வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

சிஃப்ரான் 500 மிகி மாத்திரை பற்றிய தகவல்

Updated On: November 17, 2023 1:06 PM
Follow Us:
Cifran 500 Tablet Uses in Tamil
---Advertisement---
Advertisement

Cifran 500 Tablet Uses in Tamil

இன்றைய காலகட்டத்தில் சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவருக்கும் உடல்நல குறைபாடு ஏற்பட்டு கொண்டே தான் உள்ளது. அதனை சரி செய்வதற்காக பலவகையான மருந்து மாத்திரைகளை நாம் பயன்படுத்துவோம். அதாவது ஒரு சிலரின் வாழ்க்கை மருந்துகளில் தான் இயங்கி கொண்டிருக்கின்றது என்றே கூறலாம். ஆனால் நமது முன்னோர்களின் காலகட்டத்தில் இந்த நிலை எதுவும் இல்லை. ஏனென்றால் அவர்களின் காலகட்டத்தில் அவர்களின் வாழ்க்கைமுறை உணவு பழக்கங்கள் அனைத்தும் சரியாக இருந்தது. இன்றைய சூழலில் இவ்விரண்டுமே சரியாக இல்லை. அதனால் நமது உடல்நலத்தை சரிசெய்வதற்கு உதவும் மருந்து மாத்திரைகளை பற்றி நாம் சரியாக தெரிந்து கொள்ள வேண்டும். எனவே தான் இன்று சிஃப்ரான் 500 மிகி மாத்திரை பற்றிய தகவல்களை பதிவிட்டுள்ளோம். அதனால் இந்த பதிவை முழுதாக படித்து அந்த மாத்திரை பற்றிய முழுவிவரங்களையும் அறிந்து கொள்ளுங்கள்.

குறிப்பு: மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் எந்த மாத்திரையும் வாங்கி தானாக பயன்படுத்த கூடாது..!

ஜிங்க் மாத்திரையின் பயன்கள் மற்றும் பக்க விளைவுகள் பற்றிய தகவல்

Cifran 500 Tablet Uses in Tamil:

Cifran 500 Tablet Side Effects in Tamil

இந்த சிஃப்ரான் 500 மிகி மாத்திரையானது குயினோலோன் குடும்பத்தின் மருந்துகளில் உறுப்பினராக இருக்கும் ஒரு உயிரெதிரி மருந்து ஆகும். அதாவது இந்த மருந்தானது பாக்டீரியாக்களால் ஏற்படும் தொற்றுகளை குணப்படுத்துவதில் இது சிறப்பாக உள்ளது.

மேலும் இது நுரையீரல் அழற்சி, ஆந்த்ராக்ஸ், சிஃபிலிஸ், கொனோரியா, மூச்சுக்குழாய் அழற்சி, இரைநோய் மற்றும் பிளேக் போன்ற பாக்டீரிய தொற்றுகள் உள்ள நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க பயன்படுகிறது.

அதேபோல் இந்த சிஃப்ரான் 500 மிகி மாத்திரையானது தொண்டை, தோல், காது, மூக்கு, எலும்பின் உட்புழை, எலும்புகள், சுவாச மண்டலம், சிறுநீர்ப் பாதை ஆகியவற்றில் ஏற்படும் தொற்றுகளை எதிர்த்துப் போராட இந்த உயிரெதிரி மருந்து பயன்படுகிறது.

இந்த மருந்தில் பலவகையான மி.லி உள்ளதால் இதனை மருத்துவர் அளித்த அளவைவிட அதிகமாகவோ குறைவாகவோ எடுத்து கொள்ளாதீர்கள். அப்படி எடுத்து கொண்டால் பல பக்கவிளைவுகளை சந்திக்க நேரிடும்.

Livogen xt மாத்திரை பற்றிய தகவல்கள்

Cifran 500 Tablet Side Effects in Tamil:

இந்த சிஃப்ரான் 500 மிகி மாத்திரையை பயன்படுத்துவதால்,

  • தலைச்சுற்று
  • அரிப்பு
  • குமட்டல்
  • தலைவலி
  • நெஞ்சு வலி
  • மயக்கம்
  • வாய் புண்கள்
  • நெஞ்செரிச்சல்
  • சோர்வு போன்ற பக்கவிளைவுகள் ஏற்படும் வாய்ப்புள்ளது. அதனால் இதில் ஏதாவது ஒரு பக்க விளைவுகள் நீடித்தால் உடனடியாக மருத்துவரிடம் சென்று ஆலோசனை பெற்று கொள்ளுங்கள்.

முன்னெச்சரிக்கை:

இந்த சிஃப்ரான் 500 மிகி மாத்திரையினை பயன்படுத்துவதற்கு முன்னால் உங்களது தற்போதைய மருந்து பட்டியலை மருத்துவரிடம் தெரிவிக்க வேண்டும்.

இந்த மருந்து எடுத்து பிறகு அமில மற்றும் 2 மணிநேரத்திற்கு முன்னர் பாஸ்பேட் பைண்டர்கள் தவிர்க்க வேண்டும்.

குழந்தைகள் மற்றும் கர்ப்பிணி பெண்கள் இந்த மருந்தை எடுத்துக்கொள்வதற்கு முன் மருத்துவரின் ஆலோசனையை கண்டிப்பாக பெற்று கொள்ள வேண்டும்.

குறிப்பு: இங்கே கொடுக்கப்பட்ட தகவல்கள் மருந்தின் உப்பு உள்ளடக்கத்தை அடிப்படையாக கொண்டவை. மருந்தின் பயன்கள் மற்றும் பக்க விளைவுகள் ஒவ்வொரு நபருக்கும் மாறுபடும்.

டெல்மிசார்டன் 20 மி.கி மாத்திரை பற்றி யாருக்கும் தெரியாத சில குறிப்புகள்

இதுபோன்ற மருந்து மாத்திரைகளின் பயன்கள் மற்றும் பக்கவிளைவுகள் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> மருந்து

 

Advertisement

Neve Thitha

எனது பெயர் நிவேதிதா நான் பொதுநலம் இணையதளத்தில் உள்ளடக்க எழுத்தாளராக பணியாற்றி வருகின்றேன். நான் அனைத்து துறைகள் சம்மந்தப்பட்ட தகவல்களையும் உங்களுக்கு சுவாரசியமாக வழங்குகி கொண்டு வருகின்றேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now