Cheston Cold Tablet Uses
நாம் அனைவருக்கும் காய்ச்சல் வருவது என்பது சாதாரணமான ஒன்று. அதிலும் சிலருக்கு காய்ச்சல் என்பது அடிக்கடி வரும் ஒன்றாக இருக்கும். ஒரு சிலர் காய்ச்சல் வந்தவுடன் மாத்திரையினை போட்டு விடுவார்கள். மற்ற சிலர் காய்ச்சல் அதுவாகவே சரி ஆகிவிடும் என்று நினைத்து அப்படியே விட்டு விடுவார்கள். அந்த வகையில் பார்த்தால் நாம் அனைவரும் அதிகமாக காய்ச்சல், சளி, இருமல் இதுபோன்றவற்றைக்கு தான் மாத்திரையினை எடுத்துக்கொள்கிறோம். ஆனால் இத்தகைய மாத்திரையினை அடிக்கடி சாப்பிட்டாலும் கூட அதில் உள்ள பயன்கள் மற்றும் பக்க விளைவுகள் பற்றி நூற்றில் 1% கூட யோசித்து இருக்க மாட்டோம் என்பது தான் உண்மை. அந்த வகையில் இன்று Cheston Cold மாத்திரையில் உள்ள பயன்கள் மற்றும் பக்க விளைவுகள் என்ன என்று தெரிந்துக்கொள்ளலாம் வாங்க..!
குறிப்பு: மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் எந்த மாத்திரையும் வாங்கி தானாக பயன்படுத்த கூடாது..!
Cheston Cold மாத்திரை பயன்கள்:
- சளி
- இருமல்
- நாசியில் அலர்ஜி
- தலைவலி
- மூக்கில் இருந்து நீர் வடிதல் (அ) மூக்கு ஒழுகுதல்
- தும்மல்
- காது வலி
மேலே சொல்லப்பட்டுள்ள பல வகையான நோய்களுக்கு Cheston Cold மாத்திரை சிறந்த பயன்பாட்டை அளிக்கக்கூடிய ஒன்றாக இருக்கிறது.
மருந்தின் அளவு:
இந்த மாத்திரையினை தண்ணீருடன் மட்டும் மருத்துவர் கூறிய அளவில் எடுத்துகொள்ள வேண்டும். அதேபோல் எப்போது மருத்துவர் கூறிய அளவை விட அதிகமாக எடுத்துக்கொள்வதை தவிர்ப்பது நல்லது.
Becosules மாத்திரையின் பயன்கள் மற்றும் பக்க விளைவுகள்
Cheston Cold பக்க விளைவுகள்:
- அதிகப்படியான தூக்கம்
- குமட்டல்
- வாந்தி
- ஒழுங்கற்ற இதய துடிப்பு
- உடம்பில் அலர்ஜி
மேலே சொல்லப்பட்டுள்ள பக்க விளைவுகள் இல்லாமல் இந்த மாத்திரையினை சாப்பிட்ட பிறகு வேறு ஏதாவது பக்க விளைவுகள் இருந்தாலும் அதனை மருத்துவரிடம் கூற வேண்டும்.
அதேபோல் மருத்துவர் உங்களுக்கு எந்த மருந்தினை பரிந்துரை செய்தாலும் தற்போது உங்களின் நிலைமை மற்றும் வேறு ஏதேனும் மருந்துகள் எடுத்துக்கொண்டாலும் அதனையும் மருத்துவரிடம் மறைக்காமல் கூற வேண்டும்.
முன்னெச்சரிக்கை:
- இதய பிரச்சனை உள்ளவர்கள்
- கல்லீரல் பிரச்சனை உள்ளவர்கள்
- 12 வயதிற்கு கீழ் உள்ளவர்கள்
- தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள்
- கர்ப்பிணி பெண்கள்
இத்தகைய நபர்கள் இந்த மாத்திரையினை எடுத்துக்கொள்ளும் முன்பு முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.
Vitagreat மாத்திரை பயன்கள் மற்றும் பக்க விளைவுகள்
இதுபோன்ற மருந்து மாத்திரைகளின் பயன்கள் மற்றும் பக்கவிளைவுகள் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | மருந்து |