Coriminic Syrup Uses in Tamil
மழைக்காலம் வந்தாலே சளி, இருமல் ஏற்படும். இதனை சரி செய்வதற்கு நாம் மருத்துவரை நாடி தான் செல்கின்றோம். மருத்துவரும் நம்முடைய உடல்நிலைக்கு ஏற்ற மருந்து, மாத்திரை, சிரப் போன்றவற்றை எழுதி தருகின்றனர். நாமும் இதனை குடித்து சளி இருமல் பிரச்சனையை சரி செய்து கொள்கிறோம்.
ஆனால் இதில் நன்மைகள் மட்டுமில்லை தீமைகளும் அடங்கியிருக்கிறது. அதனால் நீங்கள் சாப்பிடும் ஒவ்வொரு மாத்திரை, மருந்து, சிரப், ஊசி போன்றவற்றில் இருக்கும் நன்மை மற்றும் தீமைகளை அறிந்திருக்க வேண்டும். அந்த வகையில் இன்றைய பதிவில் Coriminic சிரப் நன்மைகள் மற்றும் தீமைகளை அறிந்திருக்க வேண்டும்.
குறிப்பு: மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் எந்த மாத்திரைமற்றும் ஊசி போன்றவற்றை தானாக வாங்கி பயன்படுத்த கூடாது..!
Coriminic Syrup Uses in Tamil:
இந்த சிரப் ஆனது கீழ் உள்ள பிரச்சனைகளுக்கு மருந்தாக கொடுக்கப்படுகிறது.
- நுரையீரல் தொற்று
- ஜலதோஷம்
- ஆஸ்துமா பிரச்சனை
- ஒவ்வாமை பிரச்சனை
போன்ற பிரச்சனைகளை சரி செய்வதற்கு மருந்தாக கொடுக்கப்படுகிறது.
Coriminic Syrup Side Effects:
- தலைவலி
- நடுக்கம்
- தசைப்பிடிப்பு
- மயக்கம்
- மலச்சிக்கல்
- தூக்கமின்மை
மேல் கூறப்பட்டுள்ள பக்க விளைவுகள் தொடர்ந்து ஏற்பட்டால் மருத்துவரின் ஆலோசனையை பெற வேண்டும், ஒருவேளை நீங்கள் வேறு ஏதேனும் பக்க விளைவுகளை சந்தித்தால் மருத்துவரை அணுகி ஆலோசனை பெற வேண்டும்.
Levipil மாத்திரை எதற்காக பயன்படுத்தப்படுகிறது
முன்னெச்சரிக்கை:
கர்ப்பமாக இருக்கும் பெண்கள் இந்த சிரப்பை மருத்துவர் ஆலோசனை இல்லாமல் அருந்த கூடாது.
தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்கள் இந்த சிரப்பை மருத்துவர் ஆலோசனை இல்லாமல் அருந்துவதை தவிர்க்க வேண்டும்.
இந்த சிரப்பை குடிப்பதால் மயக்க பிரச்சனை ஏற்படும், அதனால் அவ்வப்போது வாகனம் ஓட்டுவதை தவிர்க்க வேண்டும்.
நீங்கள் வேறு ஏதேனும் பிரச்சனைக்காக மருந்து, மாத்திரை எடுத்து கொண்டால் அதனை பற்றிய முழு விவரத்தையும் மருத்துவரிடம் தெரிவிக்க வேண்டும்.
மருந்தளவு:
மருத்துவர் கூறிய அளவில் தான் சிரப்பை எடுத்து கொள்ள வேண்டும், ஒருவேளை நீங்கள் சிரப்பை எடுத்து கொள்ள மறந்து விட்டால் அதனை மறுநேரம் சேர்த்து எடுத்து கொள்ள கூடாது. மருத்துவர் கூறிய அளவில் தான் எடுத்து கொள்ள வேண்டும்.
இதுபோன்ற மருந்து மாத்திரைகளின் பயன்கள் மற்றும் பக்கவிளைவுகள் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | மருந்து |