வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

செடிரிசின் சிரபின் பயன்கள் மற்றும் பக்க விளைவுகள் பற்றி உங்களுக்கு தெரியுமா..?

Updated On: December 16, 2024 6:53 PM
Follow Us:
---Advertisement---
Advertisement

Cetirizine Syrup Uses in Tamil

பொதுவாக நமது உடல் நலத்தில் ஏதாவது ஒரு குறைபாடு என்றால் மருத்துவரை அணுகி மருந்துகளை வாங்கி உட்க்கொள்வது நல்லது. ஆனால் இன்றைய காலக்கட்டத்தில் அனைவருமே மெடிக்கல் கடைக்கு சென்று மருந்துகளை வாங்கி உட்கொள்வதை பழக்கமாக வைத்திருக்கின்றோம். அப்படி மருத்துவரை அணுகாமல் நாமே மருந்துவாங்கி உட்கொள்வது தவறு. ஆனால் மிகவும் தவிர்க்கமுடியாத சூழலில் மட்டும் இப்படி மருத்துவரை அணுகாமல் மருந்துகளை வாங்கி உட்கொள்கிறீர்கள் என்றால், அப்படி நாம் உட்கொள்ளும் மருந்து எந்தெந்த நோய்களுக்கு தீர்வாக அமையும் என்பதை பற்றிய முழுவிவரங்களையும் தெரிந்து கொண்டு பிறகு உட்கொள்ளுங்கள். அந்தவகையில் இன்றைய பதிவில் செடிரிசின் சிரப் பற்றிய தகவலை பார்க்க இருக்கின்றோம். அதனால் இன்றைய பதிவை முழுதாக படித்து இந்த செடிரிசின் சிரப் எந்தெந்த நோய்களுக்கு தீர்வாக அமையும் என்பதை எல்லாம் அறிந்து கொண்டு பயன் பெறுங்கள்.

குறிப்பு: மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் எந்த மாத்திரையும் வாங்கி தானாக பயன்படுத்த கூடாது..!

பாண்டோப்ரசோல் 40 மி.கி மாத்திரையை பயன்படுத்துவதற்கு இதை கண்டிப்பாக தெரிஞ்சிக்கோங்க

Cetirizine Syrup Uses in Tamil:

Cetirizine Syrup Side Effects in Tamil

பொதுவாக இந்த செடிரிசின் சிரப் (Cetrizine Syrup) என்பது அரிப்பு, தும்மல், மூக்கடைப்பு மற்றும் நீர்த்த கண்கள் போன்ற ஒவ்வாமை அறிகுறிகளுக்கு சிகிச்சையளிக்க உதவும் மருந்து ஆகும்.

மேலும் இது படை நோய் காரணமாக ஏற்படும் வீக்கம் அல்லது அரிப்பு ஆகியவற்றிற்கு சிகிச்சை அளிக்க உதவுகிறது. இந்த மருந்தானது மாத்திரை, கேப்சூல் (Capsule) அல்லது பாகு (Syrup) வடிவத்தில் கிடைக்கிறது இதனை நீங்கள் மருத்துவரின் ஆலோசனையுடன் எவ்வாறு வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளலாம்.

இந்த மருந்தினை மருத்துவர் அளித்த அளவைவிட அதிகமாகவோ குறைவாகவோ எடுத்து கொள்ளாதீர்கள். அப்படி எடுத்து கொண்டால் பல பக்கவிளைவுகளை சந்திக்க நேரிடும்.

Cetirizine Syrup Side Effects in Tamil:

செடிரிசின் சிரப்பினை பயன்படுத்துவதால்,

  • வயிற்று வலி
  • வாந்தி
  • வயிற்றுப்போக்கு
  • வாய் வறட்சி
  • சோர்வு
  • சிறுநீர் பிரச்சனை
  • பார்வையில் குறைபாடு
  • தூக்கமின்மை
  • சீரற்ற இதயத்துடிப்பு போன்ற பக்கவிளைவுகள் ஏற்படும் வாய்ப்புள்ளது. அதனால் இதில் ஏதாவது ஒரு பக்க விளைவுகள் நீடித்தால் உடனடியாக மருத்துவரிடம் சென்று ஆலோசனை பெற்று கொள்ளுங்கள்.

முன்னெச்சரிக்கை:

இந்த செட்ரைசின் சிரப்பினை பயன்படுத்துவதற்கு முன்னால் உங்களது தற்போதைய மருந்து பட்டியலை மருத்துவரிடம் தெரிவிக்க வேண்டும்.

மேலும் நீங்கள் கல்லீரல் அல்லது சிறுநீரகம் சம்பந்தமான உபாதைகளினால் பாதிக்கப்பட்டவராக இருந்தாலும் மருத்துவரிடம் தெரிவித்து அவரின் ஆலோசனையை பெற வேண்டும்.

தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் மற்றும் கர்ப்பமாக இருப்பவர்கள் இந்த மருந்தை உட்கொள்வதை தவிர்ப்பது நல்லது.

குறிப்பு: இங்கே கொடுக்கப்பட்ட தகவல்கள் மருந்தின் உப்பு உள்ளடக்கத்தை அடிப்படையாக கொண்டவை. மருந்தின் பயன்கள் மற்றும் பக்க விளைவுகள் ஒவ்வொரு நபருக்கும் மாறுபடும்.

பான்டோப் மாத்திரையை பயன்படுத்துவதால் இவ்வளவு நடக்குமா

இதுபோன்ற மருந்து மாத்திரைகளின் பயன்கள் மற்றும் பக்கவிளைவுகள் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> மருந்து
Advertisement

Neve Thitha

எனது பெயர் நிவேதிதா நான் பொதுநலம் இணையதளத்தில் உள்ளடக்க எழுத்தாளராக பணியாற்றி வருகின்றேன். நான் அனைத்து துறைகள் சம்மந்தப்பட்ட தகவல்களையும் உங்களுக்கு சுவாரசியமாக வழங்குகி கொண்டு வருகின்றேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now