DART மாத்திரை பயன்கள் மற்றும் பக்கவிளைவுகள்
இன்றைய அவசரமான வாழ்க்கை சூழலில் நாம் அனைவரும் நமது உணவு முதல் மாத்திரை வரை ஆன்லைன் மூலம் பெற்று உண்ணுகிறோம். உணவே மருந்தாக இருந்த காலம் போய் இன்று மாத்திரை இல்லாமல் உயிர் இல்லை என்ற நிலை வந்து விட்டது. அதற்கு சுவையான உணவை தேர்வு செய்வதில் நாம் காட்டும் ஆர்வத்தில் கொஞ்சம் கூட நமது உடல் ஆரோக்கியத்திற்கான உணவு மற்றும் மருந்துகளை தேர்வு செய்வதற்கு ஒதுக்குவது இல்லை. நாம் எடுத்து கொள்ளும் மாத்திரையின் பயன் என்ன அதனால் நமக்கு எந்த வகையான பயன்கள் உள்ளது என ஒரு மாத்திரையை பயன்படுத்தும் முன்னர் அந்த மாத்திரையே பற்றி தெரிந்து கொள்வது மிக முக்கியம். அந்த வகையில் இன்று DART மாத்திரை பற்றி தெரிந்து கொள்வோம்.
குறிப்பு: மருத்துவர் பரிந்துரை இல்லாமல் எந்தவொரு மாத்திரையும் தானாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.
Dart Tablet Uses in tamil :
டார்ட் டேப்லெட் என்பது ஜக்கட் ஃபார்மா தயாரித்த டேப்லெட் ஆகும். டார்ட் மாத்திரை வலி நிவாரணி, ஸ்டெராய்டல் அல்லாத அழற்சி எதிர்ப்பு மருந்துகள் ஆகும். DART மாத்திரை காஃபின், பாராசிட்டமால் மற்றும் ப்ரோபிபெனசோன் ஆகியவற்றை கொண்டு உருவாக்கப்பட்டது. இந்த காஃபின், பாராசிட்டமால் மற்றும் ப்ரோபிபெனசேன் மாத்திரைகள் முறையே சிஎன்எஸ் தூண்டுதல் (மத்திய நரம்பு மண்டலத்தை ஊக்குவிக்க) வலி நிவாரணிகள் மற்றும் ஆண்டிபிரைடிக்ஸ் ஆகிய மருந்துகளின் கலவையாகும்.
pheniramine maleate சிரப் பயன்கள் மற்றும் பக்க விளைவுகள்
டார்ட் மாத்திரை எப்போது பரிந்துரைக்கப்படுகிறது?
- முன்கூட்டிய பிறந்த குழந்தைகளில் மூச்சுத்திணறல்
- கீல்வாதம்
- முதுகு வலி
- உடல்வலி
- காய்ச்சல்
- ஒற்றை தலைவலி
- பல் வலி
டார்ட் மாத்திரையின் பக்க விளைவுகள் என்ன?
- ஒவ்வாமை பிரச்சனை
- குமட்டல்
- வயிற்று வலி
- செரிமான பிரச்சனை
- மனசோர்வு
புளுக்கோனசோல் மாத்திரை பயன்கள்
முன்னெச்சரிக்கை:
DART மாத்திரை பொதுவாக கர்ப்ப காலத்தில் பயன்படுத்த பரிந்துரைக்கப்படுவதில்லை. ஆஸ்துமா, எலும்பு மஜ்ஜை செயலிழப்பு, கல்லீரல் அல்லது சிறுநீரக நோய் உள்ள நோயாளிகள் DART மாத்திரையே எச்சரிக்கையுடன் பயன்படுத்தப்பட வேண்டும். Dart மாத்திரையை எடுத்துக்கொள்வதற்கு முன் உங்கள் மருத்துவரை அணுகவும்.
DART எடுத்துக் கொள்ளும்போது புகைபிடித்தல் மற்றும் மது அருந்துவதைத் தவிர்க்கவும்.
இந்த பதிவு உங்களுக்கான நோய் பரிந்துரைக்கும், பக்க விளைவுகளின் முழுமையான பட்டியலும் அல்ல, Dart மாத்திரை பயன்படுத்தும் போது ஏதேனும் பாதகமான எதிர்வினை ஏற்பட்டால் உங்கள் மருத்துவரிடம் தெரிவிக்கவும்.
இதுபோன்ற மருந்து மாத்திரைகளின் பயன்கள் மற்றும் பக்கவிளைவுகள் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | மருந்து |