Cyclopam Tablet Uses Tamil
நண்பர்களே வணக்கம்.! நம் உடலில் ஏதேனும் உபாதைகள் வந்தால் உடனே மருந்து மாத்திரை எடுத்துக்கொள்வோம்..! ஆனால் அந்த மாத்திரை எதற்காக பயன்படுத்துகிறோம். அந்த மாத்திரை எவ்வளவு நல்லது எந்த அளவிற்கு எடுத்துக்கொள்வது என்று அதிகளவு தெரியாது.
எந்த மாத்திரை மருத்துவர் எழுதி கொடுத்தாலும் அதனை மெடிக்கல் ஷாப்பில் வாங்கி சாப்பிடுவது மட்டுமே நமக்கு தெரியும். ஆனால் இனி எந்த மாத்திரை வாங்கினாலும் அதனை பற்றி தெரிந்துகொள்ள நிறைய வழிகள் உள்ளது. அந்த வகையில் இன்று உங்களுக்கு Cyclopam மாத்திரையின் பயன்கள் மற்றும் பக்க விளைவுகளை பற்றி தெரிந்துகொள்வோம் வாங்க.
சைக்ளோபம் மாத்திரையின் பயன்கள்:
பெண்கள் பெருபாலும் மாதத்தில் 2 நாட்கள் கடும் வயிற்றுவலியை அனுபவிப்பார்கள் அப்போது இந்த மாத்திரையை மருத்துவர்கள் பரிந்துரை செய்கிறார்கள். மேலும் அடிவயிறு வலி, மாதவிடாய் காலங்களில் முன்பும் பின்பும் அடிவயிறு வலிக்கும் காலங்களில் வலி உணர்வை தடுக்கவும் இந்த மாத்திரையை சாப்பிட சொல்கிறார்கள். மேலும் வயிற்றில் ஏற்படும் பிடிப்புகள் மற்றும் வலியைப் போக்க பயன்படுகிறது.
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
அசித்ரோமைசின் மாத்திரை பயன்கள்
Cyclopam Tablet Side Effects in Tamil:
வயிற்றுப்போக்கு, வீக்கம், தலைவலி, மயக்கம் மற்றும் தூக்கம், காதுகளில் சத்தம் அல்லது சத்தம், மங்கலான பார்வை, எடை அதிகரிப்பு, மூச்சு திணறல், நாக்கு, முகம், உதடுகள், கைகள், கண் இமைகள் மற்றும் கால்களின் வீக்கம், அதிவேகமான இதய துடிப்பு, மூச்சு இரைப்பு மஞ்சள் நிற கண்கள் அல்லது தோல், கடினமான அல்லது வலிமிகுந்த சிறுநீர் கழித்தல், குமட்டல் மற்றும் வாந்தி, வறண்ட வாய், நரம்புத் தளர்ச்சி, தோல் வெடிப்பு போன்ற பக்க விளைவுகள் ஏற்படும்.
இது அனைத்துமே மாத்திரையில் உள்ள பொருட்களின் அளவுகளை பொறுத்து மாறுபடும். அதாவது உங்களை உடலில் ஏதுனும் சக்தி குறைவு ஏற்படலாம் அது உங்களுக்கு பதிப்பாகவும் மாறும். மேல் குறிப்பிட்டுள்ள அறிகுறிகள் உங்கள் உடலில் ஏற்படலால் உடனே மருத்துவமனையை அணுகி சரியான அளவுகளை எடுத்துக்கொள்ளவும்.
இதையும் தெரிந்துகொள்ளுங்கள் 👉👉 ஸ்டீராய்டு மாத்திரைகள் பக்க விளைவுகள்
இது போன்ற மருந்து சார்ந்த பதிவுகளை படிக்க இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்👉 | மருந்து |