Clopidogrel மாத்திரையை பயன்படுத்துவதற்கு முன்னால் இதை தெரிஞ்சிக்கோங்க..!

Advertisement

Clopidogrel Tablet Uses in Tamil

இன்றைய காலகட்டத்தில் அனைவரின் வாழ்க்கையும் மருந்தினால் தான் இயங்கி கொண்டிருக்கின்றது என்பது கசப்பான உண்மை. ஆம் நண்பர்களே பொதுவாக இன்றைய சூழலில் உள்ள சுற்றுசூழல் மாசுபாடு மற்றும் முறையற்ற வாழ்க்கை முறையால் அடிக்கடி சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவருக்குமே ஏதாவது ஒரு உடல்நல குறைபாடு ஏற்படுகின்றது. அதனால் அதனை சரிசெய்வதற்க்காக நாம் மருந்துகளை பயன்படுத்துகின்றோம். அப்படி நாம் பயன்படுத்தும் மருந்துகளை பற்றிய முழுவிவரங்களையும் அறிந்து கொள்வது நல்லது. ஏனென்றால் நாம் எடுத்து கொள்ளும் மருந்தினை பற்றிய முழுவிவரங்களையும் அறிந்து கொண்டால் மட்டுமே நாம் நமக்கு ஏற்பட்டுள்ள உடல்நல குறைபாட்டிற்க்கான சரியான மருந்தினை தான் எடுத்து கொள்கின்றோம் என்பது நமக்கு தெரியும். அதனால் தான் இன்று Clopidogrel மாத்திரையை பற்றிய முழுவிவரங்களையும் பார்க்க இருக்கின்றோம். அதனால் இந்த பதிவை முழுதாக படித்து இந்த Clopidogrel மாத்திரை எந்தெந்த பிரச்சனைகளுக்கு தீர்வாக அமையும். மேலும் இதனை பயன்படுத்துவதால் நமக்கு என்னென்ன பக்கவிளைவுகள் ஏற்படும் என்பதை எல்லாம் பற்றி முழுதாக இன்று அறிந்து கொள்வோம் வாங்க.

குறிப்பு: மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் எந்த மாத்திரையும் வாங்கி தானாக பயன்படுத்த கூடாது..!

அல்ப்பிரசோலம் மாத்திரையை பயன்படுத்துவதற்கு முன்னால் இதை கண்டிப்பாக தெரிஞ்சிக்கோங்க

Clopidogrel Tablet Uses in Tamil:

Clopidogrel Tablet Side Effects in Tamil

இந்த க்ளோபிடோக்ரல் மாத்திரையானது இரத்த நாளங்களில் இரத்தம் உறைவதைத் தடுக்கும் ஒரு இரத்தத் துகளணுக்கள் எதிர்ப்பு மருந்து ஆகும். இதய கோளாறு அல்லது இரத்த குழாய் கோளாறு உள்ளவர்கள் இந்த மருந்தை எடுத்து கொள்வதன் மூலம் மாரடைப்பு அல்லது பக்கவாதம் ஏற்படும் வாய்ப்புகளைக் குறைக்கலாம்.

இந்த க்ளோபிடோக்ரல் மாத்திரையானது இரத்த துகளணுக்களின் ஒட்டும் தன்மையைக் குறைக்கிறது, இது இரத்தத் துகளணுக்கள் தமனியின் உட்புறச் சுவர்களில் ஒட்டிக் கொண்டு, ஒரு இரத்தக்கட்டி உருவாவதைத் தடுக்கிறது.

இந்த மருந்தினை மருத்துவர் அளித்த அளவை விட அதிகமாகவோ குறைவாகவோ எடுத்து கொள்ள கூடாது. அப்படி எடுத்து கொண்டால் அது உங்களுக்கு அதிக அளவு பக்க விளைவுகளை ஏற்படுத்தும்.

Clopidogrel Tablet Side Effects in Tamil:

  • இரத்தக்கசிவு
  • மூக்கில் இருந்து இரத்தக் கசிவு
  • வயிற்று வலி
  • இரத்தக் கொப்புளங்கள்
  • அஜீரண கோளாறு 
  • வயிற்றுப்போக்கு

க்ளோபிடோக்ரல் மாத்திரையினை எடுத்து கொள்வதால் ஏற்படும் சில பக்கவிளைவுகள்.

குளோனாசெபம் மாத்திரையை பயன்படுத்துவதற்கு முன்னால் இதை கண்டிப்பா தெரிஞ்சிக்கோங்க

முன்னெச்சரிக்கை:

இந்த க்ளோபிடோக்ரல் மாத்திரையினை பயன்படுத்துவதற்கு முன்னால் உங்களின் தற்போதையை மருந்துபட்டியலை கூறி அவரின் ஆலோசனையை கண்டிப்பாக பெற்று கொள்ளுங்கள்.

கர்ப்பிணிப் பெண்களோ தாய்பால் அளிக்கும் பெண்களோ இந்த மருந்தினை எடுத்து கொள்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனையை பெற வேண்டும்.

இரத்தக்கசிவு, கல்லிரல் மற்றும் சிறுநீரக பிரச்சனைகள் இருந்தால் இந்த மருந்தினை எடுத்து கொள்ள கூடாது.

நீங்கள் சமீபத்தில் அறுவை சிகிச்சை செய்திருந்தாலோ அல்லது ஏதாவது ஒரு காயம் ஏற்பட்டிருந்தாலோ இந்த மருந்தினை எடுத்து கொள்ள கூடாது.

குறிப்பு: இங்கே கொடுக்கப்பட்ட தகவல்கள் மருந்தின் உப்பு உள்ளடக்கத்தை அடிப்படையாக கொண்டவை. மருந்தின் பயன்கள் மற்றும் பக்க விளைவுகள் ஒவ்வொரு நபருக்கும் மாறுபடும்.

Vomikind சிரப்பினை பயன்படுத்துவதற்கு முன்னால் இதை கண்டிப்பா தெரிஞ்சிகோங்க

இதுபோன்ற மருந்து மாத்திரைகளின் பயன்கள் மற்றும் பக்கவிளைவுகள் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> மருந்து
Advertisement