Calapure Lotion Uses in Tamil
நம் முன்னோர்களின் காலத்தில் ஏதவாது உடம்பில் பிரச்சனை ஏற்பட்டால் நாட்டு மருந்தை பயன்படுத்தி சரி செய்தனர். அவர்களுக்கு மட்டுமில்லாமல் குழந்தைகளுக்கும் ஆங்கில மருந்துகளை பயன்படுத்தாமல் நாட்டு மருந்துகளை பயன்படுத்தி பிரச்சனைகளை சரி செய்தனர். ஆனால் இன்றைய கால கட்டத்தில் சிறியதாக அடிபட்டாலும் மருத்துவரை தேடி தான் ஓடுகின்றோம். அவர்கள் பார்த்து விட்டு அதற்கான சிகிச்சைகளை செய்து மருந்து, மாத்திரைகளை எழுதி தருகின்றனர். மருத்துவர் மருந்து, மாத்திரை எழுதி கொடுப்பதால் அதில் நன்மைகள் மட்டும் தான் உள்ளது என்று நினைக்க கூடாது. ஏனென்றால் அதில் பக்க விளைவுகளும் அடங்கியுள்ளன. நீங்கள் பயன்படுத்தும் மருந்து, மாத்திரைகளின் பயன்கள் மற்றும் பக்க விளைவுகளை தெரிந்து கொள்ளல் வேண்டும். அந்த வகையில் இன்றைய பதிவில் Calapure லோஷன் பயன்கள் மற்றும் விளைவுகளை அறிந்து கொள்வோம் வாங்க..
குறிப்பு: மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் எந்த மாத்திரையும் வாங்கி தானாக பயன்படுத்த கூடாது..!
Calapure லோஷன் பயன்கள்:
- அரிப்பு மற்றும் நமைச்சல்
- பூச்சிக் கடி
- தோல் ஒவ்வாமை, எக்ஸிமா மற்றும் சொரியாசிஸ்
- சின்னம்மை
மேல் கூறப்பட்டுள்ள பிரச்சனைகளுக்கு மருந்தாக பயன்படுகிறது.
பக்க விளைவுகள்:
இந்த லோஷனை பயன்படுத்துவதால் ஏதும் பக்க விளைவுகள் ஏற்படாது. அப்படி ஏதும் உங்களுக்கு பக்க விளைவுகள் நேர்ந்தால் மருத்துவரை அணுக வேண்டும்.
Vizylac மாத்திரை பயன்கள் மற்றும் பக்க விளைவுகள் |
Calapure லோஷன் எப்படி வேலை செய்கிறது:
Calapure A லோஷன் என்பது தடிமனான மாய்ஸ்சரைசரை உருவாக்க, கலமைன், அலோ வேரா மற்றும் லைட் லிக்விட் பாரஃபின் ஆகியவற்றின் கலவையிலிருந்து தயாரிக்கப்படுகிறது. இது சருமத்தை மென்மையாக்கும் மற்றும் சருமத்தைப் பாதுகாக்கும் மாய்ஸ்சரைசர். Calapure லோஷன் ஒரு கிருமி நாசினியாகவும் மற்றும் அரிப்புக்கு எதிராக செயல்படும் மருந்து ஆகும்.
பயன்படுத்துவது எப்படி.?
இந்த லோஷனை பயன்படுத்துவதற்கு முன் குளித்து விட வேண்டும். பிறகு பாதிக்கப்பட்ட பகுதியில் லோஷனை பெதுவாக தடவ வேண்டும்.
மருத்துவர் கூறிய அளவில் தான் இந்த லோஷனை பயன்படுத்த வேண்டும்.
முன்னெச்சரிக்கை:
நீங்கள் வேறு ஏதேனும் பிரச்சனைக்கு மருந்து, மாத்திரை எடுத்து கொண்டால் அதனை பற்றிய முழு தகவலையும் தெரிவிக்க வேண்டும்.
மேலும் ஏதேனும் அலர்ஜி பிரச்சனை இருந்தாலும் மருத்துவரிடம் தெரிவிக்க வேண்டும்.
Zenflox Plus மாத்திரையின் பயன்கள் மற்றும் பக்க விளைவுகள் |
இதுபோன்ற மருந்து மாத்திரைகளின் பயன்கள் மற்றும் பக்கவிளைவுகள் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | மருந்து |