செபலெக்சின் மாத்திரை பயன்கள் மற்றும் பக்கவிளைவுகள்..!

Advertisement

செபலெக்சின் 250 மி.கி மாத்திரை பயன்கள் மற்றும் பக்கவிளைவுகள் – Cephalexin 250 mg Tablet Uses in Tamil

மாறிக்கொண்டே இருக்கும் லைப் ஸ்டைல் காரணமாக நமது உடலில் திடீர் என்று பல வகையான உடல் சார்ந்த பிரச்சனைகள் வருகின்றன, குறிப்பாக நாம் சொல்ல வேண்டும் என்றால் நாம் சாப்பிடும் உணவுகளினாலும் பல வகையான உடல் சார்ந்த பிரச்சனைகள் வருகின்றன. அத்தகைய பிரச்சனைகளுக்கு நாம் மருந்து மாத்திரைகள் சாப்பிடுகிறோம். அப்படி சாப்பிடும் மருந்து மாத்திரைகள் பல வகையான பிரச்சனைகளை குணப்படுத்துகின்றன. இருப்பினும் அப்படி எடுத்துக்கொள்ளும் மருந்து மாத்திரைகளும் சில பக்கவிளைவுகளை ஏற்படுத்திவிடும். ஆக நாம் எந்த மருந்து மாத்திரைகளையும் சாப்பிடுவதற்கு முன் அதனுடைய பயன்கள் மற்றும் பக்கவிளைவுகளை பற்றி தெரிந்துகொள்ள வேண்டும். ஆக உங்களுக்கு உதவிடும் வகையில் இன்று நாம் செபலெக்சின் மாத்திரையின் பயன்கள் மற்றும் பக்கவிளைவுகளை பற்றி பதிவு செய்துள்ளோம் படித்து பயன்பெறுங்கள்.

குறிப்பு: மருத்துவர் பரிந்துரை இல்லாமல் எந்த ஒரு மருந்தையும் தானாகவே பயன்படுத்த வேண்டாம்..

செபலெக்சின் மாத்திரை பயன்கள் – Cephalexin Tablet Uses in Tamil:

இந்த செபலெக்சின் மாத்திரை பாக்டீரியாக்களால் ஏற்படும் பலவகையான தொற்றுகளுக்கு சிகிச்சையளிக்க பயன்படுகிறது. குறிப்பாக சுவாச குழாயில் ஏற்படும் தொற்றுகள், எலும்பு தொற்றுகள், நடு காதில் ஏற்படும் நோய்த்தொற்று, சிறுநீர்ப் பாதை நோய்த்தொற்று, தோல் நோய்த்தொற்றுகள் மற்றும் தொண்டை புண் போன்றவை அடங்கும்.  மேலும் இந்த மாத்திரையை இதய அடைப்பான் அழற்சி நோயைத் தடுக்கவும் பயன்படுத்தப்படலாம்.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
Normaxin மாத்திரை பயன்கள் மற்றும் பக்க விளைவுகள்

எந்த வடிவில் கிடைக்கும்?

இந்த மருந்தானது மாத்திரை மற்றும் திரவ வடிவில் கிடைக்கும் மற்றும் இதனை வாய்வழியாக எடுத்துக்கொள்ளலாம்.

மருந்தின் அளவு:

உங்கள் வயது, ஆரோக்கியம், சிகிச்சை செய்யப்படும் நிலை மற்றும் அதன் தீவிரத்தன்மை ஆகியவற்றைப் பொறுத்தது, அதே போல் முதல் மருந்தளவுக்கு உங்கள் உடலின் எதிர்வினையையும் பொறுத்தது. ஆக உடல்நல மருத்துவரால் அறிவுறுத்தப் பட்ட அளவை மட்டும் எடுத்துக்கொள்ளுங்கள்.

மருந்தலாவை அதிகமாக எடுத்துக்கொண்டால் குமட்டல், வாந்தி, வயிறு வலி, வயிற்றுப்போக்கு மற்றும் சிறுநீரில் இரத்தம் ஆகியவை ஏற்படலாம்.

பக்கவிளைவுகள்:

வயிற்றுப் பகுதியில் அஜீரணம், வயிற்று வலி மற்றும் வீக்கம் அல்லது எரிச்சல் ஆகியவை பொதுவாக ஏற்படக்கூடிய பக்கவிளைவுகள் ஆகும். சில கடுமையான பக்க விளைவுகள் ஏற்பட்டால், உடனடியாக மருத்துவ உதவி தேவைப்படும்.

கடுமையான பக்கவிளைவுகள்:

  • படை நோய், முகம் மற்றும் உதடுகள் வீக்கம் அல்லது சுவாசிப்பதில் சிரமம் போன்றவை இதன் அறிகுறிகளாக இருக்கலாம்.
  • வாயில் வெள்ளைப் பட்டைகள், பிறப்புறுப்பில் வெளியேற்றத்தில் மாற்றங்கள்.
  • தொடர்ச்சியான வயிற்றுப்போக்கு உடன் மலத்தில் இரத்தம் அல்லது சளி இருத்தல்.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
ஏவியான் 400 பயன்பாடுகள்

குறிப்பு:

தாய்ப்பாலூட்டும் தாய்மார்கள், கர்ப்பிணிப் பெண்கள் அல்லது கர்ப்பமடையத் திட்டமிட்டுபவர்கள், தங்கள் நிலைமையைப் பற்றி முன்கூட்டியே தங்கள் மருத்துவரிடம் தெரிவிக்க வேண்டும்.

இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> Natural health tips in tamil
Advertisement