Candid b Cream Uses in Tamil | Clotrimazole and Beclomethasone Candid b Cream Uses in Tamil
இன்றைய காலத்தில் ஏற்படும் சுற்றுசூழல் மாசுபாடு காரணமாக உடலில் மற்றும் முகத்தில் பல்வேறு பிரச்சனைகள் ஏற்படுகிறது. இந்த பிரச்சனைகளை சரி செய்வதற்கு கடையில் விற்கும் கிரீம்களை வாங்கி பயன்படுத்துகிரார்கள். இன்னும் சில பேர் மருத்துவரை நாடி தான் செல்கின்றார்கள். அவர் நம் உடலில் ஏற்பட்டிருக்கும் பிரச்சனைக்கு ஏற்றது போல மருந்து, மாத்திரைகளை எழுதி தருகிறார்கள். இதனால் நம்முடைய பிரச்சனைகள் சரியாகிறது. ஆனால் இதனால் பக்க விளைவுகளும் ஏற்படுகிறது. அதனில் நீங்கள் பயன்படுத்தும் கிரீம்களில் உள்ள நன்மைகள் மற்றும் தீமைகளை அறிந்து கொண்டு சாப்பிட வேண்டும். அந்த வகையில் இன்றைய பதிவில் Candid b கிரீமில் உள்ள பயன்கள் மற்றும் பக்க விளைவுகளை அறிந்து கொள்வோம் வாங்க.
குறிப்பு: மருத்துவரின் அறிவுரை இல்லாமல் எந்த மாத்திரையும் தானாக பயன்படுத்த கூடாது..!
Candid b Cream Uses:
நாம் பயன்படுத்தும் ஒவ்வொரு மருந்தும், ஒவ்வொரு பயனை கொடுக்க கூடியதாக இருக்கிறது. அதனால் ஒவ்வொரு மருந்தின் நன்மைகள் மற்றும் தீமைகளை அறிந்து கொண்டு பயன்படுத்துவது நல்லது.
கேண்டிட் பி கிரீம் (Candid B Cream) என்பது க்ளென்மார்க் பார்மாசூட்டிகல்ஸ் லிமிடெட் நிறுவனத்தால் தயாரிக்கப்படும் கிரீம் ஆகும். படர்தாமரை டினெ வெர்சிகோலார் பூஞ்சை தொற்று, சேற்று புண் போன்ற பிரச்சனைகளை சரி செய்வதற்கு மருந்தாக பயன்படுத்தப்படுகிறது.
பக்க விளைவுகள்:

- எரிச்சல்
- கொப்புளங்கள்
- தோல் உதிர்தல்
- வலி
மேல் கூறப்பட்டுள்ள பக்க விளைவுகள் தொடர்ந்து ஏற்பட்டால் மருத்துவரை நாட வேண்டும். ஒருவேளை மேல் கூறியுள்ள பக்க விளைவுகள் இல்லாமல் வேறு ஏதேனும் பக்க விளைவுகளை சந்தித்தால் மருத்துவரை நாடி ஆலோசனை பெற வேண்டும்.
நார்ஃப்ளாக்ஸ் 400 மிகி மாத்திரையின் பயன்கள் மற்றும் பக்க விளைவுகள்1
முன்னெச்சரிக்கை:
கர்ப்பிணி பெண்கள் மற்றும் தாய்ப்பால் தாய்மார்கள் இந்த கிரீமை மருத்துவர் ஆலோசனை இல்லாமல் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.
நீங்கள் வேறு ஏதேனும் பிரச்சனைக்காக மருந்து, மாத்திரை எடுத்து கொண்டால் அதனை பற்றிய முழு தகவலையும் மருத்துவரிடம் தெரிவிக்க வேண்டும்.
ஒருவேளை நீங்கள் வேறு ஏதேனும் பிரச்சனைக்காக கிரீம் பயன்படுத்தி அதனால் ஏதேனும் பக்க விளைவுகளை சந்திருந்தால் அதனை பற்றிய தகவலையும் மருத்துவரிடம் தெரிவிக்க வேண்டும்.
இந்த மருந்தை வெளிப்புறத்தில் மட்டுமே பயன்படுத்த வேண்டும். அதனால் வாய் மற்றும் உதடும் கண் போன்ற பகுதிகளில் தடவுவதை தவிர்க்க வேண்டும்.
பயன்படுத்தும் முறை:
உங்களுக்கு பிரச்சனை உள்ள இடத்தை வெந்நீரை பயன்படுத்தி சுத்தமாக கழுவி கொள்ளுங்கள்.
அதன் பிறகு இந்த மருந்தை பிரச்சனை உள்ள இடத்திற்கு மேலே மருத்துவர் கூறிய அளவில் தடவி கொள்ளுங்கள்.
முக்கியமாக படர்தாமரை டினெ வெர்சிகோலார் பூஞ்சை தொற்று, சேற்று புண் போன்ற பிரச்சனை உள்ள இடத்தை சுத்தமாக வைத்து கொள்ளுங்கள்.
Safexim o மாத்திரையின் பயன்கள் மற்றும் பக்க விளைவுகள்
| இதுபோன்ற மருந்து மாத்திரைகளின் பயன்கள் மற்றும் பக்கவிளைவுகள் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | மருந்து |














