Cetirizine Hydrochloride Tablet Uses in Tamil
இன்றைய காலகட்டத்தில் உள்ள சுற்று சூழல் மாசுபாடு மற்றும் முறையற்ற வாழ்க்கைமுறையாலும் சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவருக்குமே ஏதாவது ஒரு உடல்நல குறைபாடு ஏற்படுகிறது. அதனை போக்குவதற்காக நாம் மருத்துவரை நாடி சென்று அவர் அளிக்கும் மருந்துகளை வாங்கி உட்கொள்வோம். அப்படி நமது உடல்நல பிரச்சனையை போக்க உதவும் மருந்துகளை பற்றிய முழுவிவரங்களையும் நாம் அறிந்து கொள்வது மிக மிக அவசியம். அதனால் தான் நமது பதிவின் வாயிலாக தினமும் ஒரு மருந்து பற்றிய முழுவிவரங்களையும் பதிவிட்டு வருகின்றோம். அதேபோல் இன்றைய பதிவில் செடிரிசின் ஹைட்ரோகுளோரைடு மாத்திரை பற்றிய முழுவிவரங்களையும் அறிந்து கொள்ள இருக்கின்றோம். அதனால் இந்த பதிவை முழுதாக படித்து பயன் பெறுங்கள்.
குறிப்பு: மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் எந்த மாத்திரையும் வாங்கி தானாக பயன்படுத்த கூடாது..!
கால்சியம் லாக்டேட் மாத்திரையை பயன்படுத்துபவரா நீங்கள் அப்போ இதை தெரிஞ்சிக்காம இருந்தால் எப்படி
Cetirizine Hydrochloride Tablet Uses in Tamil:
இந்த செடிரிசின் ஹைட்ரோகுளோரைடு மாத்திரையானது அரிப்பு, தும்மல், மூக்கடைப்பு மற்றும் நிறுத்த கண்கள் போன்ற ஒவ்வாமை பிரச்சனைகளுக்கு சிகிச்சை அளிக்கின்றது.
மேலும் இது படை நோயினால் ஏற்படும் அரிப்பு மற்றும் வீக்கம் ஆகியவற்றுக்கும் சிகிச்சை அளிக்கின்றது. இதில் ஆன்டிஹிஸ்டமைனாக உள்ளதால் உங்களின் உடலில் உள்ள இரசாயனத்தை குறைப்பதன் மூலம் வேலை செய்கிறது.
இந்த மாத்திரையில் பல மி.லிகள் இருப்பதால் மருத்துவர் அளித்த அளவினை மட்டும் உட்கொள்ளுங்கள் மாறாக மருத்துவர் அளித்த அளவினை விட அதிகமாகவோ அல்லது குறைவாகவோ உட்கொண்டால் பல பக்க விளைவுகளை சந்திக்க நேரிடும்.
இது மாத்திரை மற்றும் சிரப் வடிவத்திலும் கிடைக்கிறது. மேலும் இதனை நீங்கள் உணவுடனும் அல்லது உணவு இல்லாமலும் எடுத்து கொள்ளலாம்.
Cetirizine Hydrochloride Tablet Side Effects in Tamil:
- சீரற்ற இதயத்துடிப்பு
- பலவீனம்
- தூக்கமின்மை
- குழப்பம்
- பார்வை பிரச்சனைகள்
- மயக்கம்
- குமட்டல்
- மலச்சிக்கல்
மேலே கூறப்பட்டுள்ளவையே Cetirizine Hydrochloride மாத்திரையை எடுத்து கொள்வதால் ஏற்படும் பொதுவான பக்கவிளைவுகள் ஆகும்.
முன்னெச்சரிக்கை:
இந்த Cetirizine Hydrochloride மாத்திரையை பயன்படுத்துவதற்கு முன்னால் உங்களது தற்போதைய மருந்து பட்டியலை மருத்துவரிடம் தெரிவிக்க வேண்டும்.
அதேபோல் நீங்கள் கர்பமாகவோ அல்லது தாய்ப்பால் அளித்து கொண்டிருக்கும் தாய் என்றால் நீங்கள் இந்த மருந்தினை எடுத்து கொள்வதற்கு முன்னாள் உங்களின் மருத்துவரின் ஆலோசனையை கண்டிப்பாக பெற்று கொள்ளுங்கள்.
புகையிலை பயன்படுத்துவோர் மற்றும் மது அருந்துவோர் இந்த மருந்தினை எடுத்து கொள்வதை தவிர்ப்பது நல்லது.
குறிப்பு: இங்கே கொடுக்கப்பட்ட தகவல்கள் மருந்தின் உப்பு உள்ளடக்கத்தை அடிப்படையாக கொண்டவை. மருந்தின் பயன்கள் மற்றும் பக்க விளைவுகள் ஒவ்வொரு நபருக்கும் மாறுபடும்.
Clopidogrel மாத்திரையை பயன்படுத்துவதற்கு முன்னால் இதை தெரிஞ்சிக்கோங்க
இதுபோன்ற மருந்து மாத்திரைகளின் பயன்கள் மற்றும் பக்கவிளைவுகள் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | மருந்து |