Cilnidipine மாத்திரையில் உள்ள பயன்கள் மற்றும் பக்க விளைவுகள் என்னென்ன தெரியுமா..?

Advertisement

Cilnidipine Tablet Uses in Tamil

நம் முன்னோர்கள் காலத்தில் எல்லாம் எல்லா பிரச்சனைகளுக்கும் மருந்து மாத்திரைகளை எடுத்துக்கொள்ள மாட்டார்கள். ஏனென்றால் பெரும்பாலும் வீட்டு வைத்தியம் மூலமாகவே எந்த பிரச்சனையாக இருந்தாலும் சரி செய்து விடுவார்கள். அதனால் அதிகமாக மருந்து மற்றும் மாத்திரைகளை பயன்படுத்த மாட்டார்கள். அப்படி பார்த்தால் இந்த காலத்தில் உள்ள சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை என அனைவருமே அதிகமாக எந்த பிரச்சனையாக இருந்தாலும் உடனே மருந்து மாத்திரையினை தான் எடுத்துக்கொள்கிறார்கள். நம்முடைய உடலில் காணப்படும் பிரச்சனைகளுக்கு மருந்து மாத்திரைகளை எடுத்துக்கொள்வதினால் அவற்றில் இருந்து விடுபட்டு விடலாம்.

ஆனால் அதனால் ஏற்படும் பக்க விளைவுகளில் இருந்து நாம் வெளி வர முடியாது. எனவே சின்ன மாத்திரையாக இருந்தாலும் கூட அதில் ஏதோ ஒரு பக்க விளைவு என்பது இருந்து கொண்டு தான் உள்ளது. அதனால் இன்றைய பதிவில் நாம் எடுத்துக்கொள்ளும் Cilnidipine என்ற மாத்திரையில் உள்ள பயன்கள் மற்றும் பக்க விளைவுகள் என்ன என்பதை தெளிவாக பார்க்கலாம் வாங்க..!

குறிப்பு: மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் எந்த மாத்திரைமற்றும் ஊசி போன்றவற்றை  தானாக வாங்கி பயன்படுத்த கூடாது..!

Cilnidipine மாத்திரையின் பயன்கள்:

 cilnidipine tablet side effects in tamil

Cilnidipine மாத்திரை கீழ்கண்ட பிரச்சனைகளுக்கு தீர்வினை அளிக்கக்கூடிய ஒன்றாக இருக்கிறது.

  • உயர் இரத்த அழுத்தம்
  • இரத்த அழுத்தம்

மருத்துவரால் பரிந்துரை செய்யப்படும் இந்த மாத்திரை ஆனது உங்களுடைய பிரச்சனைகளுக்கு ஏற்றவாறு நாட்கள் மற்றும் மாதங்கள் என இந்த முறையில் ஆலோசனை செய்யப்படுகிறது.

மேலும் அதிகபட்சமாக இந்த மாத்திரை 1 என்ற அளவில் தான் கொடுக்கப்படுகிறது. அதேபோல் இந்த மாத்திரையினை வாய் வழியாக மட்டும் தான் எடுத்துக்கொள்ள வேண்டும். மேலும் நீருடன் தான் உணவு அருந்திய பிறகு சாப்பிட வேண்டும்.

Zynol 150 மாத்திரை எதற்காக பயன்படுத்தப்படுகிறது

Cilnidipine Tablet Side Effects in Tamil:

  1. தலைசுற்றல்
  2. வயிற்றுப்போக்கு
  3. தலைவலி
  4. முகுது வலி
  5. கை மாற்றம் கால்களில் வீக்கம்
  6. உடல் சோர்வு
  7. குறைவான இதயத்துடிப்பு
  8. அதிகப்படியான வேகத்துடன் கூடிய இதயத்துடிப்பு

இத்தகைய பக்க விளைவுகள் அனைத்தும் Cilnidipine மாத்திரைக்கு உரிய பக்க விளைவுகளாக இருந்தாலும் கூட வேறு ஏதேனும் பக்க விளைவுகள் இருந்தாலும் அதனை உடனே மருத்துவரிடம் கூற வேண்டும்.

யாருக்கெல்லாம் முன்னெச்சரிக்கை:

தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள், சிறுநீரகம் பிரச்சனை உள்ளவர்கள் மற்றும் கர்ப்பிணி பெண்கள் என இவர்கள் அனைவரும் இந்த மாத்திரையினை எடுத்துக்கொள்வதற்கு முன்பாக முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.

மேலும் உங்களின் தற்போது உடல்நிலை மற்றும் உணவு முறை பற்றியும் மருத்துவரிடம் தெரிவிக்க வேண்டும்.

Phenergan சிரப் பயன்கள் மற்றும் பக்க விளைவுகள்

இதுபோன்ற மருந்து மாத்திரைகளின் பயன்கள் மற்றும் பக்கவிளைவுகள் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> மருந்து
Advertisement