டி புரோட்டீன் பவுடரின் நன்மைகள் மற்றும் பக்கவிளைவுகள்..!

Advertisement

D Protein Powder Benefits in Tamil | புரோட்டீன் பவுடர் பயன்கள்

நாம் அன்றாடம் பயன்படுத்தும் பொருட்களில் மருந்து ஒன்றாகி வருகிறது. மூன்று வேலை உணவு உண்பது போல மருந்தினையும் உட்கொண்டு வருகிறோம். மருந்து என்பது அனைவரும் உட்கொள்ள வேண்டிய சூழ்நிலை இருந்தாலும், அந்த மருந்தினை உட்கொள்ளவதற்கு முன் அந்த மருந்தின் பயன்கள் என்ன.? அம்மருந்தினால் ஏதேனும் பக்கவிளைவுகள் ஏற்படுமா.? என்பதை அறிந்து அதன் பிறகு உட்கொள்வது மிகவும் அவசியம். ஆகையால், நீங்கள் D protein Powder உட்கொள்பவராக இருந்தால் அவற்றின் பயன்கள் மற்றும் பக்கவிளைவுகள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.

பொதுவாக, ப்ரோட்டீன் சத்து குறைவாக இருந்தால் அதிக புரோட்டீன் நிறைந்த உணவுகளை எடுத்து கொள்வோம். இன்னும் சிலர் ப்ரோட்டீன் பவுடர்களை வாங்கி வந்து பாலில் கலந்து குடிப்பார்கள். அதேபோல், தான் இந்த D Protein Powder -யையும் பயன்படுத்தி வருகிறார்கள். ஆகையால், இந்த ப்ரோட்டீன் பவுடரின் பயன்கள், நன்மைகள் மற்றும் பக்கவிளைவுகள் பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க.

குறிப்பு: மருத்துவரின் அறிவுரை இல்லாமல் எந்த மாத்திரையும் தானாக பயன்படுத்த கூடாது..!

D Protein Powder Benefits and Side Effects in Tamil:

 d protein powder benefits in tamil

டி-புரோட்டின் பவுடர் என்பது நீரிழிவு நோயாளிகள் மற்றும் நீரிழிவு நோய்க்கு முந்தைய நிலையில் இருக்கும் நபர்களுக்கு புரதம், தாதுக்கள் மற்றும் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை அளிக்கக்கூடிய வைட்டமின்கள் நிறைந்த  ஊட்டச்சத்து பொருளாகும். இந்த மருந்து பெரும்பாலும் நீரிழிவு நோய்க்கும், உடல் எடையை அதிகரிப்பதற்கும் பயன்படுத்தப்படுகிறது.

நன்மைகள்:

  • உடலுக்கு தேவையான வைட்டமின்கள் மற்றும் தாதுக்களை அளிக்கிறது.
  • உடலின் வலிமை மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்கிறது.
  • ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தை குறைக்கும் ஆக்ஸிஜனேற்றங்களைக் கொண்டுள்ளது.
  • நாள் முழுவதும் உடலை ஆற்றலுடன் வைத்து கொள்கிறது.
  • உடல் எடையை அதிகரிக்க செய்கிறது.
  • குளுக்கோஸ் வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்த உதவுகிறது.
  • நார்ச்சத்து நிறைதுள்ளதால் மலச்சிக்கல் மற்றும் செரிமான பிரச்சனையை நீக்குகிறது.

 

பக்க விளைவுகள்:

டி-புரோட்டின் பவுடர் சிலருக்கு பின்வரும் பக்க விளைவுகளை ஏற்படுத்தலாம்.

  • குமட்டல்
  • தலைசுற்றல்
  • பசியின்மை
  • ஒவ்வாமை
  • வாய்ப்பு
  • அடிவயிற்று பிடிப்புகள்
  • நெஞ்செரிச்சல்
  • வயிற்றுப்போக்கு
  • வீக்கம்

எப்படி பயன்படுத்த வேண்டும்.?

டி-புரோட்டின் பவுடரை வெதுவெதுப்பான பாலில் கலந்து உட்கொள்ளுதல் வேண்டும். மேலும், மருந்து கடினமாவதைத் தவிர்க்க காற்று புகாத டப்பாவில் சேமித்து வைக்க வேண்டும். மேலும், குளிர்ந்த மற்றும் உலர்ந்த இடத்தில் சேமித்து  வைப்பது அவசியம்.

நார்ஃப்ளாக்ஸ் 400 மிகி மாத்திரையின் பயன்கள் மற்றும் பக்க விளைவுகள்

இதுபோன்ற மருந்து மாத்திரைகளின் பயன்கள் மற்றும் பக்கவிளைவுகள் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> மருந்து
Advertisement