Chymowok Forte மாத்திரையின் பயன்கள் மற்றும் பக்க விளைவுகள்

Advertisement

Chymowok Forte Tablet Uses in Tamil

நம் முன்னோர்களின் காலத்தில் உணவே மருந்தாக இருந்தது. ஆனால் இன்றைய கால கட்டத்தில் மருந்தே உணவாக மாறிவிட்டது. உணவு முறை மற்றும் சுற்றுசூழல் மாசுபாடு காரணமாக குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை அனைவருமே நோய்களால் பாதிக்கப்படுகின்றனர். நோய்களை சரி செய்வதற்கு மாத்திரை, மருந்துகளை எடுத்து கொள்கிறோம். ஆனால் இவை நோயை சரி செய்வதற்கு பதிலாக நோய்களை அதிகப்படுத்தினால் மேலம் பிரச்சனை தானே. ஏனென்றால் நாம் சாப்பிடும் மாத்திரைகளில் நன்மைகளும் இருக்கிறது, தீமைகளும் இருக்கிறது. அதனை மாத்திரையை பற்றிய முழு தகவலையும் தெரிந்து கொண்டு சாப்பிடுவது நல்லது. உங்களுக்கு உதவும் வகையில் இன்றைய பதிவில் chymowok forte மாத்திரையின் நன்மைகள் மற்றும் தீமைகளை அறிந்து கொள்வோம் வாங்க..

குறிப்பு: மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் எந்த மாத்திரையும் வாங்கி தானாக பயன்படுத்த கூடாது..!

Chymowok Forte Tablet Uses in Tamil:

Chymowok Forte Tablet side effects in Tamil

Chymowok Forte T மாத்திரியானது உடலில் ஏற்படும் வலி மற்றும் வீக்கத்தை குறைப்பதற்கு உதவுகிறது. அறுவை சிகிச்சைக்கு பின் ஏற்படும் காயங்களை சரி செய்வதற்கு உதவுகிறது.

Chymowok Forte Tablet Side Effects:

  • வயிற்றுப்போக்கு
  • வயிற்று வலி

மேல் கூறப்பட்டுள்ள பக்க விளைவுகள் தொடர்ந்து இருந்தால் மருத்துவரை அணுக வேண்டும். ஒருவேளை மேல் கூறப்பட்டுள்ள  பக்க விளைவுகள் இல்லாமல் வேறு ஏதேனும் பக்க விளைவுகள் ஏற்பட்டால் அதனை பற்றியும் மருத்துவரிடம் தெரிவிக்க வேண்டும்.

Baclofen மாத்திரையின் பயன்கள் மற்றும் பக்க விளைவுகள்

முன்னெச்சரிக்கை:

நீங்கள் கர்ப்பமாக இருந்தாலோ அல்லது கர்ப்பம் அடைவதற்கு திட்டமிட்டிருந்தாலோ இந்த மாத்திரையை எடுத்து கொள்வதற்கு முன்பு மருத்துவரை அணுக வேண்டும்.

தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்கள் இந்த மாத்திரையை மருத்துவர் ஆலோசனை இல்லாமல் எடுத்து கொள்ள கூடாது.

Chymowok Forte மாத்திரை எடுத்து கொள்ளும் போது மது அருந்துவதை தவிர்க்க வேண்டும்.

நீங்கள் சிறுநீரகம், இதயம், நுரையீரல் சார்ந்த பிரச்சனை அல்லது வேறு ஏதும் பிரச்சனைக்கு மருந்து, மாத்திரை எடுத்து கொண்டால் அதனை பற்றி மருத்துவரிடம் தெரிவிக்க வேண்டும்.

Nicip 100 mg மாத்திரையின் பயன்கள் மற்றும் பக்க விளைவுகள் என்ன தெரியுமா 

மாத்திரை எப்படி வேலை செய்கிறது:

Chymowok Forte மாத்திரை சரியான செரிமானத்திற்கும் வயிற்றில் தேவையான புரதத்தை உறிஞ்சுவதற்கும் உதவும் என்சைம்களை (டிரிப்சின்-சைமோட்ரிப்சின்) கொண்டுள்ளது. இதன் மூலம் வீக்கத்தை குறைக்க உதவுகிறது.

இதுபோன்ற மருந்து மாத்திரைகளின் பயன்கள் மற்றும் பக்கவிளைவுகள் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> மருந்து
Advertisement