Betnovate n Uses in Tamil
இன்றைய காலக்கட்டத்தில் அனைவர்க்கும் பயன்படக்கூடியது மருந்து ஆகும். ஆகையால் , நாம் பயன்படுத்தும் ஒவ்வொரு மருந்தினை பற்றியும் தெரிந்துகொள்வது மிகவும் அவசியம். ஆகையால், உங்களுக்கு பயனுள்ள வகையில் நம் பொதுநலம் பதிவில் பல்வேறு வகையான மருந்துகளின் பயன்கள் மற்றும் பக்கவிளைவுகள் பற்றி பதிவிட்டு வருகிறோம். அந்த வகையில் இப்பதிவில் Betnovate n க்ரீமின் பயன்கள் என்ன.? பக்கவிளைவுகள் என்ன.? உள்ளிட்ட பல விவரங்களை இப்பதிவில் படித்து தெரிந்து கொள்ளலாம் வாங்க.
பெட்னோவேட் என் க்ரீம் என்பது பீட்டாமெத்தாசோனின் கலவையாகும். கார்டிகோஸ்டீராய்டு மற்றும் நியோமைசின் கலவையான இது ஒரு ஆண்டிபயாடிக் ஆகும். இது பெரும்பாலும் தோல் நோய்களுக்கு சிகிச்சை அளிக்க பயன்படுகிறது. அதனை பற்றிய விவரங்களை பின்வருமாறு பார்க்கலாம் வாங்க.
குறிப்பு: மருத்துவரின் அறிவுரை இல்லாமல் எந்த மாத்திரையும் நீங்களாக பயன்படுத்த கூடாது..!
Tretinoin கிரீம் எதற்காக பயன்படுத்தப்படுகிறது..
பயன்கள்:
Betnovate n க்ரீம் ஆனது, சொரியாஸிஸ், டெர்மடிடிஸ், மற்றும் ஆஞ்சியோயெடீமா போன்ற தோல் நோய்களால் ஏற்படும் ஒவ்வாமை நிலைமைகளின் சிகிச்சைக்கு இந்த மருந்து பயன்படுகிறது. இவற்றின் மேலும் பயன்பாடுகள் பின்வருமாறு:
- நுண்ணுயிர் தொற்று
- தோல் சிவத்தல்
- காயங்கள்
- அரிப்பு
- புண்கள்
- கண் நோய்
- வயிற்றுப்போக்கு
- வீக்கம்
பக்கவிளைவுகள்:
Betnovate n க்ரீம் பயன்படுத்தும் நபர்களில் ஒரு சிலருக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள பக்கவிளைவுகள் ஏற்படலாம்.
- தோல் நமைச்சல்
- தோல் எரிச்சல்
- முகப்பரு ஏற்படுதல்
- தோலின் நிறம் மாறுதல்
- கண் எரிச்சல்
Betnovate n க்ரீம் யாரெல்லாம் பயன்படுத்தக்கூடாது.?
கரிப்பிணி பெண்கள் மற்றும் தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் இம்மருந்தை பயன்படுத்தக்கூடாது. மருத்துவரிடம் ஆலசோனை பெற்று அதற்கு மாறாக வேறு வகையான மருந்தை பயன்படுத்தலாம்.
இம்மருந்தை பயன்படுத்தும் நபர்கள் மருத்துவர் கூறிய அளவிலேயே பயன்படுத்தி வர வேண்டும். ஏனென்றால் ஒவ்வொருவருக்கும் உடல்நிலை என்பது மாறுபடும்.
Teneligliptin மாத்திரையின் பயன்கள் மற்றும் பக்க விளைவுகள்..!
இதுபோன்ற மருந்து மாத்திரைகளின் பயன்கள் மற்றும் பக்கவிளைவுகள் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | மருந்து |