Betnesol Tablet Uses in Tamil
நம் முன்னோர்களின் காலத்தில் உணவே மருந்தாக இருந்தது. ஆரோக்கியமான உணவுகளை சாப்பிட்டு உடல் ஆரோக்கியமாக வைத்து கொண்டார்கள். அது போல உடலில் ஏதும் பிரச்சனை ஏற்பட்டாலும் நாட்டு மருந்துகளை சாப்பிட்டு பிரச்சனைகளை சரி செய்து கொண்டனர். ஆனால் இன்றைய காலத்தில் உள்ளவர்கள் ஆரோக்கியமான உணவை சாப்பிடுவதில்லை. பாஸ்ட் புட் உணவுகளை அதிகம் சாப்பிடுகின்றனர். இதனால் உடலில் பல்வேறு வகையான பிரச்னை ஏற்படுகிறது. இதனை தவிர்ப்பதற்கு மருத்துவரிடம் செல்லும் போது அவர்கள் எழுதி கொடுக்கும் மருந்து, மாத்திரைகளை தான் உட்கொள்ள வேண்டியிருக்கிறது. இதனால் பல பிரச்சனைகள் உடலில் ஏற்படும். அதனால் நீங்கள் சாப்பிட கூடிய மாத்திரைகளில் உள்ள நன்மைகள் மற்றும் தீமைகளை அறிந்து கொண்டு சாப்பிட வேண்டும். அந்த வகையில் இன்றைய பதிவில் Betnesol மாத்திரை பயன்கள் மற்றும் பக்க விளைவுகளை அறிந்து கொள்வோம் வாங்க..
குறிப்பு: மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் எந்த மாத்திரையும் வாங்கி தானாக பயன்படுத்த கூடாது..!
Betnesol Tablet Uses in Tamil:

முடக்கு வாதம், ஆஸ்துமா, தோல் ஒவ்வாமை, பிற ஒவ்வாமை நிலைகள் போன்ற பல்வேறு நிலைகளால் ஏற்படும் அழற்சியை (வீக்கம், சிவத்தல்)போன்ற பிரச்சனைக்ளுக்கு Betnesol மாத்திரை பயன்படுகிறது.
Betnesol Tablet Side Effects:
- அஜீரணம்
- நெஞ்செரிச்சல்
- குமட்டல்
- அதிகமாக வியர்த்தல்
- பசியின்மை
- எலும்புகள் மெலிதல்
மேல் கூறப்பட்டுள்ள பக்க விளைவுகள் இல்லாமல் வேறு ஏதும் பக்க விளைவுகள் ஏற்பட்டாலும் மருத்துவரிடம் தெரிவிக்க வேண்டும்.
Flavoxate மாத்திரை பயன்கள் மற்றும் பக்க விளைவுகள்
முன்னெச்சரிக்கை:
- கர்ப்பமாக இருக்கும் பெண்களுக்கு Betnesol பரிந்துரைக்கப்படுவதில்லை.
- தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்களுக்கும் இந்த மாத்திரை பரிந்துரைக்கப்படுவதில்லை.
- இந்த மாத்திரை சாப்பிடும் போது வாகனம் ஓட்டுவதை தவிர்க்க வேண்டும்.
- Betnesol மாத்திரை சாப்பிடும் போது மது அருந்துவதை தவிர்க்க வேண்டும்.
- நீங்கள் வேறு ஏதும் பிரச்சனைக்கு மருந்து மாத்திரைகள் ஏதும் எடுத்து கொண்டால் அதனை பற்றி முழுமையாக மருத்துவரிடம் தெரிவிக்க வேண்டும்.
மாத்திரை எப்படி வேலை செய்கிறது | மாத்திரை எடுத்து கொள்ளும் முறை:
Betnesol மாத்திரியானது செல்களில் இருக்கும் ஸ்டீராய்டு ஏற்பிகளுடன் பிணைப்பதன் மூலம் செயல்படுகிறது, வீக்கம், சிவத்தல் மற்றும் அரிப்பு ஆகியவற்றைக் குறைக்க தோலில் உள்ள இயற்கையான பொருட்களை செயல்படுத்துகிறது.
இந்த மாத்திரையை மருத்துவரை கூறிய அளவில் தான் எடுத்து கொள்ள வேண்டும். ஒருவேளை நீங்கள் மாத்திரையை எடுத்து கொள்ள மறந்து விட்டாலும், அதனை மறுநேரம் சேர்த்து கொள்ள கூடாது. அது போல இந்த மாத்திரையினை சூரிய ஒளி படாதவாறு, குளிர்ந்த இடத்தில் வைக்க வேண்டும்.
வாழ்க்கை முறை:
அதிகமாக சர்க்கரை உள்ள உணவுகள் எடுத்து கொள்வதை தவிர்க்க வேண்டும். உங்களுடைய அன்றாட வாழ்க்கையில் பழங்கள், காய்கறிகள், முழு தானியங்கள், ஆரோக்கியமான கொழுப்புகள் மற்றும் மீன் வகைகளை சேர்த்து கொள்ள வேண்டும். மன அழுத்தம் இல்லாமல் மகிழ்ச்சியாக இருக்க முயற்சியுங்கள். அதிகப்படியான கெமிக்கல் நிறைந்த சோப் மற்றும் துணி சோப் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.
Famotidine மாத்திரை எதற்காக பயன்படுத்தப்படுகிறது..
| இதுபோன்ற மருந்து மாத்திரைகளின் பயன்கள் மற்றும் பக்கவிளைவுகள் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | மருந்து |














