Chericof LS Syrup Uses in Tamil
பொதுவாக பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவருக்கும் திடீரென ஏதாவது உடலில் பிரச்சனைகள் ஏற்படலாம். இதுமாதிரி இருக்கும் போது நாம் எப்போதும் உடனே மருத்துவரை அணுகுவதில்லை. முதலில் கடைகளில் விற்கும் மருந்தினை வாங்கி சாப்பிட்ட பிறகு அதற்கும் உடல் சரியாகவில்லை என்றால் மட்டுமே மருத்துவரை அணுகும் பழக்கம் பலரிடம் இருக்கிறது. ஆனால் நாம் இப்படி மருந்தினை எடுத்துக்கொள்வது நமது ஆரோக்கியத்திற்கு உகந்தது அல்ல. ஏனென்றால் நாம் எந்த ஒரு மருந்தினை எடுத்துக்கொண்டாலும் அதில் இருக்கும் பக்க விளைவுகள் பற்றியும் தெரிந்துக்கொள்ள வேண்டும். அந்த வரிசையில் இன்று Chericof LS Syrup-ன் பயன்கள் மற்றும் பக்க விளைவுகள் பற்றி தெரிந்துக்கொண்டு பயன்பெறலாம் வாங்க..!
குறிப்பு: மருத்துவரின் அறிவுரை இல்லாமல் எந்த மாத்திரையும் தானாகவே பயன்படுத்த கூடாது.
Chericof LS Syrup பயன்கள்:
Chericof LS சிரப் ஆனது தொண்டை புண், சளி மற்றும் இருமல் போன்ற பிரச்சனையை சரி செய்கிறது. அதனால் இது ஒரு சிறந்த மருந்தாக பல நபர்களுக்கு சரியான அளவில் மருத்துவர்களால் பரிந்துரை செய்யப்படுகிறது.
அதுமட்டும் இல்லாமல் இந்த சிரப்பானது ஆஸ்துமா மற்றும் நெஞ்சில் ஏற்படும் எரிச்சல் போன்றவற்றையும் சரி செய்ய உதவுகிறது.
இத்தகைய Chericof LS சிரப் சளியினால் ஏற்படும் நுரையீரல் வீக்கத்தையும் குணப்படுத்துகிறது. Chericof LS சிரப் பல நோய்களுக்கு நன்மை தரக்கூடியதாக இருந்தாலும் கூட அதனை சரியான அளவில் மருத்துவரின் ஆலோசனை படி மட்டுமே எடுத்துக்கொள்வது ஆரோக்கியத்திற்கு நல்லது.
Chericof LS Syrup பக்க விளைவுகள்:
- உடல் சோர்வு
- வாந்தி
- செரிமான கோளாறு
- வயிற்றுப்போக்கு
- நரம்பு தளர்ச்சி
- திடீரென படபடப்பு
- வயிற்று வலி
- நெஞ்சு எரிச்சல்
- வாயில் வறட்சி
- தலை சுற்றல்
- தோளில் வெடிப்பு
- தசை பிடிப்பு
- தலை வலி
Chericof LS Syrup குடிப்பதன் விளைவாக மேலே சொல்லப்பட்டுள்ள பக்க விளைவுகள் இல்லாமல் உங்களுக்கு வேறு ஏதேனும் அறிகுறிகள் இருந்தாலும் கூட அதனை உடனே மருத்துவரிடம் கூற வேண்டும்.
Cefixime Tablet-யின் பயன்கள் மற்றும் பக்க விளைவுகள் பற்றி அறியலாம் வாங்க..! |
முன்னெச்சரிக்கை:
இந்த மருந்தினை மருத்துவர் உங்களுக்கு பரிந்துரை செய்கிறார் என்றால் நீங்கள் மது அருந்துதல் மற்றும் சிகரெட் பிடித்தல் போன்றவற்றையினை செய்தால் அதனை மருத்துவரிடம் கூற வேண்டும். ஏனென்றால் அப்போது தான் மருத்துவர் உங்களுடைய உடல் நிலை அறிந்து சரியான அளவில் Chericof LS Syrup-னை பரிந்துரை செய்வார்.
குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் மற்றும் கர்ப்பமாக இருக்கும் பெண்கள் அதனை மறைக்க கூடாது. அதனை தெளிவாக மருத்துவரிடம் தெரிவிக்க வேண்டும்.
உடலில் கல்லீரல் மற்றும் நுரையீரல் தொடர்பான பிரச்சனைகள் இருந்தால் அதனை மருத்துவரிடம் கூறினால் தான் அதற்கு ஏற்றவாறு அவர் Chericof LS Syrup-னை ஆலோசனை செய்வார்.
அதுபோல நீங்கள் முக்கியமாக தற்போதைய உணவு முறை மற்றும் வேறு ஏதேனும் மருந்துகள் எடுத்துக்கொண்டாலும் அதனை மருத்துவரிடம் கண்டிப்பாக கூற வேண்டும்.
இதையும் படியுங்கள்⇒ Digene Syrup குடிப்பதன் நன்மைகள் மற்றும் பக்க விளைவுகள்..!
இதுபோன்ற மருந்து மாத்திரைகளின் பயன்கள் மற்றும் பக்கவிளைவுகள் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | மருந்து |