குளோனாசெபம் மாத்திரையை பயன்படுத்துவதற்கு முன்னால் இதை கண்டிப்பா தெரிஞ்சிக்கோங்க..!

Advertisement

Clonazepam Tablet Uses in Tamil

இன்றைய கால கட்டத்தில் உள்ள சுற்றுச்சூழல் மாசுபாடு மற்றும் முறையற்ற வாழ்க்கை முறை ஆகியவற்றால் சிறியவர் முதல் பெரியவர் அனைவருக்குமே ஏதாவது ஒரு உடல் நல குறைபாடு ஏற்படுகிறது. அதனால் அதனை சரி செய்வதற்கு உதவும் மருந்துகள் மிகவும் முக்கியமான ஒரு விஷயமாகும். இந்த மருந்துகளை ஒரு சிலர் தாமாகவே மருந்து கடைகளுக்கு சென்று வாங்கி சாப்பிடுவார்கள் அது தவறான ஒரு விஷயமாகும். அப்படி மிகவும் அவசரமான சூழலினால் நீங்கள் கடையில் சென்று மருந்து வாங்க வேண்டும் என்றாலும் நீங்கள் வாங்கும் மருந்து உங்களின் நோய்க்கு சரியான தீர்வாக இருக்குமா என்பதை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.

அதனால் தான் நமது பதிவின் வாயிலாக நமது பதிவின் மூலம் தினமும் ஒரு மருந்து பற்றிய முழு விவரங்களையும் கூறிக்கொண்டு வருகின்றோம் அந்த வரிசையில் இன்றைய பதிவில் குளோனாசெபம் மாத்திரையை எந்தெந்த பிரச்சனைக்காக பயன்படுத்தபடுகிறது. மேலும் இந்த மாத்திரையை சாப்பிடுவதால் ஏற்படும் பக்க விளைவுகள் என்ன மற்றும் எவ்வளவு சாப்பிட வேண்டும் போன்ற அனைத்து தகவல்களையும் விரிவாக பார்க்கலாம் வாங்க..

குறிப்பு: மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் எந்த மாத்திரையும் வாங்கி தானாக பயன்படுத்த கூடாது..!

Vomikind சிரப்பினை பயன்படுத்துவதற்கு முன்னால் இதை கண்டிப்பா தெரிஞ்சிகோங்க

Clonazepam Tablet Uses in Tamil:

Clonazepam Tablet Side Effects in Tamil

இந்த குளோனாசெபம் மாத்திரையானது பென்சோயிடையாசெப்பைன்கள் என்றழைக்கப்படும் மருந்துத் தொகுப்பைச் சேர்ந்தது. இந்த குளோனாசெபம் மாத்திரையானது வலிப்பு நோய்க்கு சிகிச்சையளிப்பதிலும், தடுப்பதிலும் பயன்படுகிறது.

இந்த குளோனாசெபம் (Clonazepam) மருந்து உங்கள் நரம்புகள் மற்றும் மூளையில் ஒரு அமைதிப்படுத்தும் விளைவை தூண்டுவதன் மூலம் வேலை செய்கிறது. இதனை மருத்துவர் அளித்த அளவை விட அதிகமாகவோ அல்லது குறைவாகவோ எடுத்து கொள்ள கூடாது.

அப்படி எடுத்து கொண்டால் இது உங்களுக்கு பல பக்க விளைவுகளை அளிக்கும் வாய்ப்புள்ளது.

Clonazepam Tablet Side Effects in Tamil:

  • தலைச்சுற்றல்
  • உடல் சோர்வு
  • மனசோர்வு 
  • கவனம் குறைதல்
  • களைப்பு
  • தலைவலி 
  • இருமல் 
  • எரிச்சல்
  • தசை பிடிப்பு

குளோனாசெபம் மாத்திரையை பயன்படுத்துவதால் மேலே குறிப்பிட்டுள்ள பக்க விளைவுகள் ஏற்படும் வாய்ப்புள்ளது.

Dolopar மாத்திரையை பயன்படுத்துவதற்கு முன்னால் இதை தெரிஞ்சிகோங்க

முன்னெச்சரிக்கை:

இந்த மருந்தினை பயன்படுத்துவதற்கு முன்பாக மருத்துவரிடம் உங்கள் தற்போதைய மருந்துகள் பட்டியல் பற்றி கூறி அவரின் ஆலோசனையை பெறுவது நல்லது.

கர்ப்பிணிப் பெண்களோ தாய்பால் அளிக்கும் பெண்களோ இந்த மருந்தினை எடுத்து கொள்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனையை பெற வேண்டும்.

அதே போல் குழந்தைகளுக்கு இந்த மருந்தினை அளிப்பதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனையை பெற வேண்டும்.

இங்கே கொடுக்கப்பட்ட தகவல்கள் மருந்தின் உப்பு உள்ளடக்கத்தை அடிப்படையாக கொண்டவை. மருந்தின் பயன்கள் மற்றும் பக்க விளைவுகள் ஒவ்வொரு நபருக்கும் மாறுபடும்.

Redotil மாத்திரையை பயன்படுத்துவதற்கு முன்னால் இதை தெரிஞ்சிகோங்க

இதுபோன்ற மருந்து மாத்திரைகளின் பயன்கள் மற்றும் பக்கவிளைவுகள் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> மருந்து
Advertisement