Cremaffin Syrup Side Effects
நம்முடைய முன்னோர்கள் வாழ்ந்த நாட்கள் வரையும் நோய், நொடி இல்லாமல் ஆரோக்கியமாக வாழ்ந்தார்கள். ஆனால் இன்றைய காலத்தில் வயிற்றில் இருக்கும் குழந்தைகளுக்கு கூட உடலில் பிரச்சனை இருக்கிறது என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள். இதனை சரி செய்வதற்கு மருந்து, மாத்திரைகள் எழுதி தருகிறார்கள். இதனை சாப்பிடுவதால் நம் உடலில் நன்மைகள் மட்டும் நடக்குமா என்று கேட்டால் நிச்சயமாக இல்லை. ஏனென்றால் இந்த மருந்து, மாத்திரைகளை சாப்பிடுவதால் நம்முடைய உடலில் தீமைகளும் ஏற்படுகிறது. அதனால் நீங்கள் சாப்பிடும் ஒவ்வொரு மாத்திரைகளின் நன்மைகள் மற்றும் தீமைகளை அறிந்திருக்கவேண்டும். அந்த வகையில் இன்றைய பதிவில் Cremaffin சிரப் பயன்கள் மற்றும் பக்க விளைவுகளை அறிந்து கொள்வோம் வாங்க..
குறிப்பு: மருத்துவரின் அறிவுரை இல்லாமல் எந்த மாத்திரையும் நீங்களாக பயன்படுத்த கூடாது..!
Cremaffin Syrup Uses in Tamil:
இந்த சிரப்பை மலசிக்கல் பிரச்சனைக்கு மருந்தாக கொடுக்கபடுகிறது.
மலமானது கழிக்கும் போது ஆசனவாயில் வலியில்லாமல் கழிப்பதற்கு பயனுள்ளதாக இருக்கிறது.
பக்க விளைவுகள்:
- குமட்டல் வாந்தி
- வயிற்றுப்போக்கு
- மயக்கம்
- தோல் அரிப்பு
- அடிவயிற்று வலி
- தசை பலவீனம்
மேல் கூறப்பட்டுள்ள பக்க விளைவுகள் தொடர்ந்து ஏற்பட்டால் மருத்துவரை அணுகி ஆலோசனை பெற வேண்டும். இந்த பக்க விளைவானது நபருக்கு நபர் மாறுபடும். அதனால் நீங்கள் வேறு ஏதேனும் பக்க விளைவுகளை சந்தித்தால் அதனை பற்றிய தகவலையும் வழங்க வேண்டும்.
முன்னெச்சரிக்கை:
கர்ப்பமாக இருக்கும் பெண்கள் மற்றும் தாய்மார்கள் கொடுக்கும் தாய்மார்கள் இந்த சிரப்பை மருத்துவர் ஆலோசனை இல்லாமல் எடுத்து கொள்ள கூடாது.
குடலில் ஏதும் பிரச்சனை இருப்பவர்களும் இந்த சிரப்பை மருத்துவர் ஆலோசனை இல்லாமல் எடுத்து கொள்ள கூடாது.
ஒவ்வாமை பிரச்சனை இருப்பவர்கள் இந்த சிரப்பை மருத்துவர் ஆலோசனை இல்லாமல் எடுத்து கொள்வதை தவிர்க்க வேண்டும்.
மேலும் நீங்கள் வேறு ஏதும் பிரச்சனைக்காக மருந்து, மாத்திரை எடுத்து கொண்டால் அதனை பற்றிய முழு தகவலை தெரிவிக்க வேண்டும்.
மருந்தளவு:
இந்த மாத்திரையை மருத்துவர் கூறிய அளவில் தான் எடுத்து கொள்ள வேண்டும். ஒருவேளை நீங்கள் மாத்திரையை எடுத்து கொள்ள மறந்து விட்டால் அதனை மறுநேரம் சேர்த்து எடுத்து கொள்ள கூடாது.
Cipmox 500 மாத்திரையை யாரெல்லாம் பயன்படுத்தலாம் தெரியுமா
இதுபோன்ற மருந்து மாத்திரைகளின் பயன்கள் மற்றும் பக்கவிளைவுகள் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | மருந்து |