Cefix 200 Tablet Uses in Tamil
உடல்நிலை குறைபாடு ஏற்பட்டால் நாம் உடனே எடுத்து கொளவ்து மாத்திரை தான். இந்த மாத்திரையை தானாகவே மெடிக்களில் சென்று என்ன செய்கிறதோ அதை சொல்லி மாத்திரை, மருந்து வாங்கி சப்போட்டா கூடாது. ஏனென்றால் மருத்துவரிடம் கான்பித்து மாத்திரை வாங்கி சாப்பிடும் அவர் நோயாளிக்கு ஏற்ற மருந்து அளவுகளை வழங்குவார். அதனால் உடலில் அதிக பிரச்சனை ஏற்படாது. என்னடா அதிக பிரச்சனை ஏற்படாது என்று சொல்கிறேன் என்று நினைக்கிறீர்களா.! மாத்திரைகளில் நன்மை மற்றும் தீமை இரண்டும் அடங்கியிருக்கிறது. அதனால்நீங்கள் சாப்பிடும் மாத்திரைகளை பற்றிய முழு விவரங்களை தெரிந்து கொண்டு சாப்பிடவும். அந்த வகையில் இன்றைய பதிவில் Cefix 200 மாத்திரை பயன்கள் மற்றும் பக்க விளைவுகளை அறிந்து கொள்வோம் வாங்க..
குறிப்பு: மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் எந்த மாத்திரையும் வாங்கி தானாக பயன்படுத்த கூடாது..!
Cefix 200 Tablet Uses in Tamil:
Cefix 200 மாத்திரையானது காது, மூக்கு, சைனஸ், சிறுநீரக தொற்று போன்றவற்றை சரி செய்ய மருந்தாக கொடுக்கப்படுகிறது. சுருக்கமாக சொன்னால் உடலில் ஏற்படும் பாக்ட்ரியா தொற்றை எதிர்த்து போராடுவதற்க்கு உதவுகிறது.
Vitagreat மாத்திரை பயன்கள் மற்றும் பக்க விளைவுகள்
Cefix 200 Tablet Side Effects:
- குமட்டல்
- வாந்தி
- வயிற்றுவலி
- வயிற்றுப்போக்கு
- அஜீரணம்
இந்த மாத்திரையை நீங்கள் எடுத்துக்கொண்ட பிறகு மேலே சொல்லப்பட்டுள்ள பக்க விளைவுகள் இல்லாமல் வேறு ஏதேனும் பக்க விளைவுகள் உங்களுக்கு தோன்றினால் அதனை மருத்துவரிடம் தெரிவிக்க வேண்டும்.
முன்னெச்சரிக்கை:
இந்த மாத்திரை எடுத்து கொள்ளும் போது மது அருந்துவதை தவிர்க்க வேண்டும்.
நீங்கள் கர்ப்பமாக இருந்தாலோ அல்லது கர்ப்பம் அடைவதற்கு திட்டமிட்டிருந்தாலோ மருத்துவர் ஆலோசனை இல்லாமல் இந்த மாத்திரையை எடுத்து கொள்ள கூடாது.
தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்கள் இந்த மாத்திரையை மருத்துவர் ஆலோசனை இல்லாமல் சாப்பிட கூடாது. ஏனென்றால் குழந்தைக்கு வாந்தி, வயிற்றுபோக்கு போன்ற பிரச்சனையை ஏற்படுத்தும்.
நீங்கள் வேறு ஏதும் பிரச்சனைக்கு மாத்திரை மருந்து எடுத்து கொண்டாலும் அதனை பற்றிய முழு விவரங்களையும் மருத்துவரிடம் தெரிவிக்க வேண்டும்.
மாத்திரை எப்படி வேலை செய்கிறது:
செஃபிக்ஸ் 200 மாத்திரையில் உள்ள செஃபிக்ஸைம் பாக்டீரியாவின் செல் சுவரின் வளர்ச்சியைத் தடுப்பதன் மூலம் செயல்படுகிறது.
Chymowok Forte மாத்திரையின் பயன்கள் மற்றும் பக்க விளைவுகள்
இதுபோன்ற மருந்து மாத்திரைகளின் பயன்கள் மற்றும் பக்கவிளைவுகள் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | மருந்து |