 – 10 MG
- Vitamin B12 – 15 MCG
- Vitamin C – 150 MG
- Calcium Pantothenate – 50 MG
- Vitamin B6 – 3 MG
- Vitamin B2 – 10 MG
- Biotin – 260 MCG
- Folic Acid – Vitamin B9 – 1.5 MG
- Nicotinic Acid – 25 MG
ராணிடிடைன் மாத்திரை பயன்கள் |
லிவோஜென் மாத்திரை பயன்பாடுகள் மற்றும் பக்க விளைவுகள் |
மேலும் ஆரோக்கியம் தொடர்பான பயனுள்ள தகவல்களை தெரிந்துகொள்ள பொதுநலம்.காம் தளத்தை பார்வையிடவும்,
இதுபோன்ற மருந்து மாத்திரைகளின் பயன்கள் மற்றும் பக்கவிளைவுகள் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | மருந்து |