Betahistine மாத்திரை எதற்காக பயன்படுத்தப்படுகிறது

Advertisement

Betahistine Tablet Uses in Tamil

மனிதர்களாக பிறந்த அனைவருமே உடல்நல  குறைபாடு ஏற்பட்டால் உடனே எடுத்து கொள்வது மாத்திரை தான். இந்த மாத்திரைகளை மருத்துவர் ஆலோசனை இல்லாமல் எடுத்து கொள்ள கூடாது. ஏனென்றால் நீங்கள் மருத்துவரை காண்பித்து மாத்திரை வாங்கி சாப்பிடும் போது நம்முடைய உடல் எடையின் படி மாத்திரையின் அளவுகளை எழுதி தருவார்கள். அதனால் பக்க விளைவுகள் குறைவாக இருக்கும்.

அதுவே நீங்கள் மெடிக்களில் தானாக மருந்து, மாத்திரை வாங்கி சாப்பிடும் போது பக்க விளைவுகள் ஏற்படும். அதனால் நீங்கள் எந்த மாத்திரை எடுத்து கொள்வதாக இருந்தாலும் சரி மருத்துவர் ஆலோசனை இல்லாமல் எடுத்து கொள்ள கூடாது. அது போல நீங்கள் எடுத்து கொள்ளும் மாத்திரையின் நன்மைகள் மற்றும் தீமைகளை அறிந்து கொள்ள வேண்டும். அந்த வகையில் இன்றைய பதிவில் Betahistine மாத்திரையின் பயன்கள் மற்றும் பக்க விளைவுகள் பற்றி அறிந்து கொள்வோம் வாங்க..

Betahistine Tablet Uses:

 betahistine tablet side effects in tamil

பொதுவாக ஒவ்வொரு மாத்திரையையும் ஒவ்வொரு பயன்பாட்டிற்காக பயன்படுத்தப்படுகிறது. இந்த Betahistine மாத்திரையானது காது செவித்திறன் இழப்பு, மெனீயெரின் நோய், வாந்தி மற்றும் குமட்டல் போன்ற பிரச்சனைகளுக்கு மருந்தாக பயன்படுத்தப்படுகிறது.

பக்க விளைவுகள்:

  • தலைவலி
  • செரிமான பிரச்சனை
  • உடல் அரிப்பு
  • தோலில் வீக்கம்

மேல் கூறப்பட்டுள்ள பிரச்சனையானது தொடர்ந்து ஏற்பட்டால் மருத்துவரை அணுகி ஆலோசனை பெற வேண்டும். இந்த பக்க விளைவானது ஒவ்வொருவருக்கும் மாறுபடும். அதனால் மேலே உள்ள பக்க விளைவுகள் இல்லாமல் வேறு ஏதேனும் பக்க விளைவுகளை சந்தித்தால் மருத்துவரை அணுகி ஆலோசனை பெற வேண்டும்.

Ebastine மாத்திரை எதற்காக பயன்படுத்தப்படுகிறது..

முன்னெச்சரிக்கை:

  • கர்ப்பமாக இருக்கும் பெண்கள் இந்த மாத்திரையை மருத்துவர் ஆலோசனை இல்லாமல் எடுத்து கொள்ள கூடாது.
  • தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்கள் இந்த மாத்திரையை மருத்துவர் ஆலோசனை இல்லாமல் எடுத்து கொள்ள கூடாது.
  • இந்த மாத்திரையை எடுத்து கொள்ளும் போது மது அருந்துவதை தவிர்க்க வேண்டும்.
  • இந்த மாத்திரையை எடுத்து கொள்ளும் போது தலைவலி மற்றும் மயக்கம் ஏற்படுவதால் அவ்வப்போது வாகனம் ஓட்டுவதை தவிர்க்க வேண்டும்.
  • நீங்கள் வேறு ஏதும் பிரச்சனைக்காக மருந்து, மாத்திரை எடுத்து கொண்டால் அதனை பற்றிய தகவலை தெரிவிக்க வேண்டும்.
இதுபோன்ற மருந்து மாத்திரைகளின் பயன்கள் மற்றும் பக்கவிளைவுகள் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> மருந்து

 

Advertisement