சிப்கோஸ் 500 மி.கி மாத்திரை பயன்கள் மற்றும் பக்கவிளைவுகள்
நண்பர்களுக்கு வணக்கம்.. இன்றைய கால கட்டத்தில் நாம் பெரும்பாலான ஆரோக்கிய பிரச்சனைக்கு பலவகையான மருந்து, மாத்திரைகளை எடுத்துக்கொள்கின்றோம். அவ்வாறு எடுத்துக்கொள்ளும் மாத்திரைகள் பிரச்சனைக்கு பலன் அளித்தாலும், சில வகையான பக்க விளைவுகளையும் ஏற்படுத்துகின்றன. அந்த வகையில் இன்று நாம் சிப்கோஸ் மாத்திரையின் பயன்கள் மற்றும் அதனால் ஏற்படும் பக்கவிளைவுகள் என்னென்ன? என்பது குறித்த தகவல்களை இப்பொழுது நாம் படித்து தெரிந்துகொள்வோம் வாங்க.
குறிப்பு: மருத்துவரின் அறிவுரை இல்லாமல் எந்த மாத்திரையும் நீங்களாக பயன்படுத்த கூடாது..!
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
Diazepam மாத்திரையின் பயன்கள் மற்றும் பக்கவிளைவுகள்..!
சிப்கோஸ் 500 மி.கி மாத்திரை பயன்கள் – Cipco Tablet Uses in Tamil:
இந்த சிப்கோஸ் 500 மி.கி மாத்திரை குயினோலோன் குடும்ப மருந்துகளில் ஒன்றாகும். இது ஒரு உயிரெதிரி மருந்து ஆகும்.
பாக்டீரியாக்களால் ஏற்படும் தொற்றுகளை குணப்படுத்துவதில் இந்த மாத்திரை மிகவும் சிறந்து விளங்குகிறது.
சிப்கோஸ் 500 மி.கி மாத்திரை நுரையீரல் அழற்சி, ஆந்த்ராக்ஸ், சிஃபிலிஸ், கொனோரியா, மூச்சுக்குழாய் அழற்சி, இரைப்பை நோய் மற்றும் பிளேக் போன்ற பாக்டீரிய தொற்றுகள் உள்ள நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க பயன்படுகிறது.
தொண்டை, தோல், காது, மூக்கு, எலும்பின் உட்புழை, எலும்புகள், சுவாச மண்டலம், சிறுநீர்ப் பாதை ஆகியவற்றில் ஏற்படும் தொற்றுகளை எதிர்த்துப் போராட இந்த உயிரெதிரி மருந்தாக பயன்படுகிறது.
மேலும் பாக்டீரிய டி. என். ஏ. உருவாக்கத்தை தடுக்கிறது. எனவே, இது தொற்றுக்கு காரணமாக இருக்கும் பாக்டீரியாக்களை அழித்து, புதிய பாக்டீரியா வளர்வதை தடுக்கிறது.
ஃபுளோரோகுயினோலோன் பாக்டீரியாக்களால் ஏற்படும் தொற்றுகளை எதிர்த்துப் போராட உதவுகிறது.
சிப்கோஸ் 500 மி.கி மாத்திரை உடலில் இருக்கும் தொற்றுகளை அழித்து, புதிய பாக்டீரியாக்களின் வளர்ச்சியைத் தடுக்கிறது. டி. என். ஏ. தொடர்ந்து பாக்டீரியாக்களை உற்பத்தி செய்கிறது.
சிப்கோஸ் 500 மி.கி மாத்திரை டி. என். ஏ. கைரேஸின் செயல்பாட்டைத் தடுக்கிறது. இதனால் டி.என்.ஏ தளர்வு தடுக்கப்பட்டு, இரட்டை இழைவடிவ டி. என். ஏ. வை சிதைக்கிறது.எனவே புதிய பாக்டீரியாக்கள் உற்பத்தியானது தடுக்கப்படுகிறது. இவ்வகையில், சிப்கோஸ் 500 மி.கி மாத்திரை உடலுக்குள் பாக்டீரியா தொற்றுக்களை எதிர்த்துப் போராடும் திறன் கொண்டது.
இந்த மருதை எப்படி எடுத்துக்கொள்ள வேண்டும்?
சிப்கோஸ் 500 மி.கி மாத்திரைகள், வாய்வழி கரைசல், கண் மருந்து களிம்பு, ஊசி மூலம் செலுத்தப்படும் கரைசல் போன்ற பல வடிவங்களில் கிடைக்கிறது. இந்த மருந்தின் அச்சிடப்பட்ட சீட்டை படித்து, மருத்துவரின் பரிந்துரைப்படி சரியான வழிகாட்டுதல்களைப் பின்பற்ற வேண்டியது அவசியம்.
ஒரு வேளை மருந்தின் அளவை எடுத்துக்கொள்ள மறந்துவிட்டால், தவறிய மருந்தளவை ஈடு செய்வதற்கு கூடுதலாக மாத்திரை எடுத்துக்கொள்ளக்கூடாது. பதிலாக, அடுத்த வேளை மருந்தினை மட்டும் எடுத்துக்கொள்ளவேண்டும்.
பக்கவிளைவுகள் – Cipco tablet side effects in tamil:
சிப்கோஸ் 500 மி.கி மாத்திரை தலைவலி, வயிற்றுப்போக்கு, வாந்தி, குமட்டல், வாய் புண்கள், நெஞ்செரிச்சல் மற்றும் சோர்வு போன்ற ஒரு சில பொதுவான பக்கவிளைவுகள் ஏற்படலாம். இந்தப் பக்கவிளைவுகள் எவையேனும் இருப்பதாக உணர்ந்தால் மருத்துவரை அணுகவேண்டும்.
வேறு சில முக்கியமான பக்கவிளைவுகளும் ஏற்படலாம். உணர்வு இழப்பு, சீரற்ற இதயத்துடிப்பு, மூச்சு விடுவதில் சிரமம், தசை வலி, கல்லீரல் செயல் பிறழ்ச்சி, கடுமையான தோல் அழற்சி போன்றவை பாதிப்பை அதிகரிக்கும் விளைவுகள் ஆகும்.
சிப்கோஸ் 500 மி.கி மாத்திரை மருந்தால் ஒவ்வாமை இருந்தால், தோல் அரிப்பு, வீக்கம், சுவாசப் பிரச்சனைகள், தொண்டை, நாக்கு, முகம் அல்லது கை, அரிப்பு போன்றவை ஏற்படும். இந்த அறிகுறிகளை கண்டறிந்தால், உடனடியாக இந்த மருந்து உட்கொள்வதை நிறுத்திவிட்டு, மருத்துவரை அணுகவும் நல்லது.
சில நேரங்களில், சில குறைபாடுகள் கொண்ட நோயாளிகள், இந்த உயிரெதிரி மருந்தினை எடுத்துக்கொள்வதால், அதன் பக்க விளைவுகளால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். எனவே, இந்த மருந்தை தொடங்குவதற்கு முன் சிப்கோஸ் 500 மி.கி மாத்திரையால் ஒவ்வாமை, ரத்தக் கோளாறுகள், இதய குறைபாடு மற்றும் இரத்தத்தில் மெக்னீசியம் அளவு குறைவாக காணப்படுதல் போன்றவை இருந்தால் மருத்துவரை அணுக வேண்டும்.
எச்சரிக்கை:
குழந்தைகள் மற்றும் கர்ப்பிணி பெண்கள் இந்த மருந்தை எடுத்துக்கொள்வதற்கு முன் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இந்த உயிரெதிரி மருந்து நோய் தொற்றுக்களை குணப்படுத்தும் என்றாலும், அது காய்ச்சல், குளிர் மற்றும் வைரஸ் நோய்த்தொற்றுகள் போன்ற தொற்றுகளை குணப்படுத்துவதில்லை.
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
Norfloxacin மாத்திரை பற்றிய தகவல்..!
இதுபோன்ற மருந்து மாத்திரைகளின் பயன்கள் மற்றும் பக்கவிளைவுகள் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | மருந்து |