கோல்டாக்ட் காப்ஸ்யூல் பயன்கள் மற்றும் பக்க விளைவுகள்..! Coldact Tablet Uses in Tamil..!
நண்பர்களுக்கு வணக்கம்.. நம் உடலில் திடீர் என்று ஏதாவது ஆரோக்கிய பிரச்சனைகள் வரும். அந்த ஆரோக்கிய பிரச்சனைக்கு சிறந்த தீர்வை பெற பெரும்பாலும் அனைவரும் மருத்துவரை தான் அணுகுவோம். அப்படி அணுகும் போது மருத்துவர் அந்த பிரச்சனைக்கு மருந்து மாத்திரைகளை பரிந்துரைப்பார்கள். நாமும் மருத்துவர் பரிந்துரைத்த மருந்து மாத்திரைகளை அவர் கூறிய வரை சரியாக எடுத்து கொள்வோம். அதில் ஒன்றும் தவறில்லை.
இருப்பினும் நாம் எடுத்துக்கொள்ளும் எந்த மாத்திரைகளாக இருந்தாலும் சரி அதற்கு பயன்கள் இருப்பது போல் பக்க விளைவுகளும் இருக்கும். ஆக நாம் எடுத்துக்கொள்ளும் எந்த மாத்திரைகளாக இருந்தாலும் சரி அதனுடைய பக்க அறிந்து கொள்வது என்பது மிகவும் முக்கியமான விஷயம் அந்த வகையில் இன்று நாம் தெரிந்துகொள்ள இருப்பது என்ன வென்றால் Coldact Tablet-யின் பயன்கள் மற்றும் பக்க விளைவுகளை பற்றி தான் தெரிந்துகொள்ள போகிறோம். சரி வாங்க கோல்டாக்ட் காப்ஸ்யூல் பயன்கள் மற்றும் பக்க விளைவுகள் பற்றி படித்தறியலாம்.
குறிப்பு: மருத்துவரின் அறிவுரை இல்லாமல் எந்த மாத்திரையும் நீங்களாக பயன்படுத்த கூடாது..!
கோல்டாக்ட் காப்ஸ்யூல் பயன்கள் – Coldact Tablet Uses in Tamil:
- இந்த கோல்டாக்ட் காப்ஸ்யூல் லேசான வலி நிவாரணமாக பயன்படுகிறது.
- குறிப்பாக காய்ச்சலுக்கு சிகிச்சை அளிக்கிறது.
- கோல்டாக்ட் காப்ஸ்யூல் மிகவும் பொதுவாக பயன்படுத்தப்படும் வலி நிவாரணம் என்பதால் முதுகுவலி, தலைவலி, மூட்டுவலி, பல் வலி போன்ற உபாதைகள் வந்தால் வலியைத் தணிக்க இந்த மாத்திரையை பயன்படுத்தலாம்.
- காய்ச்சலினால் ஏற்படும் உடல் வலியையும் இந்த மாத்திரை குணப்படுத்துகிறது.
- புற்றுநோயினால் அவதியுறும் நோயாளிகளுக்கு அல்லது அறுவைச் சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டவர்களுக்கு, அவர்கள் வலியை சமாளிக்க உதவும் வகையில் இது பெரும்பாலும் அளிக்கப்படுகிறது.
கோல்டாக்ட் மாத்திரை எடுத்துக்கொள்ளும் முறை:
கோல்டாக்ட் காப்ஸ்யூல் (Coldact Capsule) பொதுவாக வாய்வழியாக அல்லது மலக்குடல் வழியே நிர்வகிக்கப்படுகிறது, இது நரம்புவழி நிர்வாகத்திற்கும் கிடைக்கிறது.
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
Biotin மாத்திரை பற்றிய தகவல்..!
பக்க விளைவுகள் – Coldact Tablet Side Effects in Tamil:
கோல்டாக்ட் மருந்துக்கு எந்த கடுமையான பக்க விளைவுகளும் இல்லை. இந்த மாத்திரையை கர்ப்ப காலத்திலும், தாய்ப்பால் கொடுக்கும் போதும் பயன்படுத்துவது பாதுகாப்பானது. இருப்பினும், அரிதான நேரங்களில் சரும அரிப்பும் குமட்டல், வயிற்று வலி மற்றும் பசியின்மை போன்றவை ஏற்படலாம்.
உங்களுக்கு கோல்டாக்ட் மாத்திரையால் ஒவ்வாமை எதிர்வினை ஏற்பட்டால், அல்லது அடர்நிற சிறுநீர், களிமண்-நிற மலம் அல்லது மஞ்சள் காமாலை போன்ற பிற தீவிரமான அறிகுறிகளைக் கவனித்தால் நீங்கள் பயன்படுத்துவதை நிறுத்த வேண்டும். மருந்தின் அளவை அதிகமாக எடுத்துக்கொள்ளச் செய்வதால் கல்லீரல் செயலிழப்பு ஏற்படும்.
யாரெல்லாம் கோல்டாக்ட் மாத்திரை எடுத்துக்கொள்ள கூடாது?
- உங்களுக்கு ஒவ்வாமை இருந்தால் இந்த மாத்திரையை எடுத்துக்கொள்ள கூடாது.
- தீவிரமான கல்லீரல் கோளாறால் பாதிக்கப்பட்டிருந்தால் இந்த மாத்திரையை எடுத்துக்கொள்ள கூடாது.
- மது அருந்துபவர்கள் இந்த மாத்திரையை எடுத்துக்கொள்ள கூடாது.
குறிப்பு:
உடல் சார்ந்த பிரச்சனைக்காக தொடர்ந்து வேறொரு மாத்திரையை நீங்கள் எடுத்துக்கொண்டு வருகிறீர்கள் என்றால். அதனை உங்கள் மருதிவரிடம் கூறவும்.
மருந்தின் அளவு:
பெரியவர்களுக்கு, காய்ச்சல் மற்றும் வலிக்கான பொதுவான மருந்தளவு 325-650 மிகி மாத்திரைகளாக 4 முதல் 6 மணி நேரங்கள் அல்லது 1000 மிகி மாத்திரைகளாக ஒவ்வொரு 6 முதல் 8 மணிநேரத்திற்கு ஒருமுறை எடுத்துக்கொள்ள பரிந்துரைக்கப்படுகிறது.
மருத்துவரின் பரிந்துரைப்பின்படி மருந்தினை எடுத்துக்கொள்ள வேண்டும். மருத்துவர் பரிந்துரைத்த அளவை மீறக்கூடாது என்றும் அறிவுறுத்தப்படுகிறது.
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
சிப்கோஸ் மாத்திரையின் பயன்பாடுகள், ஏற்படும் பக்கவிளைவுகள் என்னென்ன?
இதுபோன்ற மருந்து மாத்திரைகளின் பயன்கள் மற்றும் பக்கவிளைவுகள் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | மருந்து |