சிப்கால் 500 மி.கி மாத்திரையை பயன்படுத்துவதற்கு முன்னால் இதை தெரிஞ்சிக்கோங்க..!

Advertisement

Cipcal 500 Tablet Uses in Tamil

பொதுவாக நமது உடல் நலத்தில் ஏதாவது ஒரு குறைபாடு என்றால் மருத்துவரை அணுகி மருந்துகளை வாங்கி உட்க்கொள்வது நல்லது. ஆனால் இன்றைய காலக்கட்டத்தில் அனைவருமே மெடிக்கல் கடைக்கு சென்று மருந்துகளை வாங்கி உட்கொள்வதை பழக்கமாக வைத்திருக்கின்றோம். அப்படி மருத்துவரை அணுகாமல் நாமே மருந்துவாங்கி உட்கொள்வது தவறு. ஆனால் மிகவும் தவிர்க்கமுடியாத சூழலில் மட்டும் இப்படி மருத்துவரை அணுகாமல் மருந்துகளை வாங்கி உட்கொள்கிறீர்கள் என்றால், அப்படி நாம் உட்கொள்ளும் மருந்து எந்தெந்த நோய்களுக்கு தீர்வாக அமையும் என்பதை பற்றிய முழுவிவரங்களையும் தெரிந்து கொண்டு பிறகு உட்கொள்ளுங்கள். அந்தவகையில் இன்றைய பதிவில் சிப்கால் 500 மி.கி மாத்திரை பற்றிய தகவலை பார்க்க இருக்கின்றோம். அதனால் இன்றைய பதிவை முழுதாக படித்து இந்த சிப்கால் 500 மி.கி மாத்திரையானது எந்தெந்த நோய்களுக்கு தீர்வாக அமையும் என்பதை எல்லாம் அறிந்து கொண்டு பயன் பெறுங்கள்.

குறிப்பு: மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் எந்த மாத்திரையும் வாங்கி தானாக பயன்படுத்த கூடாது..!

லெவோசெடிரிசைன் மாத்திரையின் பயன்கள் மற்றும் பக்கவிளைவுகள்

Cipcal 500 Tablet Uses in Tamil:

Cipcal 500 Tablet Side Effects in Tamil

இந்த சிப்கால் 500 மி.கி மாத்திரையானது கால்சியம், வைட்டமின் D குறைபாடுகள் ஆகியவற்றிற்கு சிகிச்சை அளிக்கின்றது. மேலும் ஆரோக்கியமான எலும்பு அமைப்பை பராமரிக்க இந்த சிப்கால் 500 மி.கி மாத்திரையானது பயன்படுகிறது.

அதாவது ஆரோக்கியமான எலும்புகளை மறுகட்டமைக்க தேவையான நேரத்தை எலும்புகளுக்கு வழங்க மாத்திரை உதவுகிறது. மேலும் குறிப்பாக ஆஸ்டியோபோரோசிஸ் நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு சிப்கால் பொதுவாக பரிந்துரைக்கப்படுகிறது, ஏனெனில் அவர்கள் வைட்டமின் டி மற்றும் கால்சியம் குறைபாடுகளை உருவாக்கும் அபாயத்தில் உள்ளனர்.

இந்த மருந்தில் பலவகையான மி.லி உள்ளதால் இதனை மருத்துவர் அளித்த அளவைவிட அதிகமாகவோ குறைவாகவோ எடுத்து கொள்ளாதீர்கள். அப்படி எடுத்து கொண்டால் பல பக்கவிளைவுகளை சந்திக்க நேரிடும்.

Cipcal 500 Tablet Side Effects in Tamil:

இந்த சிப்கால் 500 மி.கி மாத்திரையை பயன்படுத்துவதால்,

  • தசைப் பலவீனம்
  • வாந்தி
  • தலைவலி
  • சோர்வு
  • மலச்சிக்கல்
  • பசியிழப்பு
  • குமட்டல்
  • வயிற்று வலி
  • அதிகப்படியான தாகம்
  • சிறுநீர் கழிக்கும் போது வலி
  • கண்களில் வலி அல்லது சிவத்தல் போன்ற பக்கவிளைவுகள் ஏற்படும் வாய்ப்புள்ளது. அதனால் இதில் ஏதாவது ஒரு பக்க விளைவுகள் நீடித்தால் உடனடியாக மருத்துவரிடம் சென்று ஆலோசனை பெற்று கொள்ளுங்கள்.

சிஃப்ரான் 500 மிகி மாத்திரை பற்றிய தகவல்

முன்னெச்சரிக்கை:

இந்த சிப்கால் 500 மி.கி மாத்திரையினை பயன்படுத்துவதற்கு முன்னால் உங்களது தற்போதைய மருந்து பட்டியலை மருத்துவரிடம் தெரிவிக்க வேண்டும்.

நீங்கள் அடிக்கடி வயிற்றுப் புண் மற்றும் குடல் புண்களால் அவதிப்படுபவர் என்றால், சிப்கால் மாத்திரைகளைப் பயன்படுத்துவதைத் தவிர்ப்பது நல்லது.

இதய நோய் மற்றும் கடினமான தமனிகளால் பாதிக்கப்படுபவர்களும் இந்த மாத்திரையைப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும்.

மேலும் நீங்கள் கர்ப்பமாகவோ மற்றும் தாய்பால் அளிக்கின்ற தாய் என்றாலும் இந்த மருந்தினை பயன்படுத்துவதை தவிர்க்கலாம்.

குழந்தைகளுக்கு இந்த மருந்தினை அளிப்பதை தவிர்க்கலாம்.

குறிப்பு: இங்கே கொடுக்கப்பட்ட தகவல்கள் மருந்தின் உப்பு உள்ளடக்கத்தை அடிப்படையாக கொண்டவை. மருந்தின் பயன்கள் மற்றும் பக்க விளைவுகள் ஒவ்வொரு நபருக்கும் மாறுபடும்.

ஜிங்க் மாத்திரையின் பயன்கள் மற்றும் பக்க விளைவுகள் பற்றிய தகவல்

இதுபோன்ற மருந்து மாத்திரைகளின் பயன்கள் மற்றும் பக்கவிளைவுகள் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> மருந்து
Advertisement