Cefixime Tablet-யின் பயன்கள் மற்றும் பக்க விளைவுகள் பற்றி அறியலாம் வாங்க..!

Advertisement

Cefixime Tablet-யின் பயன்கள் மற்றும் பக்க விளைவுகள் பற்றி அறியலாம் வாங்க..!

நண்பர்களுக்கு வணக்கம்.. இன்று நாம் Cefixime Tablet-யின் பயன்கள் மற்றும் பக்க விளைவு என்ன என்பதை பற்றி தான் தெரிந்துகொள்ள போகிறோம். இந்த Cefixime மாத்திரை பலவகையான நோய்களுக்கு மருத்துவர்களால் பரிந்துரைக்கப்படுகிறது. குறிப்பாக இந்த மாத்திரையை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பரிந்துரைக்கப்படுகிறது. அப்படி என்னதான் இந்த மாத்திரையில் பயன்கள் ஒளிந்துள்ளது, இந்த மாத்திரை நமது உடலில் எப்படி வேலை செய்கிறது என்று இந்த பதிவில் நாம் படித்தறியலாம் வாங்க.

குறிப்பு: மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் எந்த மாத்திரையும் வாங்கி தானாக பயன்படுத்த கூடாது..!

Cefixime மாத்திரை:Cefixime Tablet

இந்த Cefixime மாத்திரை பலவகையான தொற்று நோய்களுக்கு மருத்துவர்களாக பரிந்துரைக்கப்படுகிறது. அதாவது இந்த செஃபிக்ஸைம் (Cefixime) மாத்திரை  லேசான பாக்டீரியா தொற்றுக்களை குணப்படுத்த பயன்படுகிறது. இந்த எதிர்-பாக்டீரியல் மருந்து பாக்டீரியா பரவுவதை நிறுத்துகிறது. குறிப்பாக இந்த மருந்து இது பாக்டீரியா தொற்றுக்களுக்கு மட்டும் தான் சிகிச்சை அளிக்கிறது, மற்றபடி  காய்ச்சல் போன்ற வைரஸ் தொற்றுகளுக்கு இம்மருந்து வேலை செய்வதில்லை.

Cefixime மாத்திரை எடுத்துக்கொள்ளும் முறை:

இந்த Cefixime மாத்திரை மெல்லக்கூடிய மாத்திரைகலாகவும் மற்றும் திரவ கரைசல் வடிவத்திலும் இருக்கிறது. இந்த மாத்திரையை வழக்கமாக 12 முதல் 14 மணி நேர இடைவெளியில் எடுத்துக்கொள்ள வேண்டும். இதை தினமும் ஒரே நேரத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும்.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
ட்ராபிக் எம்.எஃப் மாத்திரையின் பயன்கள் மற்றும் பக்கவிளைவுகள்..!

பயன்கள் – Cefixime Tablet Uses in Tamil:

இந்த Cefixime Tablet பின்வரும் நோய்களின் நிலை மற்றும் அறிகுறிகளில், சிகிச்சை, கட்டுப்படுத்தல், தடுப்பு, மற்றும் முன்னேற்றம் ஆகியவற்றுக்கு பயன்படுத்தப்படுகிறது.

  • சிறுநீர்க் குழாய் தொற்று
  • பாக்டீரியா தொற்று
  • கடுமையான மூச்சுக்குழாய் அழற்சி அதிகரித்தல்
  • வெட்டை நோய்
  • பாரிங்கிடிஸ்ஸுடன் மற்றும் அடிநா
  • இடைச்செவியழற்சியில்
  • சிறுநீர் குடல் நோய்த்தொற்றுகள்
  • பாரிங்கிடிஸ்ஸுடன்
  • காது மற்றும் மூக்கில் பாக்டீரிய நோய்த்தொறுகள்
  • புரையழற்சி
  • சிறுநீர் பாதை தொற்று

பக்க விளைவுகள் – Cefixime Tablet Side Effects in Tamil:

இந்த மாத்திரையில் சேர்க்கப்பட்டிருக்கும் பொருள்களில் இருந்து ஏற்படும் பக்க விளைவுகள் பின்வருமாறு. கீழ் கூறப்பட்டுள்ள பக்க விளைவுகள் அனைத்தும் சாத்தியமானது இருந்தாலும் எப்பொழுதும் இந்த பக்க விளைவுகள் ஏற்படுவதில்லை. அப்படி கீழ் கூறப்பட்டுள்ள பக்க விளைவுகள் உங்களுக்கு ஏற்பட்டால் உடனடியாக உடல்நல மருத்துவரிடம் சென்று அதற்க்கான சிகிச்சையை கட்டாயமாக பெறுங்கள்.

  • தலைச்சுற்று
  • வயிற்றுப்போக்கு
  • வயிற்று வலி
  • குமட்டல்
  • செரிமானமின்மை
  • வாந்தி இது போன்ற பக்கவிளைவுகள் ஏற்படலாம்.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
லிப்ராக்ஸ் மாத்திரையின் பயன்கள் மற்றும் பக்கவிளைவுகள்

இதுபோன்ற மருந்து மாத்திரைகளின் பயன்கள் மற்றும் பக்கவிளைவுகள் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> மருந்து
Advertisement