க்ளோபிலெட் மாத்திரையை பயன்படுத்துவதற்கு முன்னால் அதனை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்..!

Advertisement

Clopilet Tablet Uses in Tamil

இன்றைய காலகட்டத்தில் இந்த உலகில் மனிதனாக பிறந்த அனைவருக்குமே ஏதாவது ஒரு உடல்நல பிரச்சனை ஏற்பட்டு கொண்டே தான் உள்ளது. அப்படி நமது உடல்நல குறைபாட்டை சரி செய்வதற்காக நாம் மிக முக்கியமாக பயன்படுத்தும் மருந்துகளின் எண்ணிக்கையும் அதிகரித்து கொண்டே தான் உள்ளது. அதனால் இப்பொழுது நீங்கள் ஒரு மருந்தினை மருத்துவரின் ஆலோசனையுடனே எடுத்து கொண்டாலும் அதனை பற்றிய முழுவிவரங்களை அறிந்து கோவத்து என்பது மிக மிக அவசியமான ஒன்றாகும். அதனால் தான் நமது பொதுநலம்.காம் வாயிலாக தினமும் ஒரு மருந்தினை பற்றிய முழுவிவரங்களை அறிந்து கொண்டு வருகின்றோம். அதேபோல் இன்றைய பதிவில் க்ளோபிலெட் மாத்திரையை பற்றிய முழுவிவரங்களை அறிந்து கொள்ள இருக்கின்றோம். எனவே இந்த பதிவை முழுதாக படித்து இந்த க்ளோபிலெட் மாத்திரையை பற்றி அறிந்து கொள்ளுங்கள்.

குறிப்பு: மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் எந்த மாத்திரையும் வாங்கி தானாக பயன்படுத்த கூடாது..!

பான்டோசிட் மாத்திரை பற்றிய சில குறிப்புகள்

Clopilet Tablet Uses in Tamil:

Clopilet Tablet Side Effects in Tamil

இந்த க்ளோபிலெட் மாத்திரையானது நமது உடலில் உள்ள இரத்த நாளங்களில் இரத்தம் உறைவதைத் தடுக்கும் ஒரு இரத்தத் துகளணுக்கள் எதிர்ப்பு மருந்து ஆகும்.

அதாவது இந்த க்ளோபிலெட் மாத்திரையானது இரத்தத் துகளணுக்களின் ஒட்டும் தன்மையைக் குறைக்கிறது, இது இரத்தத் துகளணுக்கள் தமனியின் உட்புறச் சுவர்களில் ஒட்டிக் கொண்டு, ஒரு இரத்தக்கட்டி உருவாவதைத் தடுக்க உதவுகிறது.

மேலும் இருதய கோளாறு அல்லது இரத்தக் குழாய் கோளாறு உள்ளவர்கள் இந்த மருந்தை தினமும் எடுத்துக்கொள்வதின் மூலம் மாரடைப்பு அல்லது பக்கவாதம் ஏற்படும் வாய்ப்புகளைக் குறைக்கலாம்.

அதேபோல் இந்த மாத்திரையில் பல மி.லி அளவுகள் இருப்பதால் மருத்துவர் அளித்த அளவினை மட்டும் உட்கொள்ளுங்கள் மாறாக மருத்துவர் அளித்த அளவினை விட அதிகமாகவோ அல்லது குறைவாகவோ உட்கொண்டால் பல பக்க விளைவுகளை சந்திக்க நேரிடும்.

ஒமிஸ் மாத்திரையின் பயன்படுத்துவதற்கு முன்னால் இதை கண்டிப்பாக தெரிஞ்சிக்கோங்க

Clopilet Tablet Side Effects in Tamil:

இந்த க்ளோபிலெட் மாத்திரையினை பயன்படுத்துவதால்,

  • இரத்தப்போக்கு 
  • குழப்பம் 
  • இரத்த சோகை 
  • கல்லீரல் செயலிழப்பு 
  • சுவாசக்குழாய் இரத்தப்போக்கு
  • மயக்கம் 
  • மாயத்தோற்றம்
  • பக்கவாதம் போன்ற பக்கவிளைவுகள் ஏற்படலாம். இந்த விளைவுகள் ஏதேனும் நீடித்தால் அல்லது மோசமாகிவிட்டால், உடனடியாக உங்கள் மருத்துவரிடம் செல்லுங்கள்.

முன்னெச்சரிக்கை:

இந்த க்ளோபிலெட் மாத்திரையினை பயன்படுத்துவதற்கு முன்னால் உங்களது தற்போதைய மருந்து பட்டியலை மருத்துவரிடம் தெரிவிக்க வேண்டும்.

அதேபோல் நீங்கள் கர்பமாகவோ அல்லது தாய்ப்பால் அளித்து கொண்டிருக்கும் தாய் என்றால் நீங்கள் இந்த மருந்தினை எடுத்து கொள்வதை தவிர்ப்பது நல்லது.

மேலும் உங்களுக்கு இரத்தக்கசிவு கோளாறு, கல்லீரல் அல்லது சிறுநீரக பிரச்சனைகள் இருந்தால் இந்த மருந்தினை பயன்படுத்துவதற்கு முன்னால் உங்களின் மருத்துவரிடம் தெரிவிக்க வேண்டும்.

உங்களுக்கு சமீபத்தியத்தில் அறுவை சிகிச்சை அல்லது ஏதாவது ஒரு காயம் ஏற்பட்டுள்ளது என்றால் இந்த மருந்தினை எடுத்து கொள்வதை தவிர்க்கலாம்.

குறிப்பு: இங்கே கொடுக்கப்பட்ட தகவல்கள் மருந்தின் உப்பு உள்ளடக்கத்தை அடிப்படையாக கொண்டவை. மருந்தின் பயன்கள் மற்றும் பக்க விளைவுகள் ஒவ்வொரு நபருக்கும் மாறுபடும்.

அமோக்ஸிசிலின் மருந்தினை பயன்படுத்துவதற்கு முன்னால் இதை கண்டிப்பாக தெரிஞ்சிக்கோங்க

இதுபோன்ற மருந்து மாத்திரைகளின் பயன்கள் மற்றும் பக்கவிளைவுகள் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> மருந்து
Advertisement