Bisacodyl மாத்திரையின் பயன்கள் மற்றும் பக்கவிளைவுகள்..!

Advertisement

Bisacodyl Tablet Uses in Tamil

வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். இக்காலத்தில், சாப்பிடும் பொருள் எதுவாக இருந்தாலும் அதனை நன்கு ஆராய்ந்து தான் சாப்பிட வேண்டிருக்கிறது. அதாவது, நாம் சாப்பிடும் உணவுப்பொருள், மருந்து என எதுவாக இருந்தாலும், அப்பொருளின் நன்மைகள் என்ன.? பக்கவிளைவுகள் என்ன.? என்பதை அறிந்து அதன் பிறகு தான் சாப்பிட வேண்டும்.எந்த நேரத்தில் என்ன நோய் வருகிறது என்பதே தெரிவதில்லை.

நாம் எடுத்துக்கொள்ளும் ஆரோக்கியமற்ற உணவுகளின் மூலம் தான் நமக்கு பல்வேறு நோய்கள் வருகிறது. எனவே, நம் சாப்பிடும் உணவு பொருள் ஆனது தூய்மையாக இருக்க வேண்டியது அவசியம். அதேபோல், நாம் உட்கொள்ளும் மருந்துகளை பற்றிய விவரங்களை அறிந்து கொண்டு அதன் பிறகு தான் உட்கொள்ள வேண்டும். அதாவது, நாம் ஏதேனும் உடல்நல பிரச்சனையால் மருந்தினை உட்கொண்டு வருகிறோம் என்றால், அம்மருந்தின் பயன்கள் என்ன.? இதனை சாப்பிட்டால் நமக்கு ஏதெனும் பக்கவிளைவுகள் வருமா.? என்பதை அறிந்த பிறகே மருந்தினை உட்கொள்ள வேண்டும். அந்த வகையில், நீங்கள் Bisacodyl மாத்திரையை உட்கொள்ள போகிறீர்கள் என்றால், அம்மாத்திரையின் பயன்கள் என்ன.? பக்கவிளைவுகள் என்ன.? என்பதை பின்வருமாறு படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

குறிப்பு: மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் எந்த மாத்திரையும் வாங்கி தானாக பயன்படுத்த கூடாது..!

What is the Use of Bisacodyl Tablets in Tamil:

பிசாகோடைல் (Bisacodyl) மாத்திரை ஆனது ஒரு மலமிளக்க தூண்டுதல் மருந்தாக பயன்படுத்தப்படுகிறது. மலச்சிக்கலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இம்மருந்து வழங்கப்படுகிறது. இம்மாத்திரை குடல் இயக்கத்தை ஊக்குவிப்பதன் மூலம் மலச்சிக்கல் பிரச்சனையை போக்குகிறது. இது, குடலின் தசைகளை சுருங்கச் செய்து செரிமானப் பாதை வழியாக மலத்தை நகர்த்த செய்து மலத்தை வெளியேற்ற செய்கிறது.

Bisacodyl Tablet Uses in Tamil

Bisacodyl Tablet Side Effects in Tamil:

Bisacodyl மாத்திரையை பயன்படுத்தும் நபர்களில் ஒரு சிலருக்கு பின்வருமாறு கொடுக்கப்பட்டுள்ள பக்கவிளைவுகள் ஏற்படலாம். எனவே, இதுபோன்ற பக்கவிளைவுகளை நீங்கள் தொடர்ந்து அனுபவித்தால் உடனே மருத்துவரை சென்று பார்க்க வேண்டும்.

  • வயிற்று வலி
  • சோர்வு
  • வயிற்றுப்போக்கு
  • குமட்டல்
  • தசைப்பிடிப்பு
  • வாந்தி
  • விரைவான அல்லது ஒழுங்கற்ற இதயத் துடிப்பு
  • தலைச்சுற்றல்
  • மனநிலைக் கோளாறுகள்
  • முகம், உதடுகள், நாக்கு அல்லது தொண்டை வீக்கம்

CPM மாத்திரை எதற்காக பயன்படுகிறது

Bisacodyl Tablet யார் பயன்படுத்தக்கூடாது.?

  • கர்ப்பிணி பெண்கள் மற்றும் தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் மருத்துவரின் அனுமதி இல்லாமல் இம்மாத்திரையை எடுத்துக்கொள்ள கூடாது.
  • வயதில் பெரியவர்கள் Bisacodyl மாத்திரையை மருத்துவரின் அனுமதி இல்லாமல் பயன்படுத்த கூடாது.
  • 2 வயதுக்குட்பட்ட குழந்தைக்கு Bisacodyl மாத்திரையை கொடுக்க கூடாது.
இதுபோன்ற மருந்து மாத்திரைகளின் பயன்கள் மற்றும் பக்கவிளைவுகள் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> மருந்து

👉இதுபோன்ற பயனுள்ள தகவல்களை அறிந்துகொள்ள pothunalam.com தளத்தை பார்வையிடவும்.

Advertisement