Cyra d மாத்திரையின் பயன்கள் மற்றும் பக்க விளைவுகள்

Advertisement

Cyra d Tablet Uses in Tamil

மனிதனாக பிறந்த அனைவருமே உடல்நல குறைபாடு ஏற்பட்டால் உடனே எடுத்து கொள்வது மாத்திரை தான். இந்த மாத்திரையை நாம் எடுத்து கொண்டதும் சரியாகிவிட்டால் நல்ல மாத்திரை என்று கூறுகிறோம். அதுவே மாத்திரையை தொடர்ந்து இரண்டு நாட்களுக்கு தொடர்ந்து போட்டால் தான் உடல்நல பிரச்சனை சரியாகும். இவை முக்கியமாக மருத்துவர் எழுதி கொடுத்த அளவினை பொறுத்து நம் உடல்நிலை சரியாகுவதற்கு நேரம் எடுத்து கொள்ளும். எப்படியாக இருந்தாலும் நாம் சாப்பிடும் மாத்திரைகளில் நன்மைகளும் உள்ளன, தீமைகளும் உள்ளன. அதனால் இந்த பதிவில் cyra d மாத்திரையின் நன்மை மற்றும் தீமை இரண்டுமே அறிந்து கொள்வோம் வாங்க..

குறிப்பு: மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் எந்த மாத்திரையும் வாங்கி தானாக பயன்படுத்த கூடாது..!

Cyra d Tablet Uses in Tamil:

cyra d tablet side effects in tamil

Cyra d மாத்திரையானது வயிறு மற்றும் குடலின் அமிலம் தொடர்பான நோய்கள், பெப்டிக் அல்சர், வயிற்று புண் போன்றவைகளை சரி செய்வதற்கு மருந்தாக பயன்படுத்தப்படுகிறது.

மாத்திரையின் பக்க விளைவுகள்:

  • குமட்டல்
  • வாந்தி
  • வயிற்றுவலி
  • தொண்டை வலி
  • தலைவலி
  • வாய்வு

இந்த மாத்திரையை நீங்கள் எடுத்துக்கொண்ட பிறகு மேலே சொல்லப்பட்டுள்ள பக்க விளைவுகள் இல்லாமல் வேறு ஏதேனும் பக்க விளைவுகள் உங்களுக்கு தோன்றினால் அதனை மருத்துவரிடம் தெரிவிக்க வேண்டும்.

Vitagreat மாத்திரை பயன்கள் மற்றும் பக்க விளைவுகள்

மாத்திரையை எப்படி எடுத்து கொள்ள வேண்டும்:

நீங்கள் இந்த மாத்திரையை தண்ணீரில் தான் விழுங்க வேண்டும். பால், காபி, டீ போன்றவற்றில் விழுங்க கூடாது.

மருத்துவர் கூறிய அளவில் தான் மாத்திரையை சாப்பிட வேண்டும். ஒருவேளை நீங்கள் மாத்திரையை எடுத்து கொள்ள மறந்து விட்டால் அதனை மறுநேரம் சேர்த்து சாப்பிட கூடாது.

மாத்திரையை சாப்பிடுவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பு சாப்பிட வேண்டும்.

முன்னெச்சரிக்கை:

கர்ப்பிணி பெண்கள் மற்றும் தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்கள் இந்த மாத்திரையை எடுத்து கொள்வதற்கு முன் மருத்துவரை அணுக வேண்டும்.

இந்த மாத்திரை சாப்பிடும் போது மது அருந்த கூடாது, ஏனென்றால் வயிற்றில் அதிகப்படியான அமிலத்தை உருவாக்கும்.

இந்த மாத்திரையானது உங்களுக்கு மயக்கம் அல்லது தூக்கத்தை  ஏற்படுத்தினால் அவ்வப்போது வாகனம் ஓட்டுவதை தவிர்க்க வேண்டும்.

எலும்பு சம்மந்தப்பட்ட பிரச்சனைகளுக்கு மாத்திரை மருந்து எடுத்து கொண்டால் அதனை பற்றிய முழு தகவலையும் மருத்துவரிடம் தெரிவிக்க வேண்டும்.

கல்லீரல், நுரையீரல் அல்லது வேறு ஏதேனும் பிரச்சனைக்கு மாத்திரை, மருந்து எடுத்து கொண்டால் அதனை பற்றிய முழு தகவலையும் மருத்துவரிடம் தெரிவிக்க வேண்டும்.

Chymowok Forte மாத்திரையின் பயன்கள் மற்றும் பக்க விளைவுகள்

இதுபோன்ற மருந்து மாத்திரைகளின் பயன்கள் மற்றும் பக்கவிளைவுகள் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> மருந்து
Advertisement