Cipladine Ointment Uses in Tamil
நாம் அன்றாடம் பயன்படுத்தும் பொருட்களில் மருந்தும் ஒன்றாக மாறிவிட்டது. நம் உடலில் ஏதேனும் ஆரோக்கிய பிரச்சனை ஏற்பட்டால் அதற்கான மருந்துகளை பயன்படுத்துவது வழக்கமான ஒன்றாக இருந்தாலும், அதனால் நம் உடலில் சில பக்க விளைவுகளும் ஏற்படும் என்பதை நாம் அனைவரும் தெரிந்து கொள்வது அவசியம். மேலும், எந்தவொரு பொருட்களையும் நாம் அதிகமாகவோ அல்லது அடிக்கடி எடுத்துக்கொள்வதன் மூலம் நம் உடலில் பல பிரச்சனைகள் வரக்கூடும் என்பதையும் புரிந்துகொள்ள வேண்டும். ஆகையால், நீங்கள் நீங்கள் ஏதேனும் மருந்து உட்கொள்ள போகிறீர்கள் என்றால், அதற்கு முன்பாக அம்மருந்து எதற்கெல்லாம் பயன்படுத்தப்படுகிறது.? இதனால் என்னென்ன பக்க விளைவுகள் வரும்.? என்பதை தெரிந்துகொள்ள வேண்டும். எனவே, இப்பதிவில் Cipladine Ointment பயன்கள் மற்றும் பக்கவிளைவுகள் பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க.
குறிப்பு: மருத்துவரின் அறிவுரை இல்லாமல் எந்த மாத்திரையும் நீங்களாக பயன்படுத்த கூடாது..!
பயன்கள்:
Cipladine மருந்தானது, சிறு வெட்டுக் காயங்கள், கீறல்கள், புண்கள், கொப்புளங்கள் போன்றவற்றிக்கு சிகிச்சை அளிக்கக்கூடிய கிருமி நாசினி மருந்தாகும். தோலில் உண்டாகும் சரும பிரச்சனைகளை சரி செய்யவும், வாயில் ஏற்படும் புண்களை ஆற்றுவதற்கும் மருந்தாக பயன்படுகிறது. இருப்பினும் இது பெரும்பாலும் நாள்பட்ட சரும புண்களுக்கு மருந்தாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.
லோபெராமைட் பயன்கள் மற்றும் பக்க விளைவுகள் பற்றி உங்களுக்கு தெரியுமா
இவற்றின் பிற பயன்பாடுகள்:
பெண்களின் பிறப்புறுப்பில் ஏற்படும் பூஞ்சை தொற்றைத் தடுக்க பயன்படுகிறது.
அறுவை சிகிச்சை செய்வதற்கு முன்பு, நோயாளின் அறுவை சிகிச்சை செய்யும் பகுதியை (தோலை) சுத்தம் செய்வதற்கு இம்மருந்து பயன்படுகிறது.
பக்க விளைவுகள்:
- சரும எரிச்சல்
- சருமம் சிவத்தல்
- முகப்பரு வெடிப்புகள்
- தோல் அழற்சி
இம்மருந்தை யாரெல்லாம் பயன்படுத்தக்கூடாது.?
கர்ப்பிணி பெண்கள் மற்றும் பாலுட்டும் தாய்மார்கள் இம்மருந்தை பயன்படுத்துதாழ் கூடாது.
தைராய்டு பிரச்சனை உள்ளவர்கள் இம்மருந்தை அடிக்கடி பயன்படுத்த கூடாது.
இம்மருந்தை பயன்டுத்தும்போது வேறு ஏதேனும் மருந்தை இதனுடன் சேர்த்து பயன்படுத்தக்கூடாது.
👉மருந்தின் பயன்கள் மற்றும் பக்க விளைவுகள் ஒவ்வொரு நபருக்கும் மாறுபடும் என்பது குறிப்பிடத்தக்கது.
இதுபோன்ற மருந்து மாத்திரைகளின் பயன்கள் மற்றும் பக்கவிளைவுகள் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | மருந்து |