Corex T Syrup Uses in Tamil
பொதுவாக நாம் அனைவரும் உடல் நிலை சரியில்லை என்றால் உடனே கடைகளில் விற்கும் மருந்துகளை வாங்கி தான் எடுத்துக்கொள்ளுவோம். அந்த வகையில் சிரப்பினை நாம் அதிகமாக எடுத்துக்கொள்வது இல்லை. ஒருவேளை அப்படி சிரப் குடித்தாலும் அது சளி மற்றும் இருமல், சத்து என இதுபோன்ற காரணங்களுக்காக தான் இருக்கிறது. இப்படி இருக்கும் பட்சத்தில் சளி மற்றும் இருமளுக்கான சிரப்பிலும் நிறைய வகைகள் உள்ளது. அதனால் இவ்வாறு நாம் நமது உடல் நலத்திற்காக எடுத்துக்கொள்ளும் ஒவ்வொரு சிரப் மற்றும் மாத்திரைகளின் பயன்கள் மற்றும் பக்க விளைவுகள் என்ன என்பதை பற்றி தான் நாம் தெரிந்து இருக்க வேண்டும். அதனால் இன்று Corex T சிரப்பின் பயன்கள் மற்றும் பக்க விளைவுகள் என்ன என்பதை இன்று தெரிந்துக்கொள்ளலாம் வாங்க..!
குறிப்பு: மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் எந்த மாத்திரையும் வாங்கி தானாக பயன்படுத்த கூடாது..!
Corex T சிரப் பயன்கள்:
- வறட்டு இருமல்
- சாதாரணமான சளி
- ஆஸ்துமா
- மூச்சுக்குழாய் அலர்ஜி
மேல் கூறியுள்ள அனைத்து பிரச்சனைகளுக்கும் Corex T சிரப் பயன்படும் விதமாக உள்ளது. மேலும் இந்த சிரப்பினை ஒவ்வொருவருக்கும் அவர் அவரின் வயதினை பொறுத்து தான் சரியான அளவில் மருத்துவரால் வழங்கப்படுகிறது.
இந்த சிரப்பினை தண்ணீருடன் மட்டுமே எடுத்துக்கொள்ள வேண்டும். அதற்கு மாறாக டீ, காபி மற்றும் ஜூஸுடன் எடுத்துக்கொள்ள கூடாது.
Tranexamic acid மாத்திரை எதற்காக பயன்படுத்தப்படுகிறது..
Corex T Syrup Side Effects in Tamil:
- மயக்கம்
- தூக்கம்
- சோர்வு
- குமட்டல்
- வாந்தி
- பசியிழப்பு
- தலைவலி
- வறண்ட வாய்
- மலச்சிக்கல்
- மங்களான பார்வை
- அதிகப்படியான இதயத்துடிப்பு
இத்தகைய பக்க விளைவுகள் அனைத்தும் Corex T சிரப்பிற்கான பக்க விளைவுகளாக இருந்தாலும் கூட இவை இல்லாமல் வேறு ஏதேனும் தோன்றினாலும் அதனை உடனே மருத்துவரிடம் கூற வேண்டும்.
யாருக்கு முன்னெச்சரிக்கை:
கர்ப்பிணி பெண்கள், தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்கள், கல்லீரல் மற்றும் சிறுநீரக பிரச்சனை உள்ளவர்கள் மற்றும் 18 வயதிற்கு கீழ் உள்ளவர்கள் என அனைவரும் முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.
மேலும் இத்தகைய சிரப் குடிப்பதில் முன்பே ஏதேனும் பக்க விளைவுகள் இருந்தாலும், தற்போது உள்ள உணவு முறை, உடலில் உள்ள பிரச்சனை என இவற்றை எல்லாம் கண்டிப்பாக மருத்துவரிடம் கூற வேண்டும்.
கேவிஸ்கான் சிரப் எதற்காக பயன்படுத்தப்படுகிறது தெரியுமா
இதுபோன்ற மருந்து மாத்திரைகளின் பயன்கள் மற்றும் பக்கவிளைவுகள் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | மருந்து |