Cipmox 500 மாத்திரையை யாரெல்லாம் பயன்படுத்தலாம் தெரியுமா..?

Advertisement

Cipmox 500 Tablet Uses in Tamil

இன்றைய சூழலில் நாம் வாழும் இந்த உலகம் தினமும் அதிக அளவு வளர்ச்சிகளை கண்டுகொண்டே இருக்கின்றது. அதேபோல் அப்படி வளர்ச்சி அடைவதற்கு நாம் செய்கின்ற பல வகையான முயற்சிகள் பல பக்கவிளைவுகளை ஏற்படுத்தி கொண்டே தான் உள்ளது. அதனால் இந்த உலகில் தினமும் ஒரு புதிய வகையான நோய்களும் ஏற்பட்டு கொண்டிருக்கின்றது. அப்படி ஏற்படும் நோயினை கட்டுப்படுத்த உதவும் மருந்துகளின் எண்ணிக்கையும் அதிகரித்து கொண்டிருக்கின்றது.

எனவே நமது உடல் நலத்தை பாதுகாக்க உதவும் மருந்துகளை பற்றிய சரியான புரிதல் நம்மிடம் அவ்வளவாக இல்லை என்பதே உண்மை. அதனால் தான் நமது பதிவின் வாயிலாக தினமும் ஒரு மருந்து பற்றிய முழுமையான தகவல்களை பகிர்ந்து கொண்டு வருகின்றோம். அதேபோல் இன்றைய பதிவில் Cipmox 500 மாத்திரை பற்றிய முழுவிவரங்களையும் அறிந்து கொள்வோம் வாங்க..

குறிப்பு: மருத்துவரின் அறிவுரை இல்லாமல் எந்த மாத்திரையும் நீங்களாக பயன்படுத்த கூடாது..!

Abbott மாத்திரையை பயன்படுத்துவதற்கு முன்னால் இதை தெரிஞ்சிக்கோங்க

Cipmox 500 Tablet Uses in Tamil:

Cipmox 500 Tablet Side Effects in Tamil

இந்த Cipmox 500 மாத்திரையானது பொதுவாக நுரையீரல், சுவாசக் குழாய், தோல், நடுத்தர காது, சைனஸ் மற்றும் சிறுநீர் பாதை ஆகியவற்றின் தொற்றுநோய்களுக்கு சிகிச்சையளிக்கப் பயன்படுகிறது.

மேலும் இந்த மாத்திரையானது தொண்டை அழற்சி, சுபவாதம், மூச்சுக்குழாய் அழற்சி மற்றும் கோனோரியா போன்றவற்றிற்கும் சிகிச்சையளிக்க பயன்படுகிறது. இந்த மாத்திரையானது பாக்டீரியாவில் உள்ள செல் சுவரின் தொகுப்புடன் குறுக்கிட்டு, அதன் வளர்ச்சியைத்  தடுப்பதன் மூலம் செயல்படுகிறது.

இந்த மருந்தில் பல மி.லி அளவுகள் இருப்பதால் இந்த மருந்தினை கண்டிப்பாக மருத்துவரின் ஆலோசனையுடன் மட்டும் தான் பயன்படுத்த வேண்டும். மாறாக மருத்துவர் அளித்த அளவைவிட அதிகமாகவோ குறைவாகவோ எடுத்து கொள்ளாதீர்கள். அப்படி எடுத்து கொண்டால் பல பக்கவிளைவுகளை சந்திக்க நேரிடும்.

Cipmox 500 Tablet Side Effects in Tamil:

Cipmox 500 மாத்திரையினை பயன்படுத்துவதால்,

  1. குமட்டல்
  2. வாந்தி
  3. வயிற்றுப்போக்கு
  4. மஞ்சள் காமாலை
  5. இரத்த சோகை
  6. குழப்பம்
  7. வலிப்பு
  8. தலைவலி
  9. பலவீனம்
  10. உடல் முழுவதும் வலி போன்ற பக்கவிளைவுகள் ஏற்படும் வாய்ப்புள்ளது. அதனால் இதில் ஏதாவது ஒரு பக்க விளைவுகள் நீடித்தால் உடனடியாக மருத்துவரிடம் சென்று ஆலோசனை பெற்று கொள்ளுங்கள்.

Nefrosave மாத்திரையின் பயன்கள் மற்றும் பக்கவிளைவுகள் என்னென்ன தெரியுமா

முன்னெச்சரிக்கை:

இந்த Cipmox 500 மாத்திரையினை பயன்படுத்துவதற்கு முன்னால் உங்களது தற்போதைய மருந்து பட்டியலை மருத்துவரிடம் தெரிவிக்க வேண்டும்.

மேலும் நீங்கள் ஆஸ்துமா, கல்லீரல் அல்லது சிறுநீரக நோய்களினால் பாதிக்கப்பட்டு இருந்தால் இந்த மருந்தினை பயன்படுத்துவதற்கு முன்னால் உங்களது மருத்துவரின் ஆலோசனையை பெற்று கொள்ளுங்கள்.

அதேபோல்  தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் மற்றும் கர்ப்பமாக இருப்பவர்கள் இந்த மருந்தை பயன்படுத்துவதற்கு முன்னால் உங்களது மருத்துவரின் ஆலோசனையை பெற்று கொள்ளுங்கள்.

குறிப்பு: இங்கே கொடுக்கப்பட்ட தகவல்கள் மருந்தின் உப்பு உள்ளடக்கத்தை அடிப்படையாக கொண்டவை. மருந்தின் பயன்கள் மற்றும் பக்க விளைவுகள் ஒவ்வொரு நபருக்கும் மாறுபடும்.

Drotin மாத்திரையை பயன்படுத்துவதற்கு முன்னால் அதனை பற்றி தெரிஞ்சிக்கோங்க

இதுபோன்ற மருந்து மாத்திரைகளின் பயன்கள் மற்றும் பக்கவிளைவுகள் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> மருந்து

Advertisement