Co-Trimoxazole Tablet Uses in Tamil
மனிதனாக பிறந்த அனைவருமே உடல்நிலை குறைபாடு ஏற்பட்டால் உடனே எடுத்து கொளவ்து மாத்திரை தான். இந்த மாத்திரையை நீங்கள் மருத்துவர் ஆலோசனை இல்லாமல் நீங்கள் மருந்து கடையில் சென்று மாத்திரை வாங்கி சாப்பிட கூடாது. ஏனென்றால் மருத்துவர் எழுதி கொடுக்கும் போது உங்களின் உடல்நிலை ஏற்றவாறு மாத்திரை அளவுகளை எழுதி கொடுப்பார். அதனால் பக்க விளைவுகள் அதிகமாக ஏற்படாது. நாம் சாப்பிடும் மாத்திரை அனைத்திலும் நன்மைகள் போலவே தீமைகளும் அடங்கியுள்ளது. அதனால் நீங்கள் சாப்பிடும் மாத்திரைகளின் நன்மைகள் மற்றும் தீமைகளை அறிந்து கொள்ள வேண்டும். அந்த வகையில் இன்றைய பதிவில் co-trimoxazole மாத்திரை பயன்கள் மற்றும் பக்க விளைவுகள் பற்றி அறிந்து கொள்வோம் வாங்க..
குறிப்பு: மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் எந்த மாத்திரையும் வாங்கி தானாக பயன்படுத்த கூடாது..!
Co-trimoxazole Tablet Uses in Tamil:
Co-trimoxazole மாத்திரியானது கீழ் உள்ள பிரச்சனைகளுக்கு மருந்தாக கொடுக்கப்படுகிறது.
- சிறுநீர்க் குழாய் பாக்டீரியா தொற்று
- சுவாசக்குழாய் பாக்டீரியா தொற்று
- சிறுநீர் பாதை பாக்டீரியல் தொற்று
Co-trimoxazole Tablet Side Effects in Tamil:
- குமட்டல்
- வாந்தி
- தோல் சிவந்த நிறத்தில் காணப்படுவது
- ஒவ்வாமை பிரச்சனை
இந்த மாத்திரையை நீங்கள் எடுத்துக்கொண்ட பிறகு மேலே சொல்லப்பட்டுள்ள பக்க விளைவுகள் இல்லாமல் வேறு ஏதேனும் பக்க விளைவுகள் உங்களுக்கு தோன்றினால் அதனை மருத்துவரிடம் தெரிவிக்க வேண்டும்.
மாத்திரை எப்படி வேலை செய்கிறது:
கோ-டிரைமோக்சசோல் மாத்திரை ஒரு ஆன்டிபயோடிக். இவை பாக்டீரியா உருவாக்கத்திற்குத் தேவைப்படும் ஃபோலிக் அமிலம் உற்பத்தியாவதை தடுத்து தொற்றுகளிலுருந்து விடுபட உதவுகிறது.
முன்னெச்சரிக்கை:
நீங்கள் கர்ப்பமாக இருந்தாலோ அல்லது தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்கள் இந்த மாத்திரையை மருத்துவர் ஆலோசனை இல்லாமல் சாப்பிட கூடாது.
நீங்கள் வேறு ஏதும் பிரச்சனைக்கு மருந்து மாத்திரை எடுத்து கொண்டால் அதனை பற்றிய முழு தகவலையும் தெரிவிக்க வேண்டும்.
சிறுநீரகம், கல்லீரல் பிரச்சனை உள்ளவர்கள் இந்த மாத்திரையை மருத்துவர் ஆலோசனை இல்லாமல் எடுத்து கொள்ள கூடாது.
Chymowok Forte மாத்திரையின் பயன்கள் மற்றும் பக்க விளைவுகள்
இதுபோன்ற மருந்து மாத்திரைகளின் பயன்கள் மற்றும் பக்கவிளைவுகள் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | மருந்து |